தாய்லாந்துப் பயணம். அங்கம் 13.

எனது பயண வரிசைகளில்  மூன்றாவது பயணம்..
தாய்லாந்துப் பயணம். அங்கம் 13.

பாங்கொக்கில் மிகப் பெரிய கம்பியூட்டர் வியாபார நிலையமாக 5 மாடிக் கட்டடம் உண்டு. இதன் பெயரே கம்பியூட்டர் சென்ரர் தான். முழுவதும் மின்சாரப் பொருட்கள் தான்.

                                                                                                       

 

 

     

 நாம் கடை வீதியில் நடந்து செல்லும் போது ‘ கண்ட கண்ட லாபாய் ‘ (ganda..ganda..laabai)என்ற குரல் வந்தது. திரும்பிப் பார்த்தால் எங்களைப் பார்த்தே கூவினார்கள். எவ்வளவு தூரம் இலங்கையர் வரவும், கொள்வனவும் தாய்லாந்தில் பிரபலமாக உள்ளது என்பது இதிலிருந்து தெரிகிறதல்லவா! நாலடிச் சதுரத்தில் பொருட்களைப் போட்டு வியாபாரம் பண்ணும் தாய் மக்கள் பலருக்கு ஆங்கிலமே பேச முடியவில்லை. சைகை மொழி தான்.  இது ஒரு பெரும் குறையாகவே எம் போன்றவர்களுக்கு உள்ளது.

அடுத்த ஆச்சரியம் அங்கு ஒரு மிதிவண்டி கூட நாம் காணவில்லைத் தெரியுமோ! அப்படியானால் எப்படிப் பயணிக்கிறார்கள்! இது தானே உங்கள் கேள்வி!

மோட்டார் சைக்கிள் மயம் தான். யாரைப் பார்த்தாலும் வேகமாக ஓட்டுவதற்கு உரிய ஆடை, தலைக் கவசத்துடன் தான் இருக்கின்றனர். சிவப்பு விளக்கு சந்திகளில் கட்டைக் காவாலிகள் கூட்டம் போல பச்சை விளக்கிற்குக் காத்திருக்கும் மோட்டார் சைக்கிள்கள், ஒரு ஊர்வலம் போன்ற காட்சி, ஒருவித பயங்கரத் தோற்றத்தைத் தந்தது மாதிரி இருந்தது எனக்கு.

                                                                                                       ஏனெனில் இப்படியான சாதாரணக் காட்சி எமக்கு எங்கும் பார்த்துப் பழக்கமில்லையே! பேருந்து நிறுத்தும், முக்கிய இடங்களில் தமது வாகனத்தில் அமர்ந்து இருந்தபடி காக்கா போல இவர்களும் சவாரிக்குக் காத்திருக்கிறார்கள்.  

 ருக் ரக்’ எனும் முச்சக்கர வண்டி பாங்கொக் நகரத்தினுள் நிறைய ஓடுகிறது.

 

 

 

தெருவில் நாம் நிம்மதியாகப் போக முடியாது. வழி மறித்து ‘வாங்கோ! வாங்கோ!’ என்று தொல்லை தருகிறார்கள், சவாரிக்கு நம்மை இழுக்கிறார்கள்.

தெருவில் பாதை தெரியவில்லை என்றால் இப்படி இருப்பவர்களிடம் இது சரியான வழி தானாவென்று கேட்டால், அவரிடம் கேள், இவரிடம் கேள் என்று எம்மைப் பந்து போல உருட்டி, தமது வாகனத்தை வா போகலாம் என்று கூப்பிட வைக்கப் படாத பாடு படுகிறார்கள். ஒன்று இரண்டு எத்தனிப்பில் இதைப் புரிந்து கொண்ட நாம், அவர்களை ஏமாற்றி நழுவினோம். அவர்கள் இப்படி உழைப்பதில் சரியான புத்திசாலிகள்!

 ‘ருக் ரக்கில்’ போவது ஜாலி தான்! தெருவின் முழுப் புகையும் நமது சுவாசப்பைக்குள் தான்! ராக்சி என்றால் கண்ணாடியை மூடிச் சுகாதாரமாகப் பயணிக்கலாம். வியர்க்கிறது என்று கண்ணாடியை இறக்கினாலே அசுத்தக் காற்று அபாயம் தான். சிலர் வாகனத்தில் மீட்டர் போடுகிறார்கள், பலர் மீட்டர்  போடுவதில்லை.

கைவேலைப் பொருட்கள், ஆடைகள் பலவற்றை சொந்தமாகத் தாய் மக்கள் தாங்களே தயாரித்து அதைத் தாய்லாந்தில் செய்தது என்று பெருமையாக விற்கிறார்கள். தரமாகவும் உள்ளது. இங்கு வராத புது மாதிரி டெனிம் கால்சட்டை நல்ல வண்ணம் போட்டதின் விலை 700 பாத். 100, 120 குரோணர் தான். அதையே இங்கு வாங்கினால் 800, 1000, 1200 குரோணரில் தான் வாங்க முடியும். அங்கு அப்படி மலிவாக உள்ளது.

பட்டுனாம் மாக்கெட், பஷன் கவுஸ் என்று 5, 6 மாடிக் கட்டிடங்கள். ஆகவும் உயரத்தில் 152 வகையான உணவுகளுடன் உணவகம் உள்ளது. நாள் முழுக்க சுற்றிக் கொண்டு அங்கேயே நிற்க முடியும். ஒரு நாளைக் கடத்த முடியும்.

                                                                                                                                                            

                                                                                                                                       சாதாரணமாக ஒரு பயண அனுமதிச் சீட்டுடன் கொஞ்சப் பணத்துடன் கையை வீசியபடி தாய்லாந்தில் இறங்கினால் போதும். மலிவான தங்குமிடம், உணவு, ஆடை என்று சகலதும் அங்கேயே பெற்றுச் சுற்றலாம் என்பது எம் அனுபவம்.                   

———பயணம் தொடரும் —-

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
5-1-2009.

                                        

 

1 பின்னூட்டம் (+add yours?)

 1. கோவை கவி
  ஆக 09, 2011 @ 20:36:18

  Sujatha Anton wrote:-
  பயணக்கட்டுரை தொடரட்டும் ..தமிழ்ப்பணிகளும் தொடரட்டும்!!!!!!!

  Vetha wrote:- mikka nanry Sujatha. God bless you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: