வாழ்வியற் குறட்டாழிசை. 5

Art by Vetha.

வாழ்வியற் குறட்டாழிசை.  5

அன்பு.

 

மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.

ன்பினால் புன்னகை உதட்டில் வரும்
கண்களில் கண்ணீர் வரும்.

ண்மை அன்பு எத்தனை திண்மைத்
துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.

ண்மை அன்பு ஒருவனுக்கு யானை
பலம் தரும் சக்தியுடைத்து.

ன்பினால், அரசு, வீரம், காதல்
கொடை அனைத்தும் உருவாகும்.

ழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்
மகோன்னத  ஜீவசக்தி  அன்பு.

த்தனை பொருள் பணம் இருந்தென்ன
அன்பிலார் எதுவும் அற்றவர்.

ரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே
அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).

ன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா
சக்தியுடையது உண்மை அன்பு.

ன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்
இன்ப அதிசய ஊற்று.

 

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-5-2011.

In Anthimaalai web site  :-  http://anthimaalai.blogspot.com/2011/07/5_28.html

   

                         
 

Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் இரா.குணசீலன்
  மே 13, 2011 @ 06:26:33

  நல்லதொரு பகிர்வு

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2011 @ 20:50:52

   அன்பின் சகோதரர் இரா. குணசீலன் உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் மிகுந்த மகிழ்வடைந்தேன். இதைவிட மகிழ்வு உங்கள் வலையைப் பார்த்தது. மிக அருமையான விடயங்கள் உள்ளன. அவ்வப்போது சென்று கருத்திடுவேன் என் மனம் நிறைந்த நன்றியைக் கூறுகிறேன்.

   மறுமொழி

 2. pirabuwin
  மே 13, 2011 @ 14:31:49

  அன்பு என்ற சொல் மிகப் பெரியது.அதை நீங்கள் விளக்கிய விதம் மிகவும் அருமை.நன்றி சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2011 @ 21:36:22

   அன்பை என்னால் விளக்க முடியாது இது சிறு துளி. மிக்க நன்றி பிரபு உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். இறையாசி உங்களிற்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மே 13, 2011 @ 16:29:12

  அன்பினைப் பெற்றோர் அதனை உணர்வார் ! நான் உணர்கிறேன் சகோதரி !! நன்றி !!!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 13, 2011 @ 21:40:44

   anpin sakotharare Nada siva! mikka nanry…உங்கள் கருத்திற்கும், உங்கள் வருகைக்கும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 4. SUJATHA
  மே 13, 2011 @ 20:30:51

  அன்பாய் குறளில் வடித்த வரிகள் அருமை…..வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 28, 2011 @ 07:08:23

  Karthiya Karthikesan wrote:-
  நல்லா இருக்கிறது.

  Vetha ELangathilakam wrote:-
  OH!…வாசித்தீங்களா?.. தொடராக எழுதுகிறேன். நன்றி….இறை ஆசி கிட்டட்டும். have a nice day..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: