192. வினைத்திட்பம்.

 

 

வினைத்திட்பம்.

 

முயற்சித் திருவினையைக் கண்டீரோ!
பயிற்சியின் உயர்ச்சியைக் கண்டீரோ!
அயர்ச்சியில்லாக் கால மயிலின்
வியப்புடைத் தோகை விரிப்பின்
நயம் கண்டீரோ! ஆனந்தம்!
வாய்ப்பின் அற்புதம்! பரமானந்தம்!

னந்தம்! அங்கீகாரம் ஆனந்தம்!
ஆனந்தம்! சங்காரமின்றி வழங்கும்
அனந்த ஊக்கம் ஆனந்தம்!
ஓங்கார பலத்தில் ஓசையின்றி
ஓங்கிடும் வினைத் திட்பம்
சிங்காரமாய் அரங்கேறல் ஆனந்தம்!

நிலையூன்றும் சுயநலச் சுழிகள்,
அலையிழந்து சிக்கும் மனிதன்,
நிலையாகப் போராடி எட்டும்
கலையான வெற்றி கண்டீரோ!
விலையற்ற  இலக்கு எட்டும்
நிலை, வாய்ப்பு! ஆனந்தம்!.

யிரோட்ட வாழ்வில் நிதம்
போராட்டம் பல விதம்.
தட்டுங்கள் திறக்கப்படும் வேதம்.
எட்டுங்கள் வாய்ப்பிற்கு நிதம்!
தேரோட்ட இலக்கின் நோக்கு
நீராட்டும் வாய்ப்பு! வியப்பு!

ற்றும் வீரியக் கனவு
இற்றிடாது சிந்து பாடும்!
வற்றிடாக் கடலாய் உந்தும்!
உற்ற காலத்துத் திருவினையால்
வெற்றி காணலாம் வினைமனம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-5-2011.

 

                              

 

 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  மே 26, 2011 @ 13:25:15

  எல்லா வரிகளும் கலக்கல் ரகம் சகோதரி.இறைவன் கவித்திறனையும், சொற்திறனையும் அள்ளித் தந்துள்ளான் உங்களுக்கு.
  மிகவும் பயனுள்ள கருத்துக்கள்,ஊட்டச்சத்துக்கள்.

  மறுமொழி

 2. SUJATHA
  மே 26, 2011 @ 14:29:27

  நிலையூன்றும் சுயநலச் சுழிகள்,
  அலையிழந்து சிக்கும் மனிதன்,
  நிலையாகப் போராடி எட்டும்
  கலையான வெற்றி கண்டீரோ!
  விலையற்ற இலக்கு எட்டும்
  நிலை, வாய்ப்பு! ஆனந்தம்!.

  பிடித்த வரிகள்……போராட்ட வாழ்க்கையில் ஆனந்தம் பெருகும்
  வாழ்த்துக்கள் ”வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   மே 28, 2011 @ 15:38:07

   சுஜாதா! எட்டிய வெற்றி ஒன்றின் மகிழ்வில் எழுதிய வரிகள். அப்படியே என் உணர்வைப் பிரதிபலித்தேன்.சுஜாதா! வந்து கருத்துப் போட்டதற்கு மிக மகிழ்ச்சி நன்றி.

   மறுமொழி

 3. கோவை கவி
  மே 26, 2011 @ 17:39:14

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan wrotr:- வித்தியாசமான வார்த்தைத் தொடுப்புகள். நன்று

  மறுமொழி

 4. கோவை கவி
  மே 27, 2011 @ 06:23:28

  Vijayalakshmi Viji and பனித்துளி சங்கர் like this..

  Vijayalakshmi Viji wrote:- நல்ல கவிதை வரிகள் தோழியே…..படித்தேன்….. உயிரோட்ட வாழ்வில் நிதம்
  போராட்டம் பல விதம்.
  தட்டுங்கள் திறக்கப்படும் வேதம்.
  எட்டுங்கள் வாய்ப்பிற்கு நிதம்!
  தேரோட்ட இலக்கின் நோக்கு
  நீராட்டும் வாய்ப்பு! வியப்பு!………..எனக்கு பிடித்த வரிகள்….வாழ்த்துக்கள் தோழியே

  மறுமொழி

 5. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மே 30, 2011 @ 07:46:07

  ஓங்கார பலத்தில் ஓசையின்றி
  ஓங்கிடும் வினைத் திட்பம்
  சிங்காரமாய் அரங்கேறல் ஆனந்தம்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2011 @ 06:58:00

   வினைத் திட்பம் ஒன்று வெற்றியான மகிழ்வில் எழுதியது. எனது தாய்லாந்துப் பயணக் கட்டுரை அந்திமாலை .கொம்மில் தொடராக வருகிறது.
   http://anthimaalai.blogspot.com/2011/05/blog-post_22.html m
   அதைக் கவிதையில் காட்டினேன். சிவா! மிக்க நன்றியும் மகிழ்வும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. கோவை கவி
  ஜூன் 15, 2011 @ 19:18:35

  தமிழ்த் தோட்டம், Dr.Muttiah Kathiravetpillai Muruganandan and 2 others like this..

  2-3 comments.

  Yogeswaran Thiyagarajah wrote:-
  akka valaipinnalil dr muthaiah kathiravetpillai murukaananthan ullar. avarum kavithaikalil nalla eedu paadu

  May 26 at 9:19am · Vetha ELangathilakam wrote:-
  valaipinnal.il..where ..? Do you know the link..? Thank you for the message..

  May 26 at 9:27am · Yogeswaran Thiyagarajah wrote:-
  if you see my my facebook you will see. i wish to inform about you. then only kavi will grow

  May 26 at 9:29am · .தமிழ்த் தோட்டம் wrote:-
  பாராட்டுக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: