180. முதுமைப் பட்டயம்

முதுமைப் பட்டயம்.

காலப் பெருவெளியில் முதுமைக்
கோல மாற்றம் பொதுமையே!
இளமை போய் வரும்
முதுமையில் இல்லை இதம்!

நட்சத்திரத்துள் நடப்பது அல்ல,
அட்டகாசமிட்ட கட்டுடலின்
அட்டாவதானங்கள் அடங்கும்
கட்டமே முதுமை இராச்சியம்.

மெல்லிய அசைவு, ஆட்டங்கள்
துல்லிய அனுபவம்! ஆச்சரியம்!
பெருமையான ஒழுக்க வாழ்வு
முதுமையில் நிம்மதி தரும்.

கருமை, சிறுமையான வாழ்வு
முதுமை நிம்மதியை அழிக்கும்.
மனச்சாட்சி தண்டனை தரும்.
முதுமை பெரும் கொடுமை!

ஆடும் ஆட்டம் குறைந்து
வாடும் நிலையின் வாசல்.
கூடி வரும் தோழர்களாய்
தேடி வரும் நோய்கள்.

நிறை அனுபவ முதிர்வால்
குறைவற்ற பொறுமை நிறையும்.
இயலாமையாலும் ஒரு பலவீனப்
பொறுமை முதுமையில் நிறையும்.

இனிப்பது அல்ல இணையும்
மனித குலத்துப் பட்டயம்,
கனிதல் என்ற முதுமை.
தனி வழி ஊர்!

சொந்தம் சுற்றியிருந்தாலும்
பந்தமற்ற வாழ்விது என்று
நொந்து போகும் உடல்
அந்தம் பாடும் முதுமை.

நோய் நொடியின்றி ஒருவன்
பாயில் படுக்க முன்னர்
வாழ்நாள் முடிவுற வேண்டும்.
வல்ல இறைவன் அருளட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.
26-3-2011.

 

முதுமை தலைப்பில் இதன் கருவையொட்டிய இன்னொரு கவிதை இணைப்பு இது.                                                         https://kovaikkavi.wordpress.com/2010/11/08/144-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88/

 

(பங்குனி மாதம் 2011ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது)

 

                       
 

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Gowri
  மார்ச் 26, 2011 @ 16:12:18

  Wonderful…..!

  மறுமொழி

 2. Dhavappudhalvan
  மார்ச் 26, 2011 @ 17:29:52

  “நோய் நொடியின்றி ஒருவன்
  பாயில் படுக்க முன்னர்
  வாழ்நாள் முடிவுற வேண்டும்.”

  உண்மையான நிறைவேற எண்ணமும் கருத்தும். மகிழ்ச்சி.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 26, 2011 @ 20:52:59

   மிக்க நன்றி சகோதரரே!..ஒரு மனிதன் விரும்புவது இது தானே! பாயில் படுக்காது , நோயில் வீழாது கண்களை மூடுவது…இறைவன் அருள வேண்டும்.
   நல்லது செய்வோம்….

   மறுமொழி

 3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மார்ச் 26, 2011 @ 17:42:05

  //பெருமையான ஒழுக்க வாழ்வு
  முதுமையில் நிம்மதி தரும்.//
  அமைதி நிம்மதி உள்ள முதுமை வேண்டும் !!

  மறுமொழி

 4. pirabuwin
  மார்ச் 27, 2011 @ 05:09:29

  முதுமையும் ஒரு வரமே.முதுமையிலும் இனிமை உண்டு. வாழ்ந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

  ‘நோய் நொடியின்றி ஒருவன்
  பாயில் படுக்க முன்னர்
  வாழ்நாள் முடிவுற வேண்டும்.
  வல்ல இறைவன் அருளட்டும்”

  இது நிதர்சனம்.

  மறுமொழி

 5. சக்தி சக்திதாசன்
  மார்ச் 29, 2011 @ 17:23:36

  அன்பின் சகோதரி வேதா,

  கவிதை அருமையாக இருக்கிறது. கருத்து, சொற்களின் தெரிவு, அவற்ரின் கோர்ப்பு அனைத்தும் அற்புதம்.
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 30, 2011 @ 06:49:32

   மிக்க நன்றி சகோதரரே! பாட, பாட ராகம், எழுத எழுத முன்னேற முடியும் என்பது அனுபவத்தில் தெரிகிறது உங்கள் கருத்திற்கும், வருகைக்கும் மகிழ்வு . உங்கள் பயணத்திற்கும் வாழ்த்துகள். நேரமிருக்கும் போது வருகை தாருங்கள், கருத்திடுங்கள். நன்றி, நன்றி.

   மறுமொழி

 6. Vetha ELangathilakam
  மே 06, 2012 @ 20:00:04

  My brother’s comment in FACEBOOK –

  Naguleswarar Satha Your blessings are always there-Mum & Dad
  For the future of our family
  I worship you always here
  For making my life happily.

  29.march 2011.

  மறுமொழி

 7. கோவை கவி
  அக் 01, 2013 @ 20:39:54

  இராஜ. தியாகராஜன்:- 1-10-2013.
  பாவலர் வேதா இலங்காதிலகம் உங்களின் முதுமைப் பட்டயம் படித்தேன். மிக எழிலாகவும், இயல்பாகவும், இருப்பினை எடுத்துரைத்த விதம் அருமை. வாழ்த்துகள்.

  Vetha ELangathilakam:-
  மிக நன்றி ஐயா. கருத்தால் மகிழ்ந்தேன்.
  இறையாசி நிறையட்டும். (Photo my dad & mum)

  மறுமொழி

 8. கீதமஞ்சரி
  ஜூன் 26, 2014 @ 01:13:29

  முதுமைப் பட்டயம் வாசித்தேன். சத்தியம் பேசும் கவிக்கருத்துக்கள். ஆண்டவனிடம் வைக்கும் கோரிக்கை மனம் தொடுகிறது. அருமை தோழி.

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜூன் 28, 2014 @ 21:00:31

  Sivakumary Jeyasimman:_
  arumai akka

  Vetha ELangathilakam:-
  மிக்க நன்றி சிவகுமாரி. இவர்களே என்னைப் பெற்ற தெய்வங்கள்.
  முகிலுக்குள் விளையாடி என்னை ஆசீhவதிப்பவர்கள்.
  மண்ணில் 50 வருடங்களிற்கு மேல் இணைந்து வாழ்ந்தவர்கள்.
  என் தமிழின்- ரசனையின் அத்தனையின் அத்திவாரங்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: