வேதாவின் மொழிகள். 11

  

 

கேணி  16-3-2005.
குழந்தையாக கேணியில் (தொட்டிலில்) ஆடி மகிழ்ந்து, ஆழமான கேணியில் (கிணற்றில்) நீர் எடுத்து அருந்தி , கோயிற் கேணியில் (குளம்) கால்கள் கழுவி இறைவனை வணங்கியும், வாழ்வுக் கேணியில் (அகழி) நாற்றமெடுக்கும் சகதியில் அகப்பட்டு நிற்கிறோம்.

மூப்பு.  21-3-2005.
மூப்பில் (முதுமையில்) இளமை வாழ்வு அனுபவக் கோப்பு மகிழ்வுடைத்து. மூப்பாக (பிடிவாதமாக) ஆற்றிய சாதனைகளும், மூப்புடன் (தலைமையுடன்)ஆக்கிய சாதனைகளும் பெருமை தரும்.

மரபு.  16-2-2006.
மரபு காலாதி காலமாக பின் பற்றுவதானாலும், மூட வழக்கங்களைக் காலத்திற் கேற்ப மாற்றலாம்.

பட்டு.  28-4 2004.
பட்டுப் போன மரம் படகாகிறது.
பட்டுப் போன மனிதன் பிணமாகிறான்.

பட்டும் பட்டும் மனிதர் வார்த்தைகளை
பட்டுப் பட்டென வீசி நல்ல இதயங்களைப்
பட்டுவிடச் செய்வது தொடர் கதை.

ஆட்டம். 5-5-2004.
புலம் பெயர் கலாச்சாரமும்,
எமது கலாச்சாரமும் இடிபட்டு
நல்ல பண்புகளைக் கூட
கடித்து ஆட்டம் காண வைக்கிறது.

திரு.  3-5 2004.
ஏதும் செய்வதறியாது யாருமே
திரு திருவென முழிக்கத்
தேவையில்லை. திருவள்ளுவர்
திருக்குறள் படித்தும் மக்கள் தம்
வாழ்வைத் திருத்த முடியும்.

ஈர்   17-5-2004.
ஈரடிக் குறளின் பயிற்சி மூளைக்கு.
ஈர்க்குமாறால் வரும் பயிற்சி உடலுக்கு.

வாசிப்பு.   6-3-2004.
வாசிப்பு வாசம் மிக சுகந்தமானது. அது என்னை ஆனந்த வாசியாக்குகிறது. எவ்வளவு வாசியான நிலைமை அது!.

வாசனை.
பூவோடு சேர்ந்த நாரும் வாசம் பெறுவது போல, நல்ல பழக்க வாசனையே மனிதருக்கு எப்போதும் தேவை. மீன் கடையருகிலிருந்த பூக்கடை போன்று கெட்ட வாசனையால் மனிதன் கேடு அடைகிறான்.

 

 வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                       

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வித்யாசாகர்
  ஏப் 23, 2011 @ 05:05:35

  //மரபு காலாதி காலமாக பின் பற்றுவதானாலும், மூட வழக்கங்களைக் காலத்திற் கேற்ப மாற்றலாம்//

  இந்த பக்குவம் தான் நம் மக்களுக்கு வரவேண்டும் சகோதரி. இது தவறு என்று புரிகையில் மீண்டும் அதில் உழன்று கிடைக்காமல் தனை மாற்றிக் கொள்வதன் மூலம்; ஒரு சமுதாய மாற்றமே நன்மையினை நோக்கி நிகழ்வதை நம் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்; உங்களின் எழுத்தும் அதற்கு சிம்மாசனமாய் இருந்து உதவி புரியட்டும். மிக்க நன்றியும் வணக்கமும் வாழ்த்துக்களும் சகோதரி!!

  வித்யாசாகர்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 23, 2011 @ 08:47:15

   மிகுந்த நன்றி வித்யாசாகர் உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். எனது கருத்துக்களைத் தான் எழுதுகிறேன். வாழ்விலும் பின் பற்றுகிறேன். பௌர்ணமி, அமாவாசைகளில் பெற்றவர்களை நினைத்து விரதமிருக்கவேண்டும் என்பர். இதிலும் சித்திராப் பௌர்ணமி, ஆடி அமாவாசை. நாளுக்கு 5,6 மாத்திரைகள் விழுங்குபவர் இந்த விரதத்தை எப்படி இருப்பது? மாத்திரைக்குப் பின்னோ, முன்னோ உணவு கொள்ளவேண்டும்.அல்லது மருந்தின் சக்தி மயக்கத்தைக் கூட தரலாம். இதனால் இந்த விரதத்தைத் தவிர்க்க முடியும். பெற்றவரைத்தான் நாளும், நிமிடமும் நினைக்கிறோமே! இதை வெளியே கூறினால் பலத்த எதிர்ப்புக் கிளம்பும்..அல்லவா!.. இப்படிப் பல….
   நேரமிருக்கும் போது வாருங்கள்!… நல்வரவு! நன்றி.

   மறுமொழி

 2. Kowsy
  ஏப் 23, 2011 @ 06:35:37

  பொறியாய் வந்த வரிகள் அல்லவா. அதை முறையாய் உணர்ந்து மக்கள் நடக்கும் போது, நிலையாய் உலகில் இடம்பிடிப்பார்கள். மீன்கடை அருகிருக்கும் பூக்கடை மீன் கடை வாசத்தை மாற்றி விடவேண்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 23, 2011 @ 07:46:00

   ஆமாம் கௌரி! வானொலிக்காக எழுதிய வரிகள் தான். இன்னும் உள்ளன. போடத்தான் இன்னும் நேரம் வரவில்லை. முயற்சிக்கலாம். வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி.எப்போதும் நல்வரவு! கருத்திலை விரிக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி. நல் வாழ்த்துகள் உங்கள் முயற்சிக்கும்.

   மறுமொழி

 3. pirabuwin
  ஏப் 24, 2011 @ 05:07:36

  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.அருமையான வரிகள். சம்பந்தப்படவர்கள் உணரவேண்டும்.

  மறுமொழி

 4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஏப் 24, 2011 @ 09:22:16

  பட்டனே வீசும் வார்த்தைகளை பற்றாமல் விடுவதும்
  பட்டுப் போல் வாழ்வை பண்புடனே நெய்வதும் வேண்டும் சகோதரி வேதா !

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: