185. சொல்லுக்கும் செயலுக்கும் நிலாத்தூரம்.(பாமாலிகை)

 

 

சொல்லுக்கும் செயலுக்கும் நிலாத்தூரம்.

 

கொள்கைத் தூண்களெனும் வார்த்தைகள்
அள்ளி அமைக்கும் கோபுரம்
கொள்ளை கொள்வது யாவரையும்
சொல்லும் செயலும் நிசமானதும்.

சொற் கருத்தும் – செயலின் நினைப்பும்
வில் – நாணென இணைந்த முனைப்பில்
சொல் – செயலுக்கில்லை தூரம்.
சொல் செயலாகிட இல்லை நேரம்.

சொல்வதைச் செய்யாத மனிதனின்
சொல் – செயலின் தூரம்
கல் தொடா நிலாத்தூரம்.
சொல்லாமலிருப்பது உயர் தரம்.

” சொல்லாமற் செய்வர் பெரியார்.
சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவர்…”
உதாரணம் சொன்னார் ஒளவையார்.

சொல்லெனும் பூ, செயலெனும் காயாய்
பூவாமற் காய்க்கும் பலாமரம் – பெரியார்.
பூத்துக் காய்க்கும் மாமரம் – சிறியார்.
பூத்தும் காய்க்காத பாதிரியாய் – கயவர்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-9-2001.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் அமரர் வியூகன ;(கீழ்கரவையூர்ப் பொன்னையனின்) சாளரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.)

In Tamilauthors.com ….Link

http://www.tamilauthors.com/03/369.html

In Muthukamalam web site :-   http://www.muthukamalam.com/verse/p788.html

 

                                   
 

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  ஏப் 20, 2011 @ 04:22:03

  “சொல்வதைச் செய்யாத மனிதனின்
  சொல் – செயலின் தூரம்
  கல் தொடா நிலாத்தூரம்.
  சொல்லாமலிருப்பது உயர் தரம்”

  என்னைக் கவர்ந்த வரிகள் சகோதரி.

  மறுமொழி

 2. அன்புடன் விஜய் ஆனந்த்
  ஏப் 21, 2011 @ 15:00:29

  அழகான வலைத்தளம் அருமையான படைப்புக்கள் மிக நன்று. தொடர்ந்தும் எழுதுங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
  அன்புடன் விஜய் ஆனந்த்

  மறுமொழி

 3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஏப் 22, 2011 @ 09:17:54

  சொல் – செயலுக்கில்லை தூரம்.
  சொல் செயலாகிட இல்லை நேரம்….
  சொல்வதை செய்வதை விட
  செய்வதை சொல்வது தான் அதிகம் ,வேதா !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 22, 2011 @ 20:11:37

   உண்மை தான் நடா சிவா. இயல்பில் நானும் கூட அப்படித் தான். உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் மனமார்ந்த நன்றி. நேரமிருக்கும் போது வாருங்கள்.நன்றி…நன்றி….

   மறுமொழி

 4. SUJATHA
  மே 11, 2011 @ 19:16:40

  ”கொள்கைத் தூண்களென்னும் வார்த்தைகள் அள்ளி அமைக்கும் கோபுரம்” அருமை
  வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: