14. சிறுவர் பாடல் வரிகள். (வண்ணத்திப்பூச்சி).

 

    

வண்ணத்திப்பூச்சி…

விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில்
எண்ணற்ற கோடி அதிசயங்கள்.
வண்ணப் பூச்சிகள் ஏராளம்.
வண்ணத்திப் பூச்சியுமொரு வகையாம்.

ல வர்ணத்தில் இறக்கைகள்
கண்ணைப் பறிக்குது பாருங்கள்!
பார்க்கப் பரவசம் தந்திடும்
ஈர்த்து மக்களை மயக்கிடும்

பூரிப்பாய் அமர்ந்து தேனருந்த
பூவிற்குப் பூவாய்ப் பறக்கும்.
தொட்டால் வண்ணம் ஒட்டும்.
பட்டு இறகுப் பூச்சி.

பொத்தினால் கையினுள் அடங்கும்.
எத்தனை சுதந்திரப் பூச்சி.
எனக்கும் ஒரு ஆசை
வனப்பு வண்ணத்திப் பூச்சியாக.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-5-2011.

                        
 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 18, 2011 @ 04:52:02

  தமிழர்கள் எல்லோரும் வண்ணத்துப் பூச்சியாய் இருக்கவே விரும்புகிறார்கள்.நன்றி சகோதரி.

  நீங்கள் வேறு தளங்களுக்கும் உங்கள் இடுகைகளை பதிவேற்றுவதாக கூறியிருந்தீர்கள்.
  அந்த தளங்களின் முகவரியைத் தர முடியுமா?

  மறுமொழி

  • கோவை கவி
   மே 19, 2011 @ 17:32:35

   எனது வலையில் பதிந்து உள்ள வலைகளுக்கு தானியங்கியாகவும், நான் இணைப்பதன் முலமும் வலை ஆக்கங்கள் உடனுக்குடன் போகிறது. அது தவிர பின் வரும் இணையங்களுக்கு நான் மின்னஞ்சல் மூலமும் அனுப்புகிறேன் அவைகள்….
   1.—-http://www.geotamil.com/pathivukalnew/
   2.—-http://muthukamalam.com/
   3.—-http://www.tamilauthors.com/
   4.—-http://www.vaarppu.com/
   இடையிடையே http://www.alaikal.com/news/ என்றும்…tamilvishai.com..க்கும் எழுதினேன்…இப்போது குறைவு…
   mikka nanry Pirabu your karuththu, and varavukku. God bless you Pirabu.

   மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 02, 2011 @ 19:24:33

  உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்..–

  நன்றிகளுடன்,
  தம்பி கூர்மதியன்
  http://ram-all.blogspot.com/
  “இயன்ற வரையில் இணைந்திடுவோம்-இணைத்திடுவோம்”
  —————————-
  நீங்கள் சற்று நிதானித்து பாத்திருக்கலாம். இரண்டாவது அறிமுகமே நீங்கள் தான்.
  //பொடியன்களா இருக்கும் போது எக்கசக்க பாடல் பாடியிருப்போம். எல்லாம் இப்போ நமக்கு ஞாபகம் இருக்கிறது இல்ல. ஆனா அதை கொஞ்சம் ஞாபகபடுத்தி சுண்டிவிட இங்க ஒருத்தர் கோவை கவியாக நமக்கு வழி செய்கிறார். சிறுவர் பாடல்களை போட்டு தாக்குகிறார்.//

  இப்படி குறிப்பிட்டிருப்பேன்.. பாருங்கள்.

  மறுமொழி

 3. Dr.M.K.Muruganandan
  பிப் 27, 2012 @ 12:43:45

  அருமையான குழந்தைக் கவிதை.
  பொத்தினால் கையினுள் அடங்கும்.
  ஆனாலும் சுதந்திரப் பூச்சி…..

  மறுமொழி

 4. Vathiri C Raveendran
  பிப் 27, 2012 @ 14:37:03

  அருமையானபாடல்.இப் பாடலை அபிநயமுடன் இசையோடு மீட்டாலே இதன்
  இனிமை புரியும். சிறுவர்களும் மகிழ்வோடுலயிப்பார்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 27, 2012 @ 17:22:39

   மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா. கருத்திட்டமைக்கு. நீங்கள் கூறுவது சரி. உண்மை அபிநயததோடு இதைப் பாடினால். அழகு தான் சகோதரா.. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: