3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) 14.

எனது பயண வரிசைகளில்  மூன்றாவது பயணம்;
தாய்லாந்துப் பயணம். அங்கம் 14.   

தாய்லாந்தில் கடைகளோ, வாடி வீடுகளோ உள்ளே புகுந்ததும் முதலில் தெரிவது சுவாமிப் படம் தான். மிக அலங்கரித்து மின் விளக்குகள் பூட்டி சிறு கோயில் போல, மாடம் போல அழகாக சுவாமியை வைத்துள்ளனர்.

சிறு தட்டிலே வெத்திலை, பாக்கு, இவைகள் எங்களைப் போல அல்ல, வேறு மாதிரி வைக்கிறார்கள். என் கணவர் தட்டைப் பார்த்து அவர்களைக் கேள்விகள் கேட்ட போது அது வெத்திலை பாக்கு என்றனர். ‘ ‘ இங்கே பாருமப்பா இது வெத்திலை பாக்காம் ‘ ‘ என்று எனக்கும் காட்டினார். இவை தவிர பழம், பூக்களும், ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் வைக்கிறார்கள்.

எனது மசாஜ்  பெண் சம்சாய் கூட ஒரு நாள் காலையில் நேரத்தோடு நாம் போன போது எங்களுக்கு முன்னாலேயே நாம் இருக்கிறோம் என்று கூச்ச நாச்சப் படாது, கை கூப்பி, நிறைய நேரம் கண்மூடி சாமி படத்தின் முன்னால், வணங்கியபடி இருந்த பின்பே மசாஜ்க்கு வந்தாள்.

நாம் உள்ளே போனதுமே சுவாமி படத்தைப் பார்த்ததும் ஒரு புனிதத் தன்மையான உணர்வு வருகிறது. ஒரு வேளை இவ்வுணர்வு நமக்குப் பழகி விட்டதாகவும் இருக்கலாம்.

வியாபாரத்திலும் அதாவது கடைகளிலும் முதன் முதலாக வாங்கும் பணத்தை அவர்கள் முறைப்படி ஆண்டவனைத் துதித்து இன்னும் பெருகுக! என்பது போலச் செய்து தான் பெற்றுக் கொள்கிறார்கள்.

அனைவரும் மிக மிகக் கடவுள் பக்தி கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.

அடுத்த சுற்றுலாவாக அரச மாளிகையுடன் மரகதம், பச்சைக் கல் புத்த கோயிலும் Royal palace & Emareld budha  பார்க்கச் சென்றோம்.

இதுவும் முதற் பயணம் போல, வேறும் பல்லின மக்களையும் 2, 3 வாடி வீடுகளில் சென்று ஏற்றிக் கொண்டு தான், மொழிபெயர்ப்பாளருடன் மினி வானில் சென்றோம். மேம்பாலக் காட்சியையும் ஒரு கிளிக் செய்தேன் வானுள் இருந்து.

   

போகும் வழியில் சிலொம் தெருவில் மகாமாரியம்மன் கோயில் இருந்தது.

1860ல் கட்டப்பட்டது இந்தக் கோயில். தனோம் சிலொம் வட்டாரத்தில் உள்ளது. சக்தியின் கோயில், உள்ளே உமாதேவியின் உருவம் உள்ளது என்கிறார்கள். தாய் மக்களும் இங்கு வந்து வணங்குகிறார்களாம். வாகனத்தில் போகும் போது புகைப் படம் எடுத்தேன்.

பட்டுனாம் ஒரு தொங்கல் என்றால் இது மறு தொங்கல் போல. அதனால் போகும் போதும் வரும் போதும் கோயிலைப் பார்த்து வந்தோம். விருந்தாளிகளின் கோயில் என்று தாய் மக்கள் இதற்குப் பெயர் வைத்துள்ளனராம்.

நிறைய இந்தியர்கள் தாய்லாந்தில் கடை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடக் கூடியது. 

போகும் வழியில் சைனா ரவுணையும் பார்த்தோம்.

   

சைனா ரவுண் பாங்கொக்கின் பழைய வட்டாரம். 1780ல் இங்கு வியாபாரிகளாக சீனர்கள் குடிபெயர்ந்தவர்கள். இவர்கள் இன்று தாய்லாந்து மக்களாகவே வாழ்கிறார்கள். பலர் சீன மொழி பேசவே தெரியாதவர்கள்.

 இங்கு மிகவும் பிரபல்யமான தங்கக் கடைகள், சீனப் பாணியில் கட்டிடங்களும், சீன மொழியில் கடைப் பெயர்களும் அமைத்துள்ளனர். 1.4 மில்லியன் சீனர்கள் வாழ்கிறார்களாம்.

தங்க புத்தர் கோயில் உள்ளது. வற் றைமிற் என்று அழைக்கும் இக் கோயிலின் புத்தர் சிலை 3 மீட்டர் உயரமும், 5.5 தொன் சுத்த தங்கத்தால் அமைக்கப் பட்டுள்ளதாம். 

                வாற் ரைமிற்(wat trimit) என்று கூறும் புத்த கோயில்.

இந்தப் புத்தர் சிலையின் கதையானது, துறைமுக விரிவு படுத்தலின் போது சாந்து பூசிய இச்சிலையைப் பாரம் தூக்கி மூலம் தூக்கி வரும் போது, பாரம் தூக்கியை இயக்குபவர் பூமிக்குக் கிட்டவாக உருவம் வரும் போது உருவத்தைத் தவற விட்டு விட்டாராம், விழுத்தி விட்டார். சிலை நொருங்கவில்லை. மேலே பூசிய சாந்துகள் உடைந்து விட்டது. உள்ளே இருந்த சொக்கத் தங்கமான உருவத்தைக் கண்டனர்.

முன்னைய ஆட்சியில் பர்மியர் தாய்லாந்தில் படை எடுத்த போது இப்படி இவ்வுருவத்தை சாந்து பூசிப் பாதுகாத்துள்ளனர். அப்படியே இது பல காலமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

சைனா ரவுணில் எல்லா விதமான சீன உணவுகளும் உணவகங்களில் பெற முடியுமாம். இவை வழியில் கண்ட சைனா ரவுணின் தகவல்கள். சீன பாணியிலமைந்த கட்டிடங்கள் அழகாகவே தெரிந்தன.

–பயணம் தொடரும்.—  

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-1-2009.

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/08/14.html

 

                  

 

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Pranavam Ravikumar a.k.a. Kochuravi
  ஏப் 14, 2011 @ 02:59:17

  Well written.. Explained very nicely. My wishes….!

  மறுமொழி

 2. pirabuwin
  ஏப் 14, 2011 @ 06:19:45

  உங்கள் பயணக் கட்டுரை வெற்றி நடை போடுகின்றது.
  நல் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. vijisekar
  ஏப் 15, 2011 @ 11:31:41

  அன்புச்சகோதரி தாய்லாந்து பெண்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி எழுதினால் மிகவும் உபயோகமாக இருக்கும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 15, 2011 @ 17:23:25

   பயணக்கட்டுரை தானே எழுதுகிறேன். இதில் பெண்கள் வாழ்க்கை முறை அடங்கவில்லை. இது ஏற்கெனவே இலண்டன் தமிழ் வானொலியில் ஒலி பரப்பானது தான். இணையத்தளத்தில் இன்னொருவர் தாய்லாந்துப் பயணம் எழுதியது கண்டேன். நான் தொடாத விடயங்களை அவர் தொட்டிருந்ததும் கண்டேன். நன்றி உங்கள் கருத்திற்கு.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: