23. மனம் உருகுதே….

 

 

 

 

வசந்தம் குடிகொள்ளும் அறையுள்
விடியலின்றி உறவு, கருமைப்
பொடி தூவிய இருட்டாக.
நொடிப் பொழுதும் மனம்
துடித்த போர்வையை விலக்கிய
துடிக்கும் உணர்வுக்கான ஏக்கம்.

நீலவானக் கதிரின் மஞ்சள்
கோல எழிலுக்காய் உள்ளம்.
அலைகள் பொங்கும் நுரையுள்
வலம் வரும் குதிரையின் கம்பீர
உலாவாய் உணர்வுகள் சொடுக்கி
உயிர் பிழியமாட்டானா!

உன் தூரம் நீண்ட பாலைவனமாய்,
என்னுள் இரகசியமாய்ச் சபிக்கிறேன்.
மழைச்சாரலில் நனைந்த மல்லிகையாய்க்
குழையும் தனிமையும், குளிரும்
கவிந்து வியாபித்துப் போர்த்துகிறது
இதயம் பிளக்கும் இரகசிய இரணமாய்….

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-4-2011.

                            

                           

Advertisements

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. உண்மைவிரும்பி
  ஏப் 06, 2011 @ 03:33:42

  போர்வையை விலக்க
  துடிக்கும் உணர்வுக்கான ஏக்கம் !

  உணர்வுகள் சொடுக்கி
  உயிர் பிழியமாட்டானா!

  என்ன அருமையான பா, வாழ்த்துக்கள் சகோதரி !

  உண்மைவிரும்பி.
  மும்பை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 06, 2011 @ 19:18:15

   எனது பா உங்களை மகிழ்ச்சிப் படுத்தினால் அது நல்ல சகுனம் தானே! உண்மைவிரும்பி
   மகிழ்ச்சி. தொடர்ந்து பயணியுங்கள்… எனது வலையில் மிகுந்த நன்றி.

   மறுமொழி

 2. pirabuwin
  ஏப் 06, 2011 @ 05:27:24

  அருமை பா!

  மறுமொழி

 3. Kowsy
  ஏப் 06, 2011 @ 15:03:38

  அருமை, அற்புதம்

  மறுமொழி

 4. SUJATHA
  ஏப் 06, 2011 @ 21:04:08

  கவி அருமை ”வேதா” வாழ்த்துக்கள்!!!!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 07, 2011 @ 07:01:39

   அன்பு சுஜாதா! நேற்று ஒரு ஆக்கமும் எனது வலையில் போடவில்லை, மிக சோர்வாக இருந்தது..ஒன்றுமே வேண்டாம் என்று நேரத்தோடு படுக்கைக்குச் சென்று விட்டேன். காலையில் பார்த்தால் 2 புதியவர்கள் கருத்திட்டிருந்தனர். ஒன்று சுஜாதா. இவைகள் தான் நம்மைத் தட்டித் தருவன. மிக்க மகிழ்ச்சி சுஜா!. நன்றியும் கூட.

   மறுமொழி

 5. படைப்பாளி
  ஏப் 09, 2011 @ 05:15:56

  அருமை தோழி

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 08, 2018 @ 11:15:33

  என்னுள் மலரும் நினைவா நீ –
  தலைப்பிலிட்டு சானறிதழ் பெற்றேன். kavijulakap pooncholai..

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 10, 2018 @ 10:03:15

  Revathi Balu ஊடுருவும் உணர்வுகளின் உச்சம்!..
  மயக்க நிலையில் ஓர் மௌனம்!..
  எழுதப்படாத ஒரு கவிதையின் கரு!..
  எங்கெங்கோ அலைபாயும் காதலின் கருவூலம்!..
  இப்படியாகத் தோன்றுகிறது..
  படம் அல்ல படைப்பு” அழகு!..
  நன்றி..கவி உறவே!.. Vetha Langathilakam
  9-4-2018

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: