34. நட்சத்திரங்கள்.

 

 

நட்சத்திரங்கள்.

வானில் தொங்குமிவை சரவிளக்கா!
வானிலே ஒரு கார்த்திகைத் தீபமா!
ஈர உடலிலொட்டிய காய்ந்த மணலா!
வைரங்களோ! கண் பறிக்கும் போலிகளோ!

மெழுகுவர்த்தித் தீபத்தால் நான்
ஒழுகவிட்ட நீருள் மணிகளா!
மாதுளை முத்து மணிகளையென்
மழலை உதறிவிட்டாளோ!

வான மல்லிகைப் பந்தலின்
மின்னும் அழகு மல்லிகைகளோ!
நீலமேகக் கன்னியுன் மேனியில்
மின்னும் நவீன அழகுப் பொட்டுகளோ!

சாலம் காட்டும் மின்மினிப் பூச்சிகளோ!
நீலப் பட்டில் தைத்த முத்துக்களோ!
வானக் கடலின் இரவுத் தங்க
மீன்குஞ்சு நட்சத்திரங்களோ!

கவிதையாம் சொற் சித்திரம்
விதைத்த பாடுபொருள் – நட்சத்திரங்கள்.
இதயக் கலசத்தால் கொட்டி வழிந்தவை
தமிழ் சொற் குவியல் நட்சத்திரங்கள்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-11-2010.

In Tamilauthors.com…(link)

http://www.tamilauthors.com/03/281.html

                               

                          

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 22, 2011 @ 05:07:21

  என்ன வைர வரிகள்! அருமையோ அருமை.நீங்கள் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதலாம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 20:46:06

   பிரபு! அப்படியோ! உங்கள் ரசனைக்கு நன்றியும், மகிழ்வும். கருத்திற்கும் வருகைக்கும் கூட. நேரமிருக்கும் போது வாங்கோ! இறை ஆசி உங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  மே 22, 2011 @ 14:33:16

  OH!…nanry Pirabu!…..முயற்சி எமது. பரிசு யாருடையதோ. எமக்கு உரிய நல்லது நடக்கட்டும். உமது கருத்து, வருகைக்கு மிக்க நன்றி.இறை ஆசி கிட்டட்டும் .

  மறுமொழி

 3. pathmasri
  மே 24, 2011 @ 03:52:49

  மிக மிக அழகிய அர்த்தம் நிறைந்த வரிகள்.கவிதை எழுத எண்ணுபவர்களுக்கு, போட்டி ஏற்படுகிறதோ இல்லையோ நிச்சயம் பொறாமை ஏற்படும்.எனக்குத் தோன்றவில்லையே என்று நான் பொறபமைப்பட்ட சில வரிகள்….
  1.ஈர உடலிலொட்டிய காய்ந்த மணலா!…
  2.மாதுளை முத்து மணிகளையென்
  மழலை உதறிவிட்டாளோ!…..
  3.வானக் கடலின் இரவுத் தங்க
  மீன்குஞ்சு நட்சத்திரங்களோ!

  ப்ரியமுடன்,
  சிரபுரத்தான்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 21:19:20

   மிக்க நன்றி. உற்கள் சொற்பிழையைத் திருத்தி போட்டுள்ளேன். நல்ல கருத்திட்டிர்கள்.வருகைக்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. மீண்டும் வாங்கோ! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. pathmasri
  மே 24, 2011 @ 03:55:29

  போட்டி என்பது தவறுதலாக போட்டி என்று பதியப்பட்டுவிட்டது.
  ப்ரியமுடன்,
  சிரபுரத்தான்.

  மறுமொழி

 5. SUJATHA
  மே 24, 2011 @ 10:46:08

  கவிதையாம் சொற் சித்திரம்
  விதைத்த பாடுபொருள் – நட்சத்திரங்கள்.
  இதயக் கலசத்தால் கொட்டி வழிந்தவை
  தமிழ் சொற் குவியல் நட்சத்திரங்கள்.

  …………..கவி வரிகளில் பிடித்தவை. வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 21:03:03

   ஓ! பிடித்தவரிகளா! நல்லது சுஜாதா! எனக்காக நேரம் ஒதுக்கிக் கருத்துப் போடுவதற்கு மகிழ்வும் நன்றியும். உற்சாகம் பிறக்கிறது அனைவர் கருத்தக்களாலும். இறை ஆசி கிட்டட்டும். மீண்டும் வாங்கோ! கருத்துத் தாங்கோ!

   மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 15, 2011 @ 19:19:54

  வசந்தா சந்திரன், Vijayakumar Kumar and Chandran Kandiah like this.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: