188. பழி நாணுவோனை…

 

பழி நாணுவோனை…

 

மொத்தமும் அறியாதவர் போல்
தித்திக்கும் தேனாய்ப் பேசி
ஒத்து வராது அத்துமீறும் பல
எத்தர்கள் நிறைந்த உலகிது.
புழகப் பழக இன்புறுவது உறவு.
பழகப் பழகப் பகையாகும் உறவு
விலக்குதற்குரியது. விமோசனப் பாதையை
விரும்புதல் விலை மதிப்புடையது.

உறவை நினைக்கும் தோறும்
நகையுறு மனம் வேண்டும்.
தெகையான கேள்வி முளைகள்
வளராத பிள்ளையார் தந்தமாக
குத்துக்கால் இடுவது வீண்!
தலையினிழிந்த முடி போலுறவைச்
சுருட்டி வீசுதல் இலகு.
உருட்டிப் புத்துருவாக்கல் அரிது.

உறவின் அருமை புரியாதேரிற்கு
உறவின் நிர்வாகம் தெரியாதோரிற்கு
உறவு எட்டிக்காயாகிடும்.
அறியாது நட்புக் கொள்ளல்
ஆப்பிழுத்த குரங்கு போன்றதாம்
ஆதி வள்ளுவரும் கூறுகிறார்.
‘ நாடாது நட்டலிற் கேடில்லை
நட்பின் வீடில்லை நட்பாள்பவருக்கு.’

புறமுதுகு காட்டும் உறவு
அறமற்றது ஊட்ட மற்றது.
திறக்காத கதவு விருந்திற்கு
சிறகொடித்துத் துறவு சொல்வது.
வழுக்கி விழமாட்டாய் உறவினால்
பழி நாணுவோனைத் தேடு!
விழி நிறைந்த உறவிற்காய்
களிப்படைவாய்! உருத்துடையாய்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-4-2011.

 

                          

 

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kowsy
  ஏப் 29, 2011 @ 21:31:50

  உறவின் அருமை புரியாதேரிற்கு
  உறவின் நிர்வாகம் தெரியாதோரிற்கு
  உறவு எட்டிக்காயாகிடும்.
  அறியாது நட்புக் கொள்ளல்
  ஆப்பிழுத்த குரங்கு போன்றதாம்

  பசுமரத்தாணி போல் பதிய வேண்டிய சொல்.

  மறுமொழி

 2. Viji
  ஏப் 30, 2011 @ 09:24:43

  புழகப் பழக இன்புறுவது உறவு.
  பழகப் பழகப் பகையாகும் உறவு…….அருமையான வரிகள்…. நட்பின் உன்னதத்தினை விளக்கும் வரிகள்…. வாழ்த்துக்கள் தோழியே….

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 30, 2011 @ 13:10:31

   விஜி! நட்பையும், நட்பின் இனிமையையும், இதன் எதிர் மறையையும் அனுபவிக்கிறோமே! இதிலும் நடிப்பும் இணைகிறதே! இவைகளால் வந்த உணர்வு தான் சகோதரி. மிக்க நன்றி உங்கள் கருத்திற்கும், வரவிற்கும். ஒரு தடவை போடத்தான் சிரமம் .பின்பு பழகிவிடும்.வாழ்த்துகள் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. pirabuwin
  மே 02, 2011 @ 05:00:49

  எல்லா வரிகளும் என்னை கவர்ந்துள்ளன சகோதரி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: