32. சூரியதேவனே!…..

 

 

 சூரியதேவனே!…..

 

பாரிய பூமி வீரியம் பெற
பேரிருள் நீங்கப் பொன் கதிர்த்
தூரிகையோடு வரும் சூரியதேவனே!
நேரில் அதிக முன்னைக் காணோமே!
வெண்பனி நிறைந்து அதையள்ளி அழைந்து
இன்புறுகிறார் குழந்தைகள் மேற்கில் இங்கே!
துன்பம் தான் பனியால் நடைமுறைவாழ்வில்
அன்றாடம் அவைகள் சொல்லில் அடங்காது.

 

சூரியதேவனே! பனிக் காலத்திலுன் வருகையால்
உருகும் பனியில் வழுக்கி விழுந்திங்கு
அருமை உயிரை விட்டவரும் உளர்.
ஒருபாதியிலுனக்குப் பொங்கிய பால்சோறு!
பெரும் நன்றியாய் ஆரவார அர்ப்பணிப்பு!
மறுபாதியில் உன் தரிசனமற்ற துன்பம்.
கொழுத்தும் வெயிலில் நீரற்ற துன்பமென
பலம் பலவீனமிகு காரிய, வீரியதேவனுக்கு நன்றியே.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-01-2010

 

                                          

 

 

 
 

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ssakthithasan
  ஆக 20, 2011 @ 11:17:55

  அன்பின் சகோதரி வேதா,
  சூரியனின் பெருமையை அற்புதமாய்க் கூறும் வரிகளுடன் கூடிய அருமையான கவிதை
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 20, 2011 @ 13:31:49

   அன்பின் சகோதரனே! உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிகந்த நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: