31. மல்லிகை மயக்கம்.

 

மல்லிகை மயக்கம்.

திஒளி மயங்கி கதிரிடை தொலைய,
புதிய இதழ் விரித்த புதுமலர்ச் சோலை.
புதிதான சுகந்தம் புது உணர்வு வேளை.
அதிகாலை வேளை, புது நாளின் காலை.

ச்சை வான வெண்ணிற நட்சத்திரங்கள்,
இச்சையுடன் பிறந்தகம் நழுவிய சித்திரங்கள்,
இசைந்து  நிலமகள் அணைத்த தேவதைகள்,
வசந்த வாரிசுகள், வசீகர மல்லிகைகள்.

ல்லிகைப் பந்தலோ! முத்துமணி மேகமோ!
இல்லற முன்றலில் மயக்கும் வசந்தமோ!
இல்லறச் சோடியின் மன்மத வில்வளைவோ!
கொள்ளை கொள்ளும் மதுர சுகந்தமோ!

ல்லிகை மழை மன்மதக் கணைகள்,
வெண்பனித் தூறலாய் தரணிமேல் கலைகள்.
வெள்ளைக் கம்பளம் பூமகள் பந்தம்.
அள்ளும் கைகளில் மென்மை சொந்தம்.

பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் மலர்களைக்
கோர்த்து மாலை தொடுக்கும் கோதையர்,
ஈர்த்து மயங்கி கூந்திலில் இணைப்பார்.
சேர்க்கும் குழலில் இணையும் சுகந்தம்.

கூந்தலில் முகம் புதைத்துக் கூடும் காளையைக்
காந்தமாய் இழுக்கும் மன்மத மலரே!
காந்த மின்சாரம் இளமொட்டு அழகிலா!
ஏந்துமுன் மேனியின் மெத்தை இதழிலா!

தொன்மையாம் உன் சுய சுகந்தமா!
வெண்மையாம் உன் வேடமில்லா நிறமா!
என்னையும் மயக்கும் மல்லிகை மலரே!
என்ன விந்தையுன் தூய்மைச் சுகந்தம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(19-6 2001 ல் தமிழ் அலை – கவிதை பாடுவோமிலும்,
10-2-2003ல் இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.)

                            
          

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ssakthithasan
  ஆக 20, 2011 @ 11:21:00

  அன்பின் சகோதரி வேதா,
  மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்று வரிகளைத் தந்த கவியரசரின் பாணியில் கவியரசியாகி அற்புதமான பாவளித்துள்ளீர்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 2. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  அக் 15, 2011 @ 09:21:38

  மிகவும் அற்புதமான வரிகள்!!

  வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   அக் 15, 2011 @ 09:43:12

   உடனும் வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்ச்சியும் நன்றியும். இளமைக் காலத்தில் மல்லிகைப் பந்தலின் கீழ் கழித்த நாட்கள், காதல் அனைத்தும் நினைவு வரும். மணம் கூந்தலில் வருவதற்காகவே தலையில் மாலை கட்டி வாழ்ந்தேன். நன்றி…நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: