187. நிலையற்ற வாழ்வில் நிசங்களைத் தேடுவோம்.

 

நிலையற்ற வாழ்வில் நிசங்களைத் தேடுவோம்.

பிறப்பு, வாழ்வு, இறப்பு நிசமானால்
அறுப்பவை அதர்மமின்றி அமைத்தல் நிசம்.
பொறுப்பணர்வு பொன். அது கைவசமானால்,
சிறப்போடொரு நல் மனிதனாவது நிசம்.

காணி, வீடு தோட்டம், துரவு
ஆணியடித்த நிசமென்ற நம்பிக்கை
தோணி கவிழ்த்ததாய் ஆனது போரினால்.
நாணித் தலை குனியும் நிலையுமானது.

அடக்கு முறைகள், அகங்காரத்துள் அசையும்
அவனி வாழ்வில் சுயநலங்கள் நிசம்.
ஆத்ம பலம், உடல் ஆரோக்கியம், எம்
ஆளுமைத் திறமை உறுதியான நிசம்.

உலகைத் தலையில் ஏந்துவதாய்ச் சிலர்
கலகம் பண்ணுவதில் இல்லை நிசம்.
திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்
நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்.

கம்பன் இலக்கியத்தில் கொடி யேற்றினான்
கருணையற்ற கிட்லர் இம்சையில் நிலைத்தான்.
காந்தி அகிம்சைப் போரில் நிசமானார்.
கவிதையில் பாரதி நிலைக்கின்றார் நிசம்.

கவிதையில் நானிதை வரைகிறேன் நிசம்.
கரைகாணாத் துரும்பாய் அலைவதும் நிசம்.
காசினியில் காவும் உடலது அழியும் வரை
கட்டியெழுப்பும் நன்மை தீமைகளே நிசம்.

 

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-2-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானெலியில் 2007 மாசி மாதத்திலும்,
ஐ.ரி.ஆர் வானொலியில் 25-9-2008லும் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam.com     –     http://muthukamalam.com/muthukamalam_kavithai695.htm

 

                           

 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  ஏப் 27, 2011 @ 06:10:29

  பல உண்மைகளை உணர்த்தியுள்ளீர்கள்.நன்றி சகோதரி.

  மறுமொழி

 2. Dhavappudhalvan
  ஏப் 27, 2011 @ 07:15:07

  “கவிதையில் நானிதை வரைகிறேன் நிசம்.
  கரைகாணாத் துரும்பாய் அலைவதும் நிசம்.”

  அருஞ்சொல் கொண்டமைந்த கவிதையை நாடுவதும் நிசம்.
  இயம்பும் சொல் இனிதாக, பகரும் சொல் நிசமாக, உத்தமமாய் அதுவிளங்க படைத்திட்ட உமக்கெமது வாழ்த்து சகோ.

  மறுமொழி

 3. SUJATHA
  ஏப் 27, 2011 @ 20:19:43

  அடக்கு முறைகள், அகங்காரத்துள் அசையும்
  அவனி வாழ்வில் சுயநலங்கள் நிசம்.
  ஆத்ம பலம், உடல் ஆரோக்கியம், எம்
  ஆளுமைத் திறமை உறுதியான நிசம்.

  அருமை….மனிதன் வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டியவையும், உடல் ஆரோக்ய வாழ்வும் கவிதையில் அழகாக புரியவைக்கப்பட்டுள்ளது…..வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 29, 2011 @ 17:19:48

   மிக்க நன்றி சுஜாதா! ஏதோ என்னால முடிந்தது, தெரிந்ததை எழுதுகிறேன். உங்கள் போன்றவர்களின் கருத்து இன்னும் எழுதும் ஊட்டத்தைத் தருகிறது. மிக நன்றி. ஆண்டவன் ஆசீர்வாதம் உங்களுக்கு, உங்கள் குடும்பத்திற்குக் கிட்டட்டும். உங்கள் முயற்சிகளுக்கு நல் வாழ்த்துகள்.

   மறுமொழி

 4. சக்தி சக்திதாசன்
  ஏப் 29, 2011 @ 12:17:19

  அன்பின் சகோதரி வேதா,
  நிசங்களின் பட்டியலை
  நீளமாய்த் தீட்டி
  அதற்குள் வாழ்வின்
  அர்த்தத்தைப் புதைத்து
  வைரங்களான வரிகளை
  வரிசையாய்க் கோர்த்து
  வார்த்த இக்கவிதை
  அருமை ! அருமை !
  அன்[உடன்
  சக்தி

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 30, 2011 @ 07:15:29

   உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மனம் நிறைந்த நன்றிகள் சக்தி சகோதரரே! பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கருத்திடுவது மன ஊக்கம் தந்திடுமல்லவா! வரிசையாக சுவரில் ஆக்கமிட்டு கருத்து வாங்குவதில் திருப்திப் படுவது போல கருத்தைக் கொடுப்பதிலும் திருப்தியடைவது மிகச் சிறப்பு என்பது எனது கருத்து. நல் வாழ்த்துகள். இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கி வழியட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 17, 2011 @ 21:23:43

  Sujatha Anton, Vijayakumar Kumar and வசந்தா சந்திரன் like this..

  Sujatha Anton wrote:- உலகைத் தலையில் ஏந்துவதாய்ச் சிலர்
  கலகம் பண்ணுவதில் இல்லை நிசம்.
  திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்
  நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்.

  பிடித்த வரிகள் …..வாழ்த்துக்கள் ”வேதா.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: