190. ஆசிரியர் பணி – ஆசிரியம்.

ஆசிரியர் பணி – ஆசிரியம்.

சீலாச்சாரமான எம் தமிழ்
கலாச்சார மரபின் வேர்.
விலாசம் தரும் வானவில்
விற்பன்ன விதைப்பு ஆசிரியப்பணி.
அகக்கண் திறக்கும் திறவுகோல்.
அறிவின் அட்சய பாத்திரம்.
அற்புத அறிவுப்படை ஆசிரியம்.
கற்பக விருட்சம் ஆசிரியப் பணி.

மொழித் தடங்களைச் சிறந்த
மைத் தடங்களாக்கும் ஆசிரியரதை
நல் வழித்தடங்களாக்குகிறார் அறிவாற்றலால்.
நல்லெண்ணத் தடங்களோடு வாழ்வை
வண்ணத்தடங்களாக்குகிறார் சிற்பியாகி.
காலடித் தடம் சிறப்பாயூன்றுவோன்
கல்வியால் சிகரத்தில் தடம் பதிக்கிறான்.
நல்ல பிரம்மவித்தைக்காரன் ஆசிரியன்.

குறிக்கோள் வாழ்விற்குக் கோடிழுப்போன்.
குறிப்பான முகவரியைச் சுட்டுவோன்.
ஆற்றலின் சக்தியால் நல்ல
அறிவிற்குத் தீனி தருபவன்.
அறத் தேரின் அச்சாணியானவர்.
திறமையாளனை ஏற்றும் ஏணி.
சிக்கலற்ற சமுதாயம் ஆக்கும்.
மக்களின் முன்னோடி ஆசிரியன்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-5-2011.

https://kovaikkavi.wordpress.com/2014/09/10/334-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/

(10-5-2011 செவ்வாய்க் கிழமைல் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி கவிதை பாடுவோம் நிகழ்வில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

In Pathivukal web site :-     http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=202%3A2011-06-05-00-01-52&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23

                                  

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 12, 2011 @ 03:55:11

  உங்கள் தமிழ் மீதான காதல் மிகவும் போற்றத்தக்கது.கல்வி ஒன்றே அழிவில்லாத செல்வம்.அந்த செல்வத்தை வழங்கும் நீங்களும் ஏனைய ஆசிரியர்களும் இறைவனால் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.
  உங்களைப் போன்ற புலம் பெயர் தமிழர்களால் நாங்கள் பெருமை அடைகின்றோம்.எங்களுக்கு இப்போது உள்ள ஒரே ஆறுதல் புலம்பெயர் தமிழர்கள் தானே.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2011 @ 20:19:15

   பிரபு! உங்கள் ஆதங்கம் புரிகிறது. நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. முனைவர் இரா.குணசீலன்
  மே 13, 2011 @ 06:49:14

  சிக்கலற்ற சமுதாயம் ஆக்கும்.
  மக்களின் முன்னோடி ஆசிரியன்.

  நன்றாகவுள்ளது தொடர்ந்து எழுதுங்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2011 @ 20:56:09

   இந்த ஆசிரியம் கவிதை எழுதிய பின்பு தான் எனது ஆசிரியப் பணியைப் பற்றி எனது அறிமுகத்தில் எழுதவில்லையே என்று எழுதினேன். இந்த ஆசிரியர்களாலும் தானே நானும் இன்று இதை எழுதுகிறேன். உற்கள் கருத்திற்கு, வரவிற்கும் மிக்க நன்றி.

   மறுமொழி

 3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மே 13, 2011 @ 16:35:04

  சிறந்த சமுதாயத்தை உருவாக்குபவன் நிறைந்த ஆசிரியனே ! பாராட்டுக்கள் !!

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 05, 2011 @ 17:58:43

  இராஜ. தியாகராஜன்2:08pm May 7 wrote:

  தரமான தடங்களின் ஊர்வலம் நடத்தும் கவிதைச் சாரல். வாழ்த்துகள்.
  Vetha wrote:- Mikka nanry. God bless you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: