வாழ்வியற் குறட்டாழிசை. 4.- நட்பு.

Art by Vetha,

 

வாழ்வியற் குறட்டாழிசை   4.

 நட்பு.

 

நட்பு விலை மதிப்பற்றது. நல்ல
நட்பாக இருக்கும் வரையில்.

நல்ல நட்பு கெட்டவனையும் திருத்தி
நல்லவனாக்கும் திறன் உடைத்து.

நிறை குறைகளை எடுத்துக் கூறுதலை
கறையாக எண்ணுவோன் நண்பனாகான்.

இன்ப துன்பங்களைப் பரிமாறும் நட்பிதயத்தை
எண்ணுதல் இன்பம் உடைத்து.

திறவாத நல்ல புத்தகம் போன்று
உறவாடா நட்பு ஆகும்.

நீருயர தாமரைத் தண்டு உயர்வதாக
அறிவுடையார் நட்பால் நாமுயர்வோம்.

துன்பத்தில் துணை வராதோர் நட்பை
துறத்தல் நற் செயல்.

பேச்சிலும், செயலிலும், மாறுபடுவோர் நட்பைத்
துறத்தல் நல்ல செயல்.

வேறுபாடின்றி உறவாடும் நட்பு யார்
கூறு போட்டாலும் விலகாதது.

தேவைக்கு நெருங்கியும், அல்லாவிடில் தூரவாகும்
நட்பு விலக்குதற்கு உரியது.

 

ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-4-2011.

I Anthimaalai web site – http://anthimaalai.blogspot.com/2011/07/4_21.html

  

                           

                             
 

Advertisements

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. உண்மைவிரும்பி
  ஏப் 12, 2011 @ 04:00:59

  நட்பு விலை மதிப்பற்றது. நல்ல
  நட்பாக இருக்கும் வரையில் !

  very nice வாழ்வியல் குறள்! sister.

  unmaivrumbi,
  Mumbai

  மறுமொழி

 2. pirabuwin
  ஏப் 12, 2011 @ 09:54:51

  ‘துன்பத்தில் துணை வராதோர் நட்பை
  துறத்தல் நற் செயல்”

  ‘வேறுபாடின்றி உறவாடும் நட்பு யார்
  கூறு போட்டாலும் விலகாதது”

  ‘தேவைக்கு நெருங்கியும், அல்லாவிடில் தூரவாகும்
  நட்பு விலக்குதற்கு உரியது’

  என்னைக் கவர்ந்த வரிகள் சகோதரி.
  அருமை.அற்புதம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 12, 2011 @ 20:04:56

   பிரபுவின்! எல்லாம் இந்த நீண்ட வாழ்வில் நட்புகளால் கிடைத்த அனுபவப் பாடங்களே தான். அந்த வரிகளே இவைகள். உமது வரிகளுக்கும், வரவிற்கும் மிகுந்த நன்றி.

   மறுமொழி

 3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஏப் 12, 2011 @ 15:37:19

  நட்பின்குறள் , நயம் சிறப்பு !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 12, 2011 @ 20:07:49

   அன்பின்நடா, சிவா எல்லாமே சொந்த அனுபவப் பாடம் தான் உங்கள் ரசனைக்கு நன்றி மிக மகிழ்வடைகிறேன். வரவிற்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றி.

   மறுமொழி

 4. Dhavappudhalvan
  ஏப் 13, 2011 @ 14:01:16

  நட்பிற்குறிய இனிய பதிவு. கருத்துக்களும் அருமை. வாழ்க நலமாக.

  மறுமொழி

 5. SUJATHA
  ஏப் 13, 2011 @ 21:26:38

  வேறுபாடின்றி உறவாடும் நட்பு யார்
  கூறு போட்டாலும் விலகாதது.

  நட்பின் குறள்களை நன்றாய் எடுத்துரைத்து நட்போடு நன்றாய்
  குறள்கள் கருத்துக்களானது வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 14, 2011 @ 07:21:32

   எல்லாம் நட்போடு அடிபடும் அனுபவம் தான் சுஜாதா. கொஞ்சமா பாடுபடுகிறோம். (நட்போடு) உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். KOM AGAIN: and give your comments.

   மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 21, 2011 @ 21:05:09

  Sujatha Anton, Rajacholan Shanmuganathan and 2 others like this..

  Sujatha Anton wrote:
  வாழ்வியல் குறளில் அழகாக ”நட்பு” பற்றி எடுத்துக்கூறியமை நமக்கும் வழிகாட்டியாக உள்ளது,்,,்,,்,,்,,

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: