பெற்றோர் மாட்சி 33.

 

 

 

பெற்றோர் மாட்சி 33.

 

17-11-2007.
சொர்க்கம் என்ற வாழ்வை இனிமையான
வர்க்கமாக்கு என்று பெற்றவரெத்தனை
தீர்க்கமாய் எம்மை வளர்த்தார்.
தர்க்கங்களும் தியாகங்களுமாய் வளர்த்தார்.
சொர்க்கம் கையினில் வருமென்று
வேர்க்க விறுவிறுக்க நாமும் பாடுபடுகிறோம்.

16-9-2007.
எங்கள் வாழ்வின் கலங்கரை விளக்குகள்
பொங்குமனுபவ, ஆதரவின் அரிச்சுவடி எழுத்துகள்.
மங்காத பாசமுடைய இனிய பெற்றவர்.
பொங்குமன்பின் அட்சய பாத்திரங்கள்.
இங்கிவ்வுலகில் வாழும் பேசும் தெய்வங்கள்.
எங்கும் வியாபித்த இறைவனுக்குச் சமமானவர்கள்.

ஆவணி-2007.
பெற்றோரின் ஆதரவின்றேல்
முற்றாத பிஞ்சு மழலைகள்
சற்றேனும் முன்னேற முடியாது.
வற்றாத அன்பிலும், அனுபவத்திலும்
குற்றாலம் அருவியில் குளிப்பதாய்
பற்றும் நம்பிக்கையில் நாம்
குவிப்பது வெற்றிகளையே.

15-9-2007.
துயர்களைத் துரத்தத் துணையானவர்கள்.
துணிவைத் துடுப்பாகத் தர முயன்றவர்கள்.
துருவநட்சத்திரமாக எம் மனதில் உள்ளவர்கள்.
துடிப்புடை எமதுயர்வின் சிந்தனையுடையவர்கள்.
துலக்கமாகக் கூறமுடியும் வேறு யாரது?
துயிலாத கண்ணாகவெமைப் பாதுகாத்த பெற்றோரே.

24-1-2009.
முதியோரான பெற்றவர் தரும்
முதிர்ந்த சிந்தனைகளை நாம்
மனமுவந்து ஏற்று நடக்கலாம்.
முகமூடியற்ற அனுபவ உரையது.
முன்னுரையாகுமிது பேரக்குழந்தைகளுக்கு.
முதன்மையான வழிகாட்டியுமாகும்.

தை -2009.
பூமியின் வாழ்க்கை, உறவினால்
பூத்துக் குலுங்கக் கிடைத்த பொக்கிஷம்.
பூமி போல் பொறுமையுடையவர் பெற்றோர்,
பூப்போல் அவர்களைப் பேணுங்கள்.
பூமியில் உங்கள் பாதை நிம்மதியில் பூக்கும்.
பூக்குமேயதனால் சிறந்த வாழ்வு அனைவருக்கும்.

 

ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(முதற் படம் – நன்றி ஆனந்தவிகடன்)

 

                         

 

 
 

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மே 30, 2011 @ 08:05:48

  “பூமியின் வாழ்க்கை, உறவினால்
  பூத்துக் குலுங்கக் கிடைத்த பொக்கிஷம்.
  பூமி போல் பொறுமையுடையவர் பெற்றோர்,
  பூப்போல் அவர்களைப் பேணுங்கள்”

  மிகவும் உண்மை சகோதரி ! அருகில் இருக்கும் போது அது தெரிவதில்லை! தூரம் இருக்கும் போது அது விடுவதில்லை !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2011 @ 06:28:48

   அன்புடன் சிவா! நேற்றும் உங்கள் வலைப்பக்கம் போனேன். பழைய இடுகையே இருந்தது. மிக்க நன்றி என்னை நினைத்து வந்து கருத்து போட்டதற்கு. எல்லாவற்றையும் பார்த்து பதிலிட அமர்ந்துள்ளேன், நேரமிருக்கும் போது வந்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் . இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 02, 2011 @ 18:02:36

   கை நழுவிய பின்பு தானே கருத்தாக எதையும் எண்ணுவோம். பெற்றோர் விடயமும் அப்படியே. உங்கள் கருத்து, வருகைக்கும் மிகுந்த நன்றி சகோதரரே! ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. pirabuwin
  மே 31, 2011 @ 03:51:12

  ‘துயர்களைத் துரத்தத் துணையானவர்கள்.
  துணிவைத் துடுப்பாகத் தர முயன்றவர்கள்.
  துருவநட்சத்திரமாக எம் மனதில் உள்ளவர்கள்.
  துடிப்புடை எமதுயர்வின் சிந்தனையுடையவர்கள்.
  துலக்கமாகக் கூறமுடியும் வேறு யாரது?
  துயிலாத கண்ணாகவெமைப் பாதுகாத்த பெற்றோரே.”

  நிதர்சனமான உண்மை வரிகள் இவை.இந்த பதிவுக்காக உங்களுக்கு நன்றிகள் பல உரித்தாகட்டும்.வாழ்க வளமுடன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2011 @ 06:34:36

   பிரபு! நாம் எழுதுவது எல்லாமே எல்லாரையும் கவர்வதில்லை. சிலது மிக நன்றாக அமைந்து விடும்.
   உமது ஆதரவான கருத்திற்கும், வரவிற்கும் மிகுந்த நன்றி. மகிழ்ச்சியும் கூட. நேரமிருக்கும் போது வந்து உமது ஆதரவைத்தாரும். இறை ஆசி உமக்கும் உமது குடும்பத்திற்கும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: