173. சிவப்பு….றெட்…..

 

சிவப்பு….றெட்…..

 

சிவந்த கன்னச் சிவப்பு அழகு
சிவந்த உதடு கிறங்க வைக்கும்.
சிவந்த மதுவும் போதை தானே!
செக்கச் சிவந்தவர்களை எல்லோரும் விரும்புவர்.
        குங்குமம் குழுமை தரும் சிவப்பு.
        குணம் தந்து சிவக்கும் மருதாணி.
        காதல் மலர் சிவப்பு ரோஐh.
        காமக்கோட்டை  சிவப்பு வட்டாரம்.
மங்கல வாழ்வு தொடரத் தூண்டுகோல்
மதுச்சாறினைப் போல் மயக்கம் உருவாக்கும்.
மணவாழ்வு திறக்கும் மன்மத மந்திரம்.
மனம் கிளர்ந்திடும் சிவப்புக் கூறையில்.
        கறையான் புற்றுச் சாயலில் பவளப் பாறையைக்
        கடலினுள் கட்டும் செம்பவளப் பூச்சி.
        பயன் தரும் பவளமும் சிவப்பு.
        பயமூட்டும் சிலருக்கு இந்தச் சிவப்பு.
சிவப்புக் காய்கறியின் ஊட்டச்சத்து ‘லைசோபின்’
சிறப்பாக இதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
சிவப்பு நிறம்  குருதியோட்டத்தைக் காக்கிறது.
சீராக பசியைத் தூண்டும் செந்நிறம்.
         சிவப்பு விரும்பி படு; சுறுசுறுப்பானவர்.
         சிவப்பு, நீலம்; மஞ்சளடிப்படை நிறங்கள்.
         சிவப்புச் சைகையானால் தெருவில் ஒதுங்குங்கள்!
         நிறங்களால் செய்யும் மருத்துவம் ‘க்ரோமோத்தெரபி’.
நிறக் குருட்டுக் குறைபாடு மனிதருக்கும்
நாய், பூனை, எலி, முயலுக்குமுண்டு.
நிறக் குருடு ‘டால்டானிசம்’ எனப்படும்.
சிவப்பு இவர்களுக்குப் பழுப்பாகத் தெரியுமாம்.
        சிவப்பல்ல செங்கடல் நீரின் நிறம்      
        சிவப்புக்கு ‘ஹீப்ரு’ மொழி; ”எடாம்”
        எடாம் மலையின் நிழல் கடலில் வீழ்வதால்
        செங்கடல் ஒரு காரணப் பெயரானதாம். 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-2-2010.

(யெர்மனிய மண் சஞ்சிகையில் பிரசுரமானது.)

 

                            

Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மார்ச் 18, 2011 @ 04:20:02

  “பயமூட்டும் சிலருக்கு இந்தச் சிவப்பு”

  சிவப்பில் இவ்வளவு விஷயங்களா?

  இறுதிப்போருக்கு பின்னர் சிவப்பு என்றாலே பிடிக்காமல் போய்விட்டது.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 19, 2011 @ 19:46:17

   @ Pirabuwin!…..உண்மை தான் சிலர் கண்களில் சிவப்பு வடிவதாகப் படம் போடுவார்கள், எனக்கு பார்க்க விருப்மில்லாமல் தான் இருக்கிறது. கருத்திற்கும், வருகைக்கும் மிகுந்த நன்றி.

   மறுமொழி

 2. மதுரை சரவணன்
  மார்ச் 18, 2011 @ 19:13:29

  சிவப்பில் அற்புதங்கள் பல கொடுத்த தங்களூக்கு நன்றி.வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. சக்தி சக்திதாசன்
  மார்ச் 19, 2011 @ 11:53:29

  அன்பின் வேதா,
  சிவப்பின் சிறப்பினையும்
  சிவப்பைப் பற்றிய கருத்துக்களையும்
  சிவப்பு மையினால்
  சிறப்பாகக் கவிதை மூலம்
  கருத்துரைத்துள்ளீர்கள்
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 19, 2011 @ 19:36:35

   @sakthy sir! வலையில் கருத்துப் போட்டு உங்கள் விரலையும் சிவக்க வைத்துவிட்னோ! உங்கள் தமிழுக்கு நன்றி.வருகைக்கும் நன்றி சகோதரரே!

   மறுமொழி

 4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மார்ச் 19, 2011 @ 13:28:45

  கம்பளங்களில் செங்கம்பளம் சிறப்பு !
  கலைகளில் செந்தமிழும் சிறப்பு !!
  சிவப்பையும் சிறப்பையும் சீர்தூக்கி வாழ்ந்திடுவோம் !

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 19, 2011 @ 19:33:12

   நீங்களும் புதிதாக சிவப்பில் 2 சேர்த்துள்ளீர்கள் mr Nada. Siva… மிக்க நன்றி சகோதரரே! மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் கருத்திற்கு. வாழ்த்துகளுடன் நன்றியும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  ஆக 16, 2013 @ 05:51:35

  In my wall FB ..—
  Sundrakumar Kanagasundram likes this….and commented..:-
  இனிய காலை வணக்கம்.( 16-8-2013.) ரெட் பற்றிய விளக்கம் சூப்பரு.நன்றிகள்.

  Vetha ELangathilakam மிகுந்த நன்றி சகோதரா. மகிழ்ந்தேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: