191. மனச்சாட்சி

 

மனமே நீயே சாட்சி .

கனமோ கனமில்லையோ எதற்கும்
தினமொரு சாட்சி கேட்பார்
மனமே சாட்சியென்றால் வழக்கிற்கு
மாறாக அத்தாடசி கேட்பார்.

பிறரைத் திருத்துவதிலும் நாம்
எம்மைத் திருத்திடல் மாட்சி
நல்லவனாய் வாழ்வை நடத்த
நல்ல மனமே சாட்சி

பா வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

samme heading:-   https://kovaikkavi.wordpress.com/2012/04/17/38-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/

(6-3-2001 ல் ரி.ஆர்.ரி வானொலி தமிழ் அலை கவிதை பாடுவோமில்.
21-9-2002ல் ரி.ஆர்.ரி வானொலி கவிதைச்சோலையில் என்னால் வாசிக்கப்பட்டது.
2006 வைகாசி- ஆனி யெர்மனி மண் சஞ்சிகையில் பிரசுரமானது.
30-11-2008ல் இலண்டன் தமிழ் வானொலியில் வை. ஞானலிங்கத்தின் பூஞ்சோலை நிகழ்விலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

         

 

 

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. unmaivrumbi
  மே 21, 2011 @ 09:37:20

  நல்ல கவிதைவரிகள் ! வாழ்த்துக்கள் சகோதரி.

  உண்மைவிரும்பி.
  மும்பை.

  மறுமொழி

 2. Kowsy
  மே 21, 2011 @ 09:47:59

  10 வருடங்களின் பின்னும் புதிதாகக் காட்சியளிக்கின்ற கவிதைவரிகள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   மே 21, 2011 @ 18:52:25

   எனக்கும் ஆச்சரியமாக இருந்தது ஏதாவது திருத்த வேண்டுமா என்று பார்த்த போது தேவையில்லைப் போன்று தெரிந்தது….உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. நேரம் கிடைக்கும் போது வருவதற்கு நல்வரவு! இறை ஆசி உங்களுக்கும் உங்கள், குடும்பத்திற்கும் கிடைப்பதாக!

   மறுமொழி

 3. SUJATHA
  மே 21, 2011 @ 17:04:10

  விருப்பில்லாச் செயலை மானுடன் கொண்டால்
  நெருப்பினில் வண்டாகும் நல்லோர் மனம்.
  கருத்தான செயலை மானுடன் கொண்டால்
  களிப்பில் நல்லவர் மனம் கொண்டாடும்”
  பிடித்த வரிகள்……….அகமனது தூய்மையானால் வையகம் வானுயர்ந்து சிறக்கும் ”வாழ்த்துக்கள் வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   மே 21, 2011 @ 19:02:22

   mikka nanry sujatha. விருப்புடைய செயலாகக் கருத்திட்டீர்கள். விருப்புடன் எனது நன்றிகளைக் கூறுகிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. VASANTHA CHANDRAN
  மே 21, 2011 @ 20:56:44

  சட்டங்கள், தர்மங்கள் நீதியின்றி உலகில்
  சங்கோசம், சந்தேகம் ஏதுமின்றிப் பலர்
  மனச்சாட்சியை உதறித் தூரமாய் ஓடுவார்.
  மன்றத்தில் மகுடம் மதிப்பாகச் சூடுவார்.
  மனச்சாட்சி அற்றோனை நேசிக்க யோசி!
  மனச்சாட்சியுள்ளோனை மனம் துணிந்து நேசி!
  மனச்சாட்சி யென்ற கலங்கரை விளக்கு
  மனிதாபிமானத்தின் ஒரு நந்தா விளக்கு.

  அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 20:23:28

   anpudan Vasantha!…மனதில் தோன்றியதை எழுதுவேன் அது கவிதையாகும். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நேரமிருக்கும் போது வந்து உங்கள் ஆதரவெனும் கருத்திடுதலைத் தாருங்கள். எழுதுபவரின் ஊட்ட மருந்து அது தானே! நன்றி! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  மே 21, 2011 @ 20:57:50

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா wrote:- அற்புதமான சொல்ஆட்சி! அழகான மொழிவளம்!! வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 20:28:24

   sakothrar ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா !மிகுந்த நன்றி. உங்கள் கருத்திடுதல் எனும் விட்டமினை அடிக்கடி தருவது எங்களை உயிர்ப்பிக்கும். மீண்டும் வாருங்கள்! கருத்துத் தாருங்கள்! இறை ஆசி உங்கள் அனைவருக்கும் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. pirabuwin
  மே 22, 2011 @ 05:11:09

  மனச்சாட்சிக்கு எத்தனை சாட்சிகள்.இவ்வாறான வரிகள் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 20:48:48

   பிரபு! உங்கள் வர்த்தை பலிக்கட்டும்! என் புலமையும் விரியட்டும்! ஆண்டவன் அருளட்டும்.உங்கள் புகழும் ஓங்கட்டும்! கருத்திடல், வருகைக்கும் மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்!

   மறுமொழி

 7. அன்புடன் மலிக்கா
  மே 24, 2011 @ 04:47:36

  மனசாட்சியைபற்றிய தங்களின் கவி மிக அருமையான சொல்லாடல் மேடம்..

  மனசாட்சி இழந்தோர் மண்ணில் ஏராளாம்
  அதைக்கண்டும் காணாதோர் மிகவும் தாராளம்
  எதைச்சொன்னாலும் அதற்கும் எகத்தாளம்
  அதை எடுத்துசொன்னால் எள்ளிநகையாடும்
  இதுதான் நவநாகரீகத்தின் மனோபாவம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 21:06:34

   அன்பு மாலிக்கா! நவநாகரீக மனோபாவம் கூறிய உங்கள் நவ கருத்திற்கும், வரவிற்கும் மிகுந்த நன்றி. இந்த ஆதரவு தொடரட்டும். இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிட்டட்டும்

   மறுமொழி

 8. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மே 30, 2011 @ 07:52:37

  மனிதத்தின் சாட்சியை மனம் திறந்து சொன்னது அருமை, வேதா திலகம் அவர்களே !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2011 @ 07:04:03

   மிக்க நன்றி சகோதரர் நடா சிவா! உங்கள் கருத்தும் வருகையும் இங்கு எனக்கு மிக முக்கியமானது. நேரமிருக்கும் போது வாருங்கள்! கருத்திடுங்கள்..நல்வரவு! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இறை ஆசி கிட்டட்டும்!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: