20. மொழிச் சுழியோடி……

 tttaaammmiill61

மொழிச் சுழியோடி……

 

ண்ணில் தொட்டு ஒற்றி

மண்ணில் விரலால் சுற்றி

சின்ன மழலையாக அன்று
கன்னித் தமிழ் எழுதியது.
ஆய்வுகள் இயற்கை மாற்றங்கள்
எய்தும் சம்பவங்கள், காலப்பதிவுகள்,
தேய்வுகள், திருத்தங்களையெடுத்தின்று
என்னோடுலகுய்வுற எழுதுவது.

விரலைந்தின் கூட்டிணைவால்
வரலாறு வரையும் தூரிகை.
வரமான தமிழாம் காரிகை
அரசாட்சி உரமாக எழுதுவது.
நானறிந்ததைப் பிறருக்குக் கையளிக்க
நற்கருத்தை உலகுக்குப் பரிமாற
நம் வேரான மொழி காக்க
நாள்தோறும் பதிவாக்க எழுதுவது.

டுத்த வாரிசுகள் மொழியால்
எடுத்தடி வைக்க உதவ
தொடுக்கும் மரதன் ஓட்டமாக
கொடுக்கும் அஞ்சலாக எழுதுவது.
மொழிச் சூழலழில் மூழ்கி
மொழி விளையாட்டில் சுழியோடி
பழிக்காது கற்றோர் காமுற
எழிலாகக் களித்து எழுதுவது.

கூனுடையோர் தமிழ் கோல்
பிடித்து நிமிர்ந்து நடக்க,
பண்ணாக, கண்ணாக இன்று
என்னேடுலகு இன்புற எழுதுவது.
எழுதுவது..எழுதுவது நிலம்
உழுவது போன்று எழுதுவது.
புழுதி பறக்க, சிறக்க
எழுவது இமயத்திற்கென்றெழுதுவது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.
31-3-2011.

12-4-2011ல் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில் (மாலை7.00 மணி- 8.00 மணி) கவிதை நேரத்தில் என்னால் வானலையில் வாசிக்கப் பட்டது.

https://www.facebook.com/photo.php?fbid=690263157669217&set=a.395787887116747.107113.100000566177564&type=1&theater&notif_t=photo_reply

                                                            

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  ஏப் 01, 2011 @ 05:05:15

  தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

  சிலருக்கு விளங்கவில்லை.பலருக்கு தெரியவில்லை.
  உணர்வார்கள் விரைவில்.

  மறுமொழி

 2. பாலசுப்ரமணியன்
  ஆக 20, 2013 @ 02:02:44

  மிக அருமை! வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. கோவை கவி
  செப் 29, 2013 @ 05:57:38

  .மிக்கநன்றி கருத்திடலிற்கு.
  இறையாசி நிறையட்டும்…Sako..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: