184. மனிதம் தேக்கிடு!..

 

 

மனிதம் தேக்கிடு!

 

தூரத்து வெண்ணிலா கண்ணுக்கு அழகு.
தூரத்து வானவில் மண்ணிலே அழகு.
தூரத்து மின்னொளி பரவச அழகு.
தூரத்து பச்சையோ கண்ணுக்கழகு!
நெருங்கு முன் என் நெஞ்சில்
நெடிதுயர்ந்து நின்றாய் நீ!
நெருங்கிய போதேன்! ஏன்!
நெஞ்சிலின்றிக் குடை சாய்ந்தாய்!

அன்புப் பயிரை வளர்த்தெடுத்து
அறுவடை செய்ய எண்ணி
அருகில் நின்று அளவளாவினேன்.
கம்பீரமாய் உயர்ந்த தோற்றம்
கற்பனையின் இலட்சியத் தோற்றம்,
காட்சியில் உணர்ந்தது மாற்றம்.
உன்னை நான் ஏன் சந்தித்தேன்!
என்னை நானேன் ஏமாற்றினேன்!

தன்னலப்பாசியால் கனத்த தலைப்பாரம்,
பிறர் நலமெண்ணா நெஞ்சமது.
நேசத்தாலுணர்ந்த தூரத் தோற்ற
மாயத்திரை விலகிச் சாயமுருகியது.
திறமையாளர்களைத்  தூரத் தள்ளும்
திகம்பர மனம்!…….திகைத்தேன்!
தினையளவு மனிதமாவது உன்னுள்
தேக்கிடு!…..திருத்தம்…..தூய்மையுடைத்து.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-10-2001.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                            
 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kowsy
  ஏப் 17, 2011 @ 13:18:29

  தன்னலப்பாசியால் கனத்த தலைப்பாரம்,
  பிறர் நலமெண்ணா நெஞ்சமது.
  நேசத்தாலுணர்ந்த தூரத் தோற்ற
  மாயத்திரை விலகிச் சாயமுருகியது.
  திறமையாளர்களைத் தூரத் தள்ளும்
  திகம்பர மனம்!…….திகைத்தேன்!

  புரிந்தேன் நான், புகலிடத்தில் இதுவே புதுப் பண்பு என்று உணர்ந்தேன். வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 17, 2011 @ 13:36:17

   Kowsy!..2001 poem this is. This is suitable today also….கர்வப் பூச்சூடி நடப்பதால் தானே பாரமாக இருக்கு பிறரைப் பார்க்கவே சகிக்க முடிவதில்லை…நாம் மல்லிகை முல்லை போன்றவையைச் சூடுவோம். நன்றி கௌரி வருகைக்கும் கருத்திற்கும்.

   மறுமொழி

 2. vasanthachandran
  ஏப் 17, 2011 @ 18:53:26

  உங்தன்னலப்பாசியால் கனத்த தலைப்பாரம்,
  பிறர் நலமெண்ணா நெஞ்சமது.
  நேசத்தாலுணர்ந்த தூரத் தோற்ற
  மாயத்திரை விலகிச் சாயமுருகியது.
  திறமையாளர்களைத் தூரத் தள்ளும்
  திகம்பர மனம்!…….திகைத்தேன்!
  தினையளவு மனிதமாவது உன்னுள்
  தேக்கிடு!…..திருத்தம்…..தூய்மையுடைத்து.

  உங்கள் கவிதை அருமை, எனக்கு பிடித்த வரிகள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 17, 2011 @ 19:18:25

   Oh! thank you so much. இவைகள் தானே எமக்கு இன்னும் எழுது எழுது எனும் உரம் தருபவை. மிகுந்த நன்றி…சகோதரி. ஆண்டவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும்.

   மறுமொழி

 3. கலாம் காதிர்
  ஏப் 18, 2011 @ 19:07:45

  தூரத்துப் பார்வைத் தேடல் தருமென்று
  சாரத்துடன் தந்தாய்ச் சிறந்து

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 19, 2011 @ 06:32:19

   சகோதரா..கலாம் கதிர்!..
   கிட்டப் பார்வை மனதைத்
   தொட்டாலும், சாதக, பாதகமும்
   வெட்ட வெளிச்சமாய் எமக்கும்
   பட்டுவிடுமே!..மாயம் கலையுமே!…வருகைக்கும், கருத்திற்கும்
   மகிழ்ச்சியும் நன்றியும்.நலம் பேணி நீண்டு வாழ இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. SUJATHA
  ஏப் 18, 2011 @ 21:36:02

  தூரத்து வெண்ணிலா கண்ணுக்கு அழகு.
  தூரத்து வானவில் மண்ணிலே அழகு.
  தூரத்து மின்னொளி பரவச அழகு.
  தூரத்து பச்சையோ கண்ணுக்கழகு!

  பார்வைகளில் எல்லாம் தாரத்து பச்சையாக இருக்கும் போது அழகு……கிட்ட நெருங்கும் போது தான்…..அதன் நிறத்தை உணரமுடியும் வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 19, 2011 @ 06:38:19

   மிக்க நன்றி சுஜா!. பாதையின் கற்கள், முள்ளுகளை துப்பரவாக்கிச் செல்வது பழக்கமான ஒன்று. தூரத் திலும் கிட்டத்திலும் ஒரே மாதிரிப் பார்க்கும் மனப் பக்குவம் பழக வேண்டும் என்றும் ஆசை. உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சுஜா.

   மறுமொழி

 5. pirabuwin
  ஏப் 19, 2011 @ 05:10:56

  ‘தன்னலப்பாசியால் கனத்த தலைப்பாரம்,
  பிறர் நலமெண்ணா நெஞ்சமது.
  நேசத்தாலுணர்ந்த தூரத் தோற்ற
  மாயத்திரை விலகிச் சாயமுருகியது.
  திறமையாளர்களைத் தூரத் தள்ளும்
  திகம்பர மனம்!…….திகைத்தேன்!”

  அவ்வளவு அருமை சகோதரி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: