20. கவிதை பாருங்கள்(photo,poem)

 

பறவைகள் அழுவதில்லை.
வண்ணத்திப்பூச்சி அழுவதில்லை.
இன்னும் எத்தனையோ அஃறிணைகள் அழுவதில்லை.
ஆனால் மனிதன் மட்டும் அழுகிறான்.
அழுகையை வெறுத்திடுங்கள்.
உற்சாகம் பொங்க உலாவுங்கள்.
மன ஆரோக்கியம் உடலாரோக்கியத்தின் சுயவிம்பம்.

 

 

                   

Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 04, 2011 @ 05:20:52

  அழுகையும் பிற உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்துகின்றன என்பதையும் மறுக்க முடியாது. குழந்தை அழாவிட்டால் தாயால் எப்படி அதற்கு பசிக்கின்றது என்று தெரியும்.உறவினர்கள் இறக்கும் போது உறவுகள் அழாவிட்டால் மரணச் சடங்கு எப்படியிருக்கும்.
  எனது பார்வை இப்படியும் செல்கின்றது.
  ஆனால் உங்கள் பார்வையையும் மறுத்துரைக்கவில்லை சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 04, 2011 @ 20:38:59

   பிரபு! அழுகை பற்றிய உமது வியூகமும் முழுக்க முழக்கச் சரியே. சிலபேர் எதற்கெடுத்தாலும் அழுது வடிவார்களே அப்படியானவர்களுக்காக எழுதியது எனக் கொள்வோம். உமது வரவிற்கு, கருத்திற்கு மனம் நிறைந்த நன்றி. நல் வாழ்த்துகள்.

   மறுமொழி

 2. Viji
  மே 08, 2011 @ 01:05:04

  வாடிபோகும் மலர்களின்
  இதழ்கள் கூட சிரிக்கிறது…
  வாழ பிறந்த நாம்
  ஏன் அழ வேண்டும்…………….. நீங்கள் எழுதிய கவிதை வரிகளும் சரிதான் தோழியே…. அருமை கவிதை வரிகள்…… வாழ்த்துக்கள்….

  மறுமொழி

  • கோவை கவி
   மே 08, 2011 @ 07:34:49

   அன்புடன் விஜி! நாம் அழவேண்டும் என்று கருத்தும் வந்தது. ஒவ்வோரு வகையில் அவரவர் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ள முடிந்த கருத்துகளே. உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. God bless you and your family.

   மறுமொழி

 3. Dhavappudhalvan
  மே 08, 2011 @ 05:47:05

  இன்னும் சிறிது கூர் தீட்டியிருக்கலாமோ என எம் மனது இயம்புகிறது சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 08, 2011 @ 07:46:38

   பல வரிகள் நான் இலண்டன் தமிழ் வானொலிக்காக முன்பு எழுதியவை. (திகதிகளைப் பார்த்தால் விளங்கிக் கொள்ள முடியும்.) அதனாற் தான் மேலதிகமாகக் கூர்மைப் படுத்தாமல் அப்படியே போடுகிறேன். மிக மிகச் சிலவற்றையே மினுக்குகிறேன். எப்படியாயினும் உங்கள் அருமைக் கருத்திற்கு மிகுந்த நன்றி. அனைத்தையும் வரவேற்கிறேன். கூறும் உரிமை உங்களுக்கு உண்டு. மிக்க மிக்க நன்றி சகோதரா! god bless you and your family.

   மறுமொழி

 4. pathmasri
  மே 10, 2011 @ 15:51:54

  nice

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: