17. ஆன்மீகச் சிந்தனைகள்.

  

 

  

 

ஆன்மீகச் சிந்தனைகள்.

 

இறைவனைக் கோயிலிலும் வணங்கலாம், வீட்டிலும் வணங்கலாம். கோயிலில் அதே மனநிலை கொண்டவர்களின் மன அதிர்வுகள் சுவர்களில் எதிரொலிக்க, கோயிலின் சூழலும் ஒரு மனக்கோலத்தை உருவாக்குகிறது. அதனால் மனதிற்கு மகிழ்வு அமைதி கிட்டுகிறது.

இறைவனுக்குத் தொண்டு (ஊழியம்) செய்வது என்றுமே வீணாகாது. காரணம் தொண்டினால்(தெய்வ வழிபாட்டுத்) அதீத மன வலிமை பெறலாம்.

திருமொழிகள் போன்ற திருமுறைப் பதிகங்களை இறைவன் திருவடி எண்ணி ஒரு முறையேனும் ஓதினால் வாழ்வில் திருப்தி கிடைக்கும். திருப்பமும் நேரும்.

முதிர்ந்த இறை பக்தர்கள் இறைக்கும் ஆன்ம சிந்தனைகள், மன ஆறுதலையும், இறைபக்தியையும் தரவல்லன. பாலைவன மனங்களில் அருள் நீர் இறைக்கும் உணர்வு தருபவை.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

2-4-2011.

In Anthimaali web site:-  http://anthimaalai.blogspot.com/2012/05/9.html

                            

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஆர்.சண்முகம்
  ஏப் 03, 2011 @ 01:49:28

  சிந்தனை அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 03, 2011 @ 21:09:14

   சகோதரர் சண்முகம் அவர்களே! மிக்க மகிழ்ச்சி உங்கள் கருத்திற்கு. இவைகள் தானே எனக்கு இன்னும் ஊக்கம் தருபவை. இதனால் தானே விடாது எழுதுகிறேன். மிக்க நன்றி.

   மறுமொழி

 2. pirabuwin
  ஏப் 03, 2011 @ 04:22:11

  கடவுள் மிகவும் பெரியவர்.அவரை நினைத்தாலே பாதி துன்பம் பறந்து போகும்.

  அற்புதம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 03, 2011 @ 21:14:01

   Pirabuwin! இப்படி உணர்வை நான் பெற்றுள்ளேன். இதனால் தான் இறை வணக்கம் ஒரு மனவியல் சிகிச்சை வழி என்று நான் கூறுவதுண்டு.

   மறுமொழி

 3. Dhavappudhalvan
  ஏப் 04, 2011 @ 17:02:32

  அருமையான தகவல்.

  மறுமொழி

 4. வித்யாசாகர்
  ஏப் 06, 2011 @ 08:21:29

  ஆத்ம பலம் சேர்க்கும் எண்ணங்களை பகிர்வதில் நன்மை பயக்கும் உங்கள் பயணம் சகோதரி..

  ஆன்மிகம்; புரிந்தவருக்கே கடவுளையும் காண்பிக்கிறது. கடவுளை மனதில் ஆழத் தக்கவைத்துக் கொள்ளும் உணர்வு, பெரியோர்களின் ஆன்மிக சிந்தனைகளை படிப்பதால் நமையறியாது நமக்குள் வளர்கிறது. இடையில் செருகப் பட்ட காலத்தின் வேகத்தில் திணிக்கப் பட்ட சில தற்கால அவசியமற்ற விடயங்கள் போக; இறைவனை மனதால் உருகி வழிபடுதல் என்பது அறிந்தவர்க்கே அறியக் கூடிய பிறப்பின் பலனாகும்!!

  தொடருங்கள் சகோதரி. நிறைய பேசத் தக்க பதிவிற்கு நன்றியானேன்..

  வித்யாசாகர்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 06, 2011 @ 19:25:25

   என் வானத்தில் மழை வருகிறதா என்று பார்த்தேன். வித்தியாசாகர் கருத்துப் பதிந்துள்ளார் என்று. மிக்க நன்றி. நேரமிருக்கும் போது எட்டிப்பாருங்கள்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: