3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து)- 2

எனது பயண வரிசைகளில் இது மூன்றாவது பயணமாக… 
தாய்லாந்துப் பயணம் – 2

(2008 ஆவணி 30 லிருந்து புரட்டாதி 12 வரை.)

வாழ்வு பரபரப்பு நிறைந்தது. ஓயாத ஓட்டமும், சவால்களுடனும் கூடியதாயினும் இடையிடையே வரும் இன்பங்கள், சூழல் மாறிய சிந்தனைகள், அனுபவக் காசுகளாக மனதிற்குப் பலம் தருகிறது.

யந்திரத்திற்கு எண்ணெய் மாற்றி, துடைத்து, இடைவேளை கொடுப்பது போல வாழ்வில் பயணங்களும், அதன் இனிய அனுபவங்களும் மன அமைதி, ஓய்வு, மகிழ்வு என மிக மிகப் பயன் தருகிறது.                                    

இந்த வகையில் இது எமக்குத் தேவையென எம் குடும்பத்தினர் உணர்ந்த போது,’ ‘ நான் அண்ணாவிற்கு உதவுகிறேன் நீங்கள் வெளிக்கிடுங்கள்! ” என்று மகள் கை கொடுத்தாள்.

பயணம் சுற்றுலாவாகவும், மகனின் வியாபாரத்திற்கு உதவியாகப் பொருட்களும்  கொள்வனவு செய்யலாம் என்று 2008 ஆவணி 30 ல் 12 நாட்கள் விடுமுறையில் சுற்றுலாவுடன், வியாபாரம் என்று தாய்லாந்தைத் தெரிவு செய்தோம்.

அந்த நீண்ட தூரப் பயணம் எமது உடல் நிலைகளுக்கு ஒத்து வருமா, எல்லாம் சரியாக அமையுமாவென்று பீதிதான் முதலில் மேலோங்கியது. காரணம் சிங்கப்பூர், இத்தாலி போன்ற உஷ்ண நாடுகளில் என் கணவர் பட்ட அவதிகள் தான் எமக்கு நினைவுக்கு வந்தன. ஆயினும் மெல்ல மெல்ல பயண ஏற்பாடுகளைச் செய்தோம்.

பாங்கொக் பயணவாசிகள் ஈரல் வியாதி சம்பந்தமான தடுப்பூசி போடவேண்டும் என்ற வைத்திய ஆலோசனையின் பிரகாரம் இரண்டு விதமான தடுப்பூசிகள் போட்டோம். அத்தாட்சிகளையும் சேகரித்தோம்.

தாய்லாந்து விபரங்களைக் கணனியில் சேகரித்தோம். அங்கு போனவுடன அவதிப்படாது தங்கிட வியாபார வட்டாரமான ‘பட்டுனாம்’ (Paratunam) ல் 2 நாட்கள் தங்க ஒரு வாடிவீட்டைத் தெரிவு செய்து உறுதிப்படுத்தினோம்.                                                            

அமைதியற்றுக் குளம்பிய மனசு,  பயண ஆயத்தங்கள் ஒவ்வொன்றும் உறுதிப்பட உறுதிப்பட, அமைதியாகி பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மனம் மகிழ்வை எட்டியது. கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது.

மகளும் 29ம் திகதி காலை இலண்டனிலிருந்து டென்மார்க் வந்து சேர்ந்தார்.                                                                   

 30ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பேருந்திலே உருட்டும் பயணப் பொதி, உணவுப் பொதியுடன் பயணம் மகிழ்வுடன் ஆரம்பித்தது.                                             

காலை ஒன்பது நாற்பத்தைந்திற்கு ஓகுஸிலிருந்து தொடருந்தில் தலைநகர் கொப்பென்கேகன் ‘காஸ்றுப்’ (Kastrup) விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும். மூன்று மணிநேரப் பயணம்.                                                  

தொடருந்தில் இருக்கைகள் பதிவு செய்ததால் ஆறுதல், அமைதி, ஆனந்தமாகப் பயணித்தோம்.

                              

(Aarhus railway station entranc.- intercity train. and aarhus platform.)

இதற்கு முன்பு மகிழுந்தில் கடவைப் படகில் பயணித்திருந்தோம். இதுவே ஸ்ரோவ பெல்ட் பாலத்தினூடாக தொடருந்தில் முதற் பயணம். ஸ்ரோவ பெல்ட்டில் போகும் போது, சுற்றிவர கடல் நீராக, நல்ல ஒரு புதிய மிக அழகிய காட்சியாக இருந்தது.

   

(டென்மார்க்கில் யூலண்ட் நாமிருக்கும் தீபகற்பம் யேர்மனியுடன் நிலத்தொடர்பு கொண்டது. இங்கிருந்து தலைநகருக்குச் செல்வது குறிப்பிட்ட விமான நிலையம் செல்ல. இந்தப் பாதையை வெள்ளை அடையாளமுடன் பார்க்கிறீர்கள் டென்மார்க் படத்தில்.)

தாய்லாந்து இப்படியும் இருக்குமோ என்ற கேள்வியையும் தந்தது. பேசி மகிழ்ந்த, காட்சிகள் பார்த்த கணங்கள் போக, கணவர் பத்திரிகை வாசிக்க, நான் இது வரை வாசிக்கச் சந்தர்ப்பம் ஏற்படாத புத்தகமாக, சாதனையாளன், சகோதரன் எம்.பி. பரமேசின் ‘ என் இனிய பயணங்களில்…’ என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். பசி எடுத்தபோது நாம் கொண்டு சென்ற உணவையும் உண்டு மகிழ்ந்தோம்.

சுமார் ஒரு மணிக்கு காஸ்றுப் விமான நிலையத்தையடைந்தோம்.
            
மேலும்  பயணிப்போம்……

 

வேதா.இலங்காதிலகம்.
                                
ஓகுஸ், டென்மார்க்.
11-10-2008.

In anthimaalai  second ankam.   http://anthimaalai.blogspot.com/2011/05/2.html

                       

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. துளசி கோபால்
  மார்ச் 14, 2011 @ 02:14:11

  உங்கள் பயணத்தில் நானும் தொடர்ந்து வருவேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2011 @ 08:04:02

   மிக சந்தோசம்! வாங்கோ Thulasi…கோபால் மிக சுவையாக இருக்கும். பயணக்கட்டுரை எழுதுவதை நான் மிக நேசிக்கிறேன். உங்கள் கருத்திற்கு நன்றி. இதோ!…இப்போது உங்கள் வலையைக் கிளிக்குகிறேன்…..கருத்து போட முடிந்தால் போடுவேன்…வாழ்த்துகள்!

   மறுமொழி

 2. pirabuwin
  மார்ச் 14, 2011 @ 04:14:22

  எல்லோரு இலங்கையை அழகான நாடு என்று சொல்லுகிறார்கள்.ஆனால் தாய்லாந்து இலங்கையை மிஞ்சும் போலத் தெரிகிறதே.

  வளர்ச்சி அடைந்த நாடு போல காட்சியளிக்கிறது.

  மறுமொழி

 3. pirabuwin
  மார்ச் 14, 2011 @ 04:21:16

  தாய்லாந்து தொடர்பான புகைப்படங்களையும் எதிர்பார்க்கிறேன்.

  “ஆனால் தாய்லாந்து இலங்கையை மிஞ்சும் போலத் தெரிகிறதே”

  தாய்லாந்து என்பதை டென்மார்க் என்று மாற்றி வாசிக்கவும்.சிறு தவறு நடந்துள்ளது.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: