30. பெற்றவர் மாட்சி வரிகள்.

 

  (படம்-நன்றி விகடன்.)

 பெற்றவர் மாட்சி வரிகள்.

14-1-2007.
உதிரத்தில் உதித்த வாரிசுகள்
உதட்டில் சதிராடட்டும் சரளமாய்
ஆதித் தமிழ். கதிரவன்
கதிராய்ப் பொங்கட்டும் தமிழ்.
பதியாம் நம் தாய் மண்ணில் அமைதி
புதிய வருடத்தில் பொங்கிப் பொலியட்டும்.
கொதிக்கும் மனங்கள் அமைதியில் பொங்கட்டும்.

21-1-2007.
அனுபவங்கள் பொன் பெறும்.
அனுராகமான பெற்றவருடனான
அனுபந்தம் இன்பச் சுரங்கம்.
அனுதினம் அதையே எம் பிள்ளைகளுக்கும்
அள்ளிக் கொடுத்தல் ஆரோக்கியமே!.

3-3-2007.
எப்பொழுதும் பெற்றவர் அன்பு அமுததாரை.
தப்பின்றி வாழ எப்படி வைப்படி இருப்பதென்று
செப்பமாய்க் கூறிப் பாசமழையில் நனைத்த
அப்பாவும், அம்மாவும் மனதினுள்
எப்பொழுதும்….எப்பொழுதும்….

25-3-2007.
செல்வம் குவிவது போன்றது
செல்வோமென விலகாத உறவு,
நல்ல பெற்றவர் உறவு.
வெல்வோம் வாழ்க்கையை என்று
நல்ல பிள்ளைகளாய் நாம்
வாழ்தலால் நாளும் மகிழ்வதும் அவர்களே.

23-6-2007.
அற்புதம் உலகில் எம்மில் பற்றான
பெற்றவர் முதலாவதாகவும், அவர்
வற்றாத அன்பு, ஆதரவு பின்னாகவும்
ஊற்றாக வாழ்வின் இறுதிவரையோர் ஆறுதல்…

24-6.2007.
சுயநலமுடைய சுவடு பதிப்பவர்,
நியமம்(விதி) என்று கடமையாய,;
யாகம் போல் தம் வாழ்வைத்
தியாகம் செய்தவர்கள் பெற்றவர்.
இத்தயாள குணம் எமக்கு வந்தால்
வியப்புடன் அமையும் எம் வாழ்வு.

2-12-2006.
பாசம் – பெற்றவர் நேசம்
பொன் எழில் நிகரொத்தது.
பூம்பொழிலான அவர் பாசம்
பேதம் காட்டாத நந்தவனம்.
வான் எழில் நிகரான அன்பை
தினம் பொழிவார் யாரென தவிக்கிறோம்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

 

                       
 

2 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மார்ச் 27, 2011 @ 05:13:15

  ‘யாகம் போல் தம் வாழ்வைத்
  தியாகம் செய்தவர்கள் பெற்றவர்”

  “வான் எழில் நிகரான அன்பை
  தினம் பொழிவார் யாரென தவிக்கிறோம்”

  அட்டகாச வரிகள்.
  வார்த்தைகளால் விபரிக்க முடியாத பந்தம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 05, 2011 @ 16:49:00

   உண்மை தான். அற்புதம்! ஆனந்தம்! அனுபவித்துப் பெற்றுக் கொண்டவள். இறுதிக் காலத்தில் அவர்களைப் பராமரிக்கமுடியாது இங்கு தங்கியவள். தங்கை அந்தப் பாக்கியம் பெற்றவள்.
   நன்றி பிரபு! உமது கருத்திற்கும் வருகைக்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: