தாய்லாந்துப் பயணம் – 4

எனது பயண வரிசைகளில்  மூன்றாவது பயண அனுபவம்                

தாய்லாந்துப் பயணம் – 4

30 ம் திகதி இரவு 11.20க்கு பாங்கொக் செல்லும் விமானத்தினுள் சென்றோம்.

பயணம் இனிதாகச் சென்றது.
இரண்டு நேர உணவு. இதில் எனக்கு சைவ உணவு பதிவாக்கியிருந்தோம், பிரச்சனையே இல்லை. தூக்கம், பயணக்காட்சி, தொலைக்காட்சி, பேசி மகிழ்ந்தது, புத்தகம் வாசித்தது. இவை போக இடை இடையே காலையும் நீட்டி மடக்கி சிறிது காலுக்குப் பயிற்சியும் செய்தோம்.

நேபாளம், இமாலயப் பனிமலையும் அழகாகப் பார்த்தோம். பனிமலைத் தொடர் காட்சி மிக அழகாக யன்னலூடாகத் தெரிந்தது. தொலைக்காட்சியில் எங்கு பறக்கிறோம் என்று பார்க்கும் போது, அது மலைப் பிரதேசமா, நகரப் பகுதியாவென அறிவது சுலபமாக இருந்தது.

ஞாயிறு பகல் 2.20க்கு பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையம் சென்றடைந்தோம்.
என்ன நேயர்களே! சுவர்ணபூமி விமான நிலையம் என்ற பெயர் ஆச்சரியமாக உள்ளதா! ஆமாம் இது சமஸ்கிருதப் பெயரே தான். பயண அனுமதிச் சீட்டில் இப் பெயரைப் பார்த்ததும் எமக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. விமானம் மெல்ல உருளும் போது, எழுத்துக் கூட்டியும் வாசித்துப் பார்த்து என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டேன்.

இது புதிய, பெரிய விமான நிலையம்.

         

 2006 ஐப்பசி மாதப் பிற்பகுதியில் திறக்கப்பட்டதாம். 120 விமானங்கள் நிறுத்தக் கூடிய பரப்பளவு கொண்டது.                       

சுமத்திரா, மலேசியா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகள் தங்களது நாட்டிற்கே சுவர்ணபூமி என்ற பெயர் உள்ளது என கூறியபடியே உள்ளனர்.

தாய்லாந்தின் முன்னைய தலை நகரமான நோக்கொன் பதம் (Nokon patham) தான் சுவர்ணபூமி என்று தாய்லாந்து கூறுகிறது. இன்று விமான நிலையத்திற்கே இப் பெயரைச் சூட்டியுள்ளனர். சுவர்ணபூமி தங்க நாடு, தங்க நிலம், தங்க பூமி என்கிறார்கள்.                                                             

ஒரு சட்டியை பக்கவாட்டில் நிமிர்த்தி, பல சட்டிகளைச் சாய்த்து ஒன்றோடொன்று  அடுக்கியது போலக் கூரை, (மேலே படத்தைப் பெரிது பண்ணிப் பாருங்கள்) பெரிய குகை வாயில்கள் போல, கட்டம் கட்டமாக வாயிலை அலங்கரித்து, மிக அழகாக அமைந்துள்ளது. –  இது எனது பார்வை.

விமானத்திலிருந்து இறங்கி வழமை போல தகவற் பலகையில் எந்த இடத்தில் எமது பொதிகள் வருகிறது என்று அறிந்து சென்றால், நீண்ட நேரம் காத்திருந்தே எல்லோர் பொதிகளும் சுளரும் பட்டியில் வந்து சேர்ந்தது. இது அங்கு ஒரு குறையாக எப்போதுமே பிந்தித்தான் வருமாம். பின்பு பாஸ்போட் பரிசோதனைப் பகுதியில் வெளிநாட்டினர் பிரிவிற்குச் சென்று வரிசையில் நின்றோம்.

இங்கு மிக விரைவாக யாவும் நடந்தது. விமானத்திலேயே பத்திரம் நிரப்பிக் கொண்டு வந்தோம் எம்மைப் பரிசோதிக்கும் ஊழியர் மேசையின் முன்பு மேசை விளக்குப் போல ஒற்றைக் காலுடன் ஒரு கருவி இருந்தது. எல்லாம் பார்த்த பின்பு, அந்தக் கருவியை மேலும் கீழுமாகவும் உருட்டினார். சரி போகலாம் என்பது போல, தலையை ஆட்டினார்.

‘ என்ன படம் எடுத்தாயா? ‘ என்று புன்முறுவலுடன் ஆங்கிலத்தில் கேட்டேன். ஆமாம் என்று தலையை ஆட்டினார்.

ஆக, தமது நாட்டினுள் எம்மைப் படம் எடுத்தே உள் புக அனுமதித்;தனர். வேறு இடங்களில் அனுபவிக்காத புது அனுபவமாக இது இருந்தது.

விமான நிலையத்திற்கு வெளியே வரும் வாயிலில் வாடகைக் கார் சாரதிகள், தரகர்கள் நான் முந்தி நீ முந்தியெனப் போட்டி போட்டு வந்தனர் தமது வாகனத்iதில் எம்மை ஏற்ற. –  (photo  வெளிவாயில்)

 நாம் பட்டுனாம் வட்டாரத்திற்குச் செல்ல வேண்டும். அதற்குரிய சொகுசுப் பேருந்து இலக்கத்தை அறிந்து அந்தக் கந்தோரிலேயே பணத்தைக் கட்டி ரசீதும் எடுத்தோம். பேருந்து வர இதில் செல்லவேண்டும் என்று காட்டினார்கள்.

—பயணம் தொடரும்.—                          

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்-
23-10-2008.

In anthimaalai.com;-        http://anthimaalai.blogspot.com/2011/06/4.html

                                 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மார்ச் 16, 2011 @ 04:13:19

  விமான நிலையத்தை பற்றியே ஒரு கட்டுரை எழுதலாம் போல உள்ளதே!

  மறுமொழி

 2. துளசி கோபால்
  மார்ச் 17, 2011 @ 05:57:40

  //பல சட்டிகளைச் சாய்த்து ஒன்றோடொன்று அடுக்கியது போலக் கூரை, ….//

  இந்த வர்ணனை பிடிச்சுருக்கு:-))))))

  தொடர்ந்து வருகின்றேன்.

  ஸ்வர்ணபூமி அட்டகாசமா இருக்கு.

  நேரமிருந்தால் இங்கே பாருங்கள்.

  http://thulasidhalam.blogspot.com/2010/08/13.html

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 17, 2011 @ 08:02:40

   பார்க்க அப்படித்தான் வித்தியாசமாகத் தெரிந்தது…..மிக்க மகிழ்ச்சி…நிச்சயம் பார்ப்பேன் எழுதுவேன்…..நன்றி சகோதரி…வாழ்த்துகள்….

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: