1. கலையும் கற்பனையும். (சிறு அழகுக் குறிப்பு)

   

கலையும் கற்பனையும்.

(சிறு அழகுக் குறிப்பு)

என்ன இது என்று பார்க்கிறீர்களா?

கடந்த வார இறுதியில் இரண்டு விழாக்கள் அடுத்தடுத்து வந்தன. பெண்களென்றாலே அலங்காரத்திற்குக் குறைவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் தானே.

சேலை, தலையலங்காரம், வளையல் மோதிரம், காப்பு, பொட்டு, காலணி, கை-பை என்று எல்லாமே ஓரளவு பொருந்திட அணிவார்கள்.

முதல் நாள் நீல நிறச் சேலை கட்டிச் சென்ற போது பூசிய நீல நிற நகச் சாயத்தை அடுத்த நாள் வேறு நிறச் சேலை கட்டிய போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  கொஞ்சமும் பொருந்தவில்லை.

நகச் சாயம் பூசினால் பூசிய அன்றிலும் பார்க்க அடுத்த நாள் மிக அழகாகத் தெரியும். எனக்கு அதை அழிக்கவே விருப்பமில்லை. நன்றாகப் பிடித்திருந்து. என்ன செய்யலாம் என யோசித்த போது, இங்கு நீங்கள் பார்ப்பது போல மாற்றியமைத்தேன்.

நீல நகச் சாயப் பகுதியைச்  சாய்வாகப் பிரித்து அரைவாசியில் சிவப்பு நிறத்தைப் பூசினேன். ஆனால் சிவப்பு நிறம் மரூண் நிறமாகியது.  அது நீலத்தின் மேல் பூசியதால் தான் அப்படித் தெரிந்திருக்கும். எனது சேலையில் சிவப்பு, இளஞ்சிவப்பு, மரூண் நிறங்கள் இருந்தன. இனி என்ன செய்யலாம் என்று சிந்தித்து, நகத்தின் நுனிப்பகுதியை  இளஞ்சிவப்பு நிறத்தால் மகுடம் போல் பூசினேன்.

இப்போது சேலைக்குப் பொருத்தமான நிற நகச்சாயமாக அது மாறிவிட்டது.
பார்த்தவர்கள் ஆவலுடன் பார்த்தார்கள். வித்தியாசமாக உள்ளதே எனக் கேட்டு விளக்கம் பொற்றதும் கம்பீரம் என்று மகிழ்ந்தார்கள்.
இது போல பின்னர் பேருந்தில் வரும் போதும் டெனிஸ் பெண்கள் வியந்து மகிழ்ந்தனர்.

கற்பனையும், கலையுணர்வும்,  ஊக்கமும் – ஆக்கமும்  தரும்.

இதை நீங்களும் பார்க்கலாமே என்று இங்கு போட்டுள்ளேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-4-2011.

In anthimaalai.com…  –  http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_1328.html

                                      

 

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 02, 2011 @ 04:58:19

  மிகவும் அழகாக இருக்கின்றது.

  மறுமொழி

 2. Satha
  மே 03, 2011 @ 05:44:16

  Nanraaka Irukkirathu. Nirangalum Kavarchiyaka ullathu.Ithu maathiri ovoruvithamana dots , kodukal, mukkonangal ena magazines il paarthullen.
  Nanraaka ullathu.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2011 @ 20:17:12

   Thanks satha. கண் பார்த்தால் கை செய்யும் என்ற எங்கள் பழைய வாசகம் நினைவுக்கு வருகிறது. நாம் ஒரே விதையிலிருந்து முளைத்தவர்கள் தானே! நிறையப் போர் பார்த்து ஆசைப் பட்டதால் தான் இப்படிப் போடுவோம் என்று எண்ணினேன். நன்றி சதா! கருத்து போட்டதற்கு.

   மறுமொழி

 3. Viji
  மே 04, 2011 @ 00:36:57

  மிகவும் அழகாக இருக்கிறது தோழியே…… நல்ல கற்பனையோடு முயற்சி செய்து உள்ளீர்கள்…தொடரட்டும் உங்களின் பணி….. வாழ்த்துக்கள் தோழியே…..

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2011 @ 20:21:59

   Viji!….இப்படியெல்லாம் அவ்வப்போது ஏதாவுது செய்வது தான். இந்த முறை எப்படியோ இங்கு போடும் எண்ணம் வந்தது. நீங்கள் வந்து கருத்துப் போட்டதற்கும் மிகுந்த நன்றி. உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துகள் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Dhavappudhalvan
  மே 04, 2011 @ 05:08:32

  வணக்கம் சகோ. வித்தியாசமான அழகு முயற்சி.

  பதிவுகளை தமிழில் பதித்து விட்டு கருத்துக்களை ஆங்கிலத்தில் பதிக்கிறீர்களே. யோசிக்கிறேன், இதுவும் வித்தியாசமோ?

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2011 @ 20:34:35

   எளிமையான ஆங்கிலத்தில் தானே தருகிறேன். அது உடனே எழுத சுகமானது. அதற்காக ஏன் வருத்தப் படுகிறீர்கள் . ஏற்றுக் கொள்ளப் பழகுங்களேன். தங்கிலிசில் பத்தி பத்தியாக எழுதித் தொல்லை தரவில்லையே. உங்கள் கருத்திற்கும் வரவுக்கும் மிக்க நன்றி. நல் வாழ்த்துகள்.

   மறுமொழி

 5. Jaya Nallapan
  மே 04, 2011 @ 07:33:37

  நல்ல கற்பனை தோழியே, மேலும் பல புதிய முயற்சிகள் தொடர என் வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2011 @ 20:43:17

   யெயா! மிகுந்த மகிழ்ச்சி. இடையிடையே இப்படி வந்து தட்டித் தருவது எனக்கு உற்சாகம் தருமன்றோ! அடிக்கடி புது ஆக்கங்கள் போட்டபடி தானேயுள்ளேன்! மறக்காமல் எட்டிப் பாருங்கள்! உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள். மிக்க நன்றி.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: