வாழ்வியற் குறட்டாழிசை. 6 (கோபம்)

Art by Vetha.

வாழ்வியற் குறட்டாழிசை.. 6

கோபம்.

பெரும் மனித சக்தியல்ல கோபம்
உருப்படாத மாபெரும் தவறு.

அறியாமையின் திரள்வு பெரும் கோபம்.
வெறியாகி சுயத்தைத் தின்றிடும்.

தனியன் கோபம் உருண்டு திரண்டு
மனிதனின் குடும்பப் பகையாகிறது.

குடும்பப் பகை உருண்டு திரண்டு     
சமூகம், நாட்டுப் பகையாகிறது.

வன்முறை நிறைந்த தீவிரவாதத்திற்குப் பெரும்
கோபமே முதலான படியாகும்.

கோபமொரு சதுரங்கம். காய் நகர்த்தலில்
பகையை நட்பாக்குவோன் வெற்றியாளன்.

அடுத்தவர் மீது ஏவும் கோபம்
தொடுத்தவருக்கே பாதிப்பு உருவாக்கும்.

கோபம் அடுத்தவருக்கு வலி ஏற்படுத்துவதில்
கோபக்காரன் மிக மகிழ்வான்.

மதகௌரவம், கொள்கைகள் நிலையூன்றத் திணிக்கும்
கோபம், வன்முறைக்கு அழைக்கும்.

கோபத்திற்கு இன்பத்தை விலையாக்குதலிலும் அமைதியாக
இருக்கப் பழகுதல் நன்மையாகும்.

நாம் கோபப்படும் போது நம்
நல்ல குணாதிசயங்களை மிதிக்கிறோம்.

கோபம் ஒரு செய்தி, அதன்
காரணத்தைக் கண்டிடல் அவசியம்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-5-2011.

In Anthimaalai web site:-       http://anthimaalai.blogspot.com/2011/08/6.html

    

                                    

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 24, 2011 @ 04:18:49

  “கோபம் ஒரு செய்தி, அதன்
  காரணத்தைக் கண்டிடல் அவசியம்.”

  கோபம் அவசியம் தேவை.அப்போது தான் வெற்றி பெற முடியும்.
  உதாரணமாக எம்மை ஒருவன் அடிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.அந்த நேரத்தில் அடிக்க எங்களால் முடியவில்லை.ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் திருப்பி அடிக்க முடியும்.அதுவரை கோபம் எம்மோடு இருக்க வேண்டும்.அப்போது தான் திருப்பி அடிக்க முடியும்.

  அதற்காக நான் வன்முறையை பிரயோகிப்பவன் என்று தவறாக நினைக்க வேண்டாம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 21:10:58

   அன்பின் பிரபு! கருத்துகளிற்கு எப்போதும் நல்வரவு தான். எல்லாக் குணங்களும் அளவோடு இருப்பது சிறப்புத் தரும். அது அளவு மீறும் போது தான் ஆபத்து வருகிறது. உங்கள் கருத்து, வரவு மகிழ்வு தருபவை. மிக்க நன்றி.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ஸ்ரீஸ்கந்தராஜா
  மே 24, 2011 @ 16:25:21

  அழகு தமிழில் வாழ்வின் விழுமியம் கூறுகின்றது!
  அற்புதம்! வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

  • கோவை கவி
   மே 24, 2011 @ 21:27:06

   mikka nanry. sakotharar! Sri! ungal வரவிற்கும் வரிகளுக்கும் மிகிழ்ச்சியும், நன்றியும். இவை மிகுந்த பெறுமதியை மனதிற்கு ஏற்றுபவை. மறுபடியும் வர கருத்திட இறையருள் கூடட்டும்.

   மறுமொழி

 3. கோவை கவி
  மே 25, 2011 @ 06:11:48

  கலாநிதி தீண்டா மெழுகுகள்:- “”டைம் இருக்கும்போது வந்து படிக்கிறேன் மன்னிக்கவும்!””

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 25, 2011 @ 06:17:55

  Bala Ganesan Sadhasivam wrote:- Kobam iyalamaiyin velippadu mattumalla

  Aathangangalin seyalpadugalumthan

  Arumaiyana karutthukkal
  Pakirvukku nandri vetha mam 🙂

  மறுமொழி

 5. மன்னை செந்தில்
  மே 31, 2011 @ 01:28:00

  ஹ்அத்ட்கோபம்தனை..அழகாய் வகைப்படுத்தினீர் விளைவும் ..உரைத்தீர்..மிக நன்று

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 02, 2011 @ 07:38:19

   அன்பின் சகோதரர் செந்தில்
   உங்கள் மேலான கருத்து பார்த்து மகிழ்வடைந்தேன். கருத்துப் போடுபவரின் வலைத் தொடுப்பு மெயிலில் அதோடு சேர்ந்து வரும், உடனே அங்கு சென்று கருத்துப் போடுவேன். இங்கு அந்தத் தொடுப்பைக் காணோம். மிக்க நன்றி சகோதரரே! மீண்டும் வந்து உங்கள் மேலான கருத்தைத் தந்து ஊக்கம் தாருங்கள். இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: