தாய்லாந்துப் பயணம். அங்கம் 17 .

எனது பயண அனுபவத்தில் மூன்றாவது பயணமாக
தாய்லாந்துப் பயணம். அங்கம் 17.

முன்னைய  Best bangkok house   வாடிவீட்டில்

   உணவகம்.

காலை உணவுக்கு எமக்கு இரண்டு தெரிவு தான். இதுவா அதுவா என்பார்கள், இதுவென்று அதில் ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும்.

ஆனால்  Ten star hotel ல் காலையுணவுக்குப் பல வகை உணவு செய்து சூட்டுடன் மூடி வைத்திருந்தார்கள்.

 

விரும்பியதைத் தெரிவு செய்து எடுக்கலாம். சலாட், ரோஸ்ற் பாண், பலவகைப் பழங்கள், முட்டை, நூடில்ஸ், பொரியல் சோறு, இறைச்சி, மீன் கறி

என்ன! ஆச்சரியமாக உள்ளதா!

இந்தப் பகல் உணவு போன்றதை ஆபிரிக்க மக்கள் தெரிவு செய்கிறார்கள். பலவகை பழக் கலவை அதாவது ஜாம், வட்டில் அப்பம் போல ஒரு வகை என்று பற்பல விதத் தெரிவுகள். மிக திருப்தியாக, மகிழ்வாக இருந்தது. காலையுணவு மிக அருமை என்று கூறலாம். நானும் மச்சம், மாமிசம் உண்பதில்லை. பயணம் முடியும் வரை நாம்  இங்கே தான் தங்கினோம்.

சுற்றுலாவுக்காக வெளியே போய் ஒரு நாள், இரண்டு நாட்கள் இரவு தங்கி வரும் சுற்றுலாக்களும் இருந்தது. நாம் ஒரு நாள் அரை நாள் பயணங்களையே தெரிவு செய்தோம்.

சற்றுசக்(chatu chak) என்று  ஒரு சந்தை உண்டு. இதைப் பார்க்க விரும்பினோம். ருக் ரக் என்று அழைக்கும் முச்சக்கர வண்டியில் இன்னும் ஏறவில்லை என்பதால் அதில் போவோம் என்று காலையுணவு முடித்துக்  கிளம்பினோம்.

 tuk tak

சைனா ரவுணில் தான் சற்றுசக் இருக்கென்று எண்ணி பேரம் பேசினோம். 30 பாத் என்று பேரம் பேசி முடிவாக்கி பயணித்தோம்.

சிறிது தூரம் போக வண்டிச் சாரதி, அங்கே போக முதல் ஜெம் பலஸ்க்குப்  போவோம் என்று வற்புறுத்தினான். எவ்வளவோ மறுத்தும் கூட அடம் பிடித்தான். ஆக்கினை தாங்காமல் இதோ பார் நேற்று போய் இந்த மோதிரம் வாங்கினோம், அங்கே பார்க்க எமக்கு ஒன்றும் இல்லை என்றோம். அத்தோடு விட்டு விட்டான்.

பிறகு 30 பாத் போதாது இன்னும் கூட தரவேணும், 150 பாத் என்று அந்தச் சாரதி வாகனம் ஓடியபடியே எம்முடன் வாய்த் தர்க்கம் பண்ணினான். 10 நிமிடத்தால் பட்டுனாம் சந்தை வந்தது. இதில் எங்களை இறக்கி விடு உன்னோடு நாம் வரவில்லை என்று இறங்கி விட்டோம். இனி ருக் ரக்கில் ஏறவே கூடாது, இவர்கள் பொல்லாத ஏமாற்றுக்காரர்கள் என்று முடிவெடுத்தோம்.

ஜெம் பலஸ்க்கு எங்களைக் கூட்டிப் போனால் இவர்களுக்கு ஒரு கமிசன் உண்டு என்று நினைக்கிறோம். இல்லாவிடில் என்ன சித்தப்பன் பெரியப்பன் வீடா? யாரைப் பார்த்தாலும் ஜெம் பலஸ்க்கு வா வாவென்று கேட்க! 

பின்பு ஒரு டாக்சி ஒன்று பேசினோம்  100 பாத் என்று கேட்டான், சரி என்று ஏறினோம். ராக்சி மீட்டரும் அவன் கேட்ட பணமும் சிறிது வித்தியாசம் தான். ஆயினும் ஏற்றுக் கொண்டோம். சற்றுசக் எனும் சந்தை சைனா ரவுணில் அல்ல வேறு பக்கத்தில் இருந்தது. நாம் தான் பிழையாக எண்ணி விட்டோம். இது                                          

உலகத்திலேயே மிக நீளமான சந்தையாம். தாய்லாந்தின் பழைய, வடக்கு பேருந்து நிலையத்தின் எதிர் புறத்தில் உள்ளது. பாங்கொக்கின் வடக்கு முனையில் உள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான் திறக்கப் படுகிறது. 8,000 த்திலிருந்து 15,000 கடைகள் உள்ளது. 35 ஏக்கர் பரப்பளவு விஸ்தாரம் கொண்டது. ஒரு நாளுக்கு 2இலட்சம் மக்கள் கொள்வனவுக்கு வருகிறார்களாம்.

எல்லா விதமான பொருட்களும் இங்கு வாங்கலாம். இன்று காணும் பொருள் நாளை இருக்காது. எங்கும் காணாத பொருளும் இங்கு காணமுடியும். திறந்த பொது நிலம். கூடாரம் மாதிரி வெயிலுக்கு மேலே துணிகள் கட்டியுள்ளனர். அங்கு போனதும் உடனே எமக்குத் தொப்பிகள் வாங்கினோம். கொழுத்தும் வெயில். சூரிய வெயிலுக்குக் குளுகுளு சூரியக் கண்ணாடிகள் வைத்திருந்தோம்.

   

வீட்டுச் சாமான்கள், அலங்காரச் சாமான்கள், பூச்செடிகள், பாம்பு, முகமூடிகள், மணிக்கூடு, கைத்தொலை பேசிகள், மரச் சாமான்கள், பலவிதமான பைகள், வெள்ளி நகைகள், பீங்கான் பொருட்கள், செருப்பு, சப்பாத்துகள், உடைகள் இன்னும் பலப்பல. உணவுகளும் விதம் விதமாக இருந்தது.

நுங்கு குலையாக இருந்தது.

 

பார்த்ததும் ஆசையாக வாங்கினோம். நுங்கை வெட்டி பெரிய கண்ணாடிக் குவளையில் போட்டு கரண்டியும் தந்தார்கள். அதை பகல் உணவாகச் சாப்பிட்டோம். நல்ல ருசி என்று இல்லை, சும்மா பரவாயில்லை.

7,8 பேருடன் இங்கு வந்தால் உடனே யாவரும் பேசி இரண்டு இரண்டு பேராக பிரிந்து சுற்றட்டாம். ஏனெனில் காணாமல் போய்விடுவீர்கள் என்கிறார்கள். இடத்தின் படத்தையெடுத்து எங்கு சந்திப்பது என்று பேசி ஒழுங்கு செய்தே சுற்ற வெளிக்கிடுங்கள் என்பது சுற்றுலாத் தகவல்.

சில பொருட்களை வாங்கிக் கொண்டு 3,4 மணி போல மறுபடியும் ஒரு ரக்சியிலேயே அறைக்கு வந்தோம்.

——-பயணம் தொடரும்——–

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
4-2-2009.

I anthimaalai web site:-       http://anthimaalai.blogspot.com/2011/09/17.html

 

                         

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 19, 2011 @ 04:04:37

  ஏமாற்றுக் காரர்களை நினைத்தால் வேதனையாகத் தான் இருக்கின்றது.
  சந்தையின் பரப்பளவு,சந்தையின் தோற்றம், எங்கும் கிடைக்காத பொருட்களையும் வாங்கக் கூடிய தன்மை என்பன மலைக்க வைக்கின்றன.

  அருமை சகோதரி.

  மறுமொழி

 2. unmaivrumbi
  மே 19, 2011 @ 08:10:54

  GOOD POST SISTER !

  unmaivrumbi.
  Mumbai.

  மறுமொழி

 3. இ.சொ.லிங்கதாசன்
  மே 22, 2011 @ 12:58:02

  அன்புள்ள சகோதரி,

  தங்கள் இணையப் பக்கத்தில் ‘தாய்லாந்துப் பயணக் கட்டுரையை’ ஒரே மூச்சில் படித்து முடித்த ‘தீவிர வாசகர்களில் ‘ அடியேனும் ஒருவன். மேற்படி சுவையான பயண அனுபவங்களை மிகக் கவனமாக, மிகுந்த ஞாபக சக்தியுடன் வெளிப்படுத்தியுள்ளீர்கள், உளமார்ந்த பாராட்டுக்கள். மேற்படி தங்கள் பயணக் கட்டுரையை ‘அந்திமாலை’ வாசகர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன். தங்களது பயணக் கட்டுரையை வாரமொன்றுக்கு ஒரு அத்தியாயப்படி வெளியிடுவதற்கு தங்கள் அனுமதியை வேண்டுகிறோம். தங்கள் ஏனைய ஆக்கங்களையும்(அறிவுப் பசிக்கு தீனி போடக்கூடிய எதுவாயினும்) பிரசுரிப்பதற்குச் சித்தமாயுள்ளோம்.

  தங்கள் அன்பையும், ஆதரவையும் நாடும்
  இ.சொ.லிங்கதாசன்
  ஆசிரியர்
  அந்திமாலை

  மறுமொழி

  • கோவை கவி
   மே 22, 2011 @ 15:51:33

   ஓ! மிக்க மகிழ்ச்சி. எனது வலையில் இன்று வரை12ஆயிரத்து546 பேர் பார்த்துள்ளனர்(12546)பங்குனியில் ஒருநாள் 170 பேர் பார்த்துள்ளனர் இன்று 53 பேர் மாலை 5மணி வரை பார்த்துள்ளனர். தாராளமாக உங்கள் வலையில் பயணக் கட்டுரையை ஏற்றலாம் நான் எழுதியது என்றால் சரி. உங்கள் வரவு, கருத்திற்கும் மிக்க நன்றி. நல்லதிட்டம் கிடைக்கட்டும். God bless you and your family.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: