172. கருத்திடுதல்.

 

 

கருத்திடுதல்.

 

எழுதிய ஆக்கத் திறமை உணர்ந்து
தன் கருத்திடுதல் பெரும் ஊக்குவிப்பு.
வியப்பு, மகிழ்வு, விசனம், ஆச்சரியமாய்
கருத்திடும் வரிகளுள் வாங்குதல் கலை.

தன்னுணர்வைத் துணிந்து வெளிப்படையாய்
விமரிசனமாய் வடித்தலிலகு செயலன்று.
புகழ்ந்து வரைவோர் நவரசம் பொங்க
ஆகா ஓகோவென அருமையாய் வடிக்கிறார்.

குறைகளைச் சுட்டுதலொரு குணக்கேடென்று
நிறைகளை எழுதி நிழலுக்குள் மறைகிறார்.
ஆக்கபூர்வ கருத்தே விமரிசனம். புகழ்ச்சியும்
வாழ்த்தலும் பொறுப்புடை விமரிசனமாகாது!

கருத்தூட்டம் கொடுத்து கருத்தூட்டம் பெறுதல்
விருப்பான, பொறுப்பான பரஸ்பர புரிந்துணர்வு.
கருத்திற் கொள்வோர் எத்தனை பேர்!
இங்கும் பெரும் சுயநலமே! சுயநலமே!

உண்மையின் பிழிவாக உள்ளதை எழுத
என்றும் மனம் போராடும் பாரமாகும்.
நெற்றிக் கண்ணை திறந்தாலும் சற்றே
மன்னியுங்கள்! கூறவேண்டியதைக் கூறுகிறேன்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-3-2011.

In pathivukal.com    (link)

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=97:2011-04-01-21-40-50&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

samme heading——https://kovaikkavi.wordpress.com/2014/12/19/350-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

 

                              
 

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மதிசுதா
  மார்ச் 09, 2011 @ 23:52:08

  ஃஃஃஃஃகுறைகளைச் சுட்டுதல் ஒரு குணக்கேடென்று
  நிறைகளை எழுதி நிழலுக்குள் மறைகிறார்.ஃஃஃஃஃ

  நியமான உண்மைங்க… வளர்வதற்கு குறைகளும் தீர்வகளும் தான் அடிகோலிகள்..

  .
  ம.தி.சுதா
  உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 10, 2011 @ 08:40:21

   பலர் ஒப்புக்கு ஆகா ஓகோ என்று விமரிசனம் எழுதுகிறார்கள் அதனால் தான் வந்த உணர்வு. உங்கள் புராதனக் கோயில் பற்றி வாசித்தேன் தாய்லாந்து பயணக் கட்டுரை வலையில் தொடரப் போகிறேன் அங்கும் கோயில்களின் பெயர் டபிள்யூ – ஏ- ரி தான் வற் தான்.
   உங்கள் வலையில் நிற்கவும், கருத்திடவும் முடியவில்லை. முதலில “உய்!” எனும் சிக்னலும் பின்னர் மூசை அசைக்கவே முடியவில்லை.. எங்கு பிழை என்று தெரியவில்லை. பயத்தில் எனது நெற்ஐ அழுத்தி மூடிவிட்டு புதிதாகத் திறந்து எழுதுகிறேன். கருத்திற்கு நன்றி சகோதரரே!

   மறுமொழி

 2. pirabuwin
  மார்ச் 10, 2011 @ 06:11:09

  “நெற்றிக் கண்ணை திறந்தாலும் சற்றே
  மன்னியுங்கள்! கூறவேண்டியதைக் கூறுகிறேன்”

  நெத்தியடி சகோதரி.

  மறுமொழி

 3. Dhavappudhalvan
  மார்ச் 11, 2011 @ 06:26:41

  எல்லோருமே தங்கள் செயல்களை பலர் பாரட்ட வேண்டுமென்றே நினைக்கின்றனர். மிக குறைந்த சிலர் இருக்கலாம் உம்மைப் போல, (இதில் எம்மையும் சேர்த்து பதிப்பதென்பது பண்புடையதன்று). எப்பொழுதுமே காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு தான். “தன்னுணர்வைத் துணிந்து வெளிப்படையாய்
  விமரிசனமாய் வடித்தல் இலகு செயலன்று.” இதை தாங்களே பதித்திருக்கிறீர் இதில். கழுகு வானத்தில் மிக உயரத்தில் பறக்கிறது. சிட்டுகுருவி குறைந்த உயரத்தில் தான் பறக்கிறது. அதற்காக கழுகைப் போல் உன்னால் பறக்கமுடியவில்லையே என சிட்டுகுருவியை கேலி செய்தல் தகுமா? விமர்ச்சனம் என்பது படைப்பாளரை ஊக்குவிக்கும் விதமாகவும், அதே சமயம் அவர் படைப்பிலே உள்ள குறைகளை திருத்திக் கொள்ளும் விதமாகவும் கருத்துக்கள் அமைதல் சிறப்பாகும்.

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 09, 2018 @ 11:06:21

  2011 commwnts:-

  பட்டுக்கோட்டை பாலு:- சகோதரி வேதாலங்காவுக்கு ..இனிய வணக்கம் .. !
  கவிதையாளர்கள் ..எழுதும் கவிதைகளுக்கு …விமர்சனம் செய்வது என்பது என்னைப் போன்றவர்களுக்கு மிகக் கடினமே ..! திரு சக்தி தாசன் ஐயா…திரு இராஜ தியாகராஜன் போன்றவர்களின் கவிதைகளை ..படித்து விட்டு …விமர்சனம் எழுத தகுதி எனக்கு இல்லை என ..தவிர்த்தது உண்டு ..இப்படி பல கவிஞர்களின் கவிதைகளை சொல்லலாம் …!
  என்ன சொல்ல வருகிறேன் என்றால் ..இலக்கணம் படித்தவர்கள் .. கவிதை மரபு தெரிந்தவர்கள் ..எழுதும் .விமர்சனம் ஏற்புடையதாக இருக்கும் .. மற்றவர்களின் விமர்சனம் …எழுதியவரை சந்தோசப் படுத்துவதற்கு மட்டுமே இருக்கும் ….!
  எனக்குத் தெரியும் ..நான் எழுதுவது கவிதையே இல்லை என்று .. ஆனால் மற்றவர்கள் பாராட்டு…ஆகா ..ஓகோ என்று இருக்கும் …:-)இருப்பினும் என் எழுத்துக்களையும் விமர்சனம் செய்கிறார்கள் என்ற சந்தோசம் ..மனசுக்கு 🙂
  வாழ்க தமிழ் ..வாழ்க வளமுடன் ..!.
  2011

  மன்னை செந்தில் :–குறைகளை சுட்டுதல்..தவறன்று சுடுதல் வலிக்கும்!
  உண்மையை சொல்வதென்றால்.. நட்புகளின் பாராட்டால்
  இலக்கணமே அறியாத நானும் அரைகுறையாய் கவிதைகள் எழுதுகிறேன். எழுத்துபிழைகளை கூட சகோதரி தனியாய் சுட்டி எனை திருத்தியிருக்கிறார்கள்.
  உண்மையாகவே உங்களின் அந்த பாங்கு மறக்க இயலாத பழக்கமாயிற்று! விமர்சனம் வேண்டா எழுத்துகள் வெளி தேடா கிணற்று தவளைகள்!! வாழ்த்துகளும் விமர்சனமும் வளர வைக்கும்!! நன்றி அம்மா

  Vetha Langathilakam :- எல்லா கருத்துகளும் பார்க்கிறேன், கருத்துகளை வரவேற்கிறேன், நன்றி எழுதுங்கள்…எழுதுங்கள்…..வாழ்த்துகள்!…..

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 09, 2018 @ 11:07:38

  Sujatha Anton :- எழுதிய ஆக்கத் திறமை உணர்ந்து தன் கருத்திடுதல் பெரும் ஊக்குவிப்பு.வியப்பு, மகிழ்வு, விசனம், ஆச்சரியமாய்கருத்திடும் வரிகளை உள் வாங்குதல் கலை.

  ””ஓருவர் விரும்பிக்கொடுப்பார் இல்லை விரும்பாமலும் கொடுப்பார் கருத்துக்களை ஆழமாக வாசித்து விமர்சிப்பது மிகவும் சிறந்த்து
  2012

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 22, 2019 @ 11:29:23

  Srikandarajah :- கங்கைமகன் வணக்கம். கருத்திடுதல் என்பது முகந்தெரியாதவர்களின் புன்னகை. வஞ்சகம் இல்லாத வாழ்த்துரை. சமூக நிலையில் சமநிலைபேணும் சக்கரவர்த்திகள். உங்கள் கருது்துக்கள் விமர்சனம் செய்பவன் படிக்கவேண்டிய வினாவிடை. வாழ்த்துக்கள்.
  2011
  Sakthi Sakthithasan :–அன்பின் வேதா,
  அருமையான கருத்தை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  அன்புடன்…சக்தி

  Gowry Nesan :- எழுத்தை மட்டும் பார்த்து விமர்சிக்கின்ற நேர்மையான விமர்சகர்களால் கூறப்படும் கருத்துக்கள் ஒரு படைப்பாளியை மேலும் வளர்க்கின்றன. ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  நன்றி.
  2011

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: