31. பெற்றோர் மாட்சி.

 

பெற்றோர் மாட்சி 31.

 

சக்தி, மகாசக்தி நிறைந்தது தாயன்பு.

பெற்றவரின் அன்பை அள்ளிக் கொண்ட பிள்ளையின் முகக் களை மிக பிரகாசமாயிருக்கும். அதன் செயல்களில் அமைதி, நிதானம் கூர்மையிருக்கும். பெற்றவர் அன்பை ஆதரவை எட்ட முடியாத பிள்ளை களைத்து, சோர்ந்து செயற்படச் சக்தியின்றி காணப்படும். முகத்தின் ஏக்கக் களை பார்வையில் புலப்படும்.

4-9-2004.
நெஞ்சில் பால் வார்க்கும் பிள்ளையைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். நெஞ்சில் விடம் ஊற்றும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் துரதிஷ்டசாலிகள்.
நினைவிலும், கனவிலும் பிள்ளைகள் நினைவு.
வாழ்விலும், தாழ்விலும் பிள்ளைகள் நினைவு.
அது பெற்றவர் மனது.

5-9-2004.
மனிதனின்  கொடுமைகளை, குளப்படிகளை  ஆண்டவன் தாங்குவது போல, பிள்ளைகளின் குளப்படிகளை கொடுமைகளைப் பெற்றோர் பொறுக்கின்றனர். பல வகையில் இவர்களும் ஆண்டவர்கள் தான்.

பரபரப்பான, சுமையான, நெருக்கடியான உலகில் நாம் தயாராக, உலகில் உரிமையுடன் ஊன்றிட தேவையான பற்றுக்கோடு என்ற அன்பு பெற்றவர் அன்பு தான்.

அன்பென்ற சொல்லெடுத்து
அகம் நிறைக்கும் அமிர்த சஞ்சீவி.
பாசமென்ற மழை பொழிந்து
பாரில் பாக்கியம் தரும்
பாசம், மனதில் என்றும்
பால் வார்க்கும் அன்பு
பெற்றவர் அன்பு தான்.

12-9-2004.
அன்பெனும் நாணயக் கயிறு மாட்டினால் பாலபருவம் எனும் வண்டி சீராக ஓடும். இதன் மதிப்புக்குரிய  சாரதிகள் பெற்றோர்.
கருவில் உயிரின் ஆதாரம் தாயின் தொப்புள் கொடி. அக் கொடியை ஏற்றியவர் தந்தை எனும் பெயராளர்.
காசினியில் உயிரின் ஆதாரமும் அவர்கள் அன்புக் கொடி தான்.

11-9-2004.
மனித மனக் கோயிலின் மூல விக்கிரகங்கள் பெற்றோர் தான். தாய்மையைத் தவிர உலகில் வேறு எதிலும் கூடுதலான அதிகாரம் பெற முடியாது. ஒரு தாயிற்கு தனது சிறு பிள்ளைகள் மீது முழுமையான அதிகாரம் உள்ளது. அவளது அதிகாரம் அவர்களை உடைக்கவும் முடியும், உருவாக்கவும் முடியும்.

10-12-2006.
மானுடம் நிமிர்த்தும் பெற்றவர் அன்புச் சாரல் ஆற்றலுடைத்து. அதைப் போற்றுதல் பிள்ளைகள் கடன். ஓற்றும் உதடும், ஒரு தொடுகையும் வற்றிடும் போது வேதனை அதிகம்.

9-7-2007.
பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன் என்றில்லாது
பிறப்பு நிறக்க பண்பாக வாழ்ந்து,
இறக்க முன்னர் நல்லவை செய்து
இறக்கமின்றி வாழ நல்ல மனுசியாக வளர்ந்தேன்.

9-12-2006.
பொன் எழில் நிகரொத்தது பெற்றவர்
அன்பு எழில்(வலிமை). அவரோடணையும் ஆதரவு
பூம்பொழில். தேனாய் அவர்கள்
தினம் பொழிந்த அன்பு முத்தத்து
வான் எழில் நிகரான அன்பு எமைக்காத்தது.
நான் எழிலாய் திரும்பக் கொடுக்க அவர் மனம் பூத்தது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

இடுகையிட்டது. 7-5-2011.

                              

 

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 07, 2011 @ 15:39:12

  அனைவரும் இதனை கண்டிப்பாக படிக்க வேண்டும்.மிகவும் தெளிவாக உங்கள் கருத்துக்கள் இருக்கின்றன.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 08, 2011 @ 07:11:02

   பிரபு! எல்லோர் இடுகைகளையும் எல்லோரும் பார்ப்பதில்லையே! இதனால் பல, நாம் அறியாமலே நம்மைக் கடந்து போகிறது! ஜந்து இணையங்களோடு எனக்கு தொடுப்பு இருந்தும் பார்ப்பவர்கள் மிக சொற்பம் தானே! பார்ப்போம்…முயற்சிப்போம்..நம்பிக்கை தானே வாழ்வு! உமது வரவிற்கும், கருத்திடலுக்கும் மிகுந்த நன்றி பிரபு!

   மறுமொழி

 2. SUJATHA
  மே 07, 2011 @ 20:31:10

  அன்பென்ற சொல்லெடுத்து
  அகம் நிறைக்கும் அமிர்த சஞ்சீவி.
  பாசமென்ற மழை பொழிந்து
  பாரில் பாக்கியம் தரும்
  பாசம், மனதில் என்றும்
  பால் வார்க்கும் அன்பு
  பெற்றவர் அன்பு தான்.
  அருமை……..”வேதா”.பெற்றவரை நாம் இன்று மனமார வாழ்த்துவோம்

  மறுமொழி

  • கோவை கவி
   மே 08, 2011 @ 07:15:31

   சுஜா! நேற்று இக்கருத்து போடப்பட்டது7-5-11. இன்று அன்னையர் தினம். நினைப்போம், இன்று மட்டுமல்ல.. எனக்கு எப்போதும் நினைவு தான். அன்னையர் தினம் எந்த நாளுமே எனக்குண்டு. உமது. வருகை, கருத்திடலுக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். God bless you and your family.

   மறுமொழி

 3. கோவை கவி
  மே 08, 2011 @ 19:30:44

  Lingathasan Ramalingam Sornalingam, Anand Maheswaran and 2 others like this..

  Vetha ELangathilakam wrote:- Thank you.

  Yogeswaran Thiyagarajah…wrote .
  NADAMAADIYAA THEIVANGKAL (in face book)

  20 hours ago · ..Yogeswaran Thi yagarajah..wrote:- .
  MAATHAA PITHAA KURU THEIVAM AVAR MALAR ADI THINAM VANNANGKUTHAL VAENNDUM (in face book)

  Anand Maheswaran, Ramanana Ramachandran and Kala Bhuvanarajah like this.(.in face book.)

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: