22. மொழிச் சிற்பவியல்.

 

மொழிச் சிற்பவியல்.செந்தமிழ் அருங்காவினில் நுழைந்து
அந்தமில்லா அருந் தமிழெடுத்து 
செங்கரும்புச் சாறில் தோய்த்து
சங்கம் வளர்த்த தமிழது
பொங்கிப் பாயுது கணனியில்.


ரு வொன்றைக் கவிதையுள்
உருவாக்கி உலகிற்கோர் உவப்பான
தகவலை, செய்தியை உருவேற்றும்
நற் போதனையைத் தருவதன்றோ
இவ் விதைப்பு நிலை.


காவிடும் அனுபவம், கற்பனைகள்
பூவிரிக்கும் பல்லுணர்வுகள்
காவிரியாகும் நாளங்களால் மேவி
தாவித் தமிழ் குழைக்கும்.
பாவிரித்துப் பதிக்கும் எழுதுகோல்.


லக்கணம் மீறியது புதுக் கவிதை.
இலக்கணமுடையது மரபுக் கவிதை.
வழக்கம் என்று ஒன்றும்
வழமை மாறலென்று ஒன்றும்
புழக்கமாகிறது செம்மை வரிகளாக.


விதை ஒரு இரகசியமல்ல.
தூவிடும் பெரும் பரகசியம்.
சொற்களின் அமைப்பில் அழகுச்
சிற்ப மாளிகைகள், கோபுரங்கள், 
சித்திரச் சிலைகளாக்கல் அற்புதம்!     


அற்புதம்! இன்பம்!


 
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க். 
31-5-2011.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-5-2011.

In Pathivukal web site this poem :-  http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=273%3A2011-07-14-00-50-44&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23

 

                         

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  ஜூன் 01, 2011 @ 04:39:19

  புகழ வார்த்தைகள் இல்லை. மிகவும் சிறப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 01, 2011 @ 06:22:37

   mikka nary Pirabu! Thank you for your presence and lovly vaarthaikal. come again .God bless you and your family.

   இக்கவிதை யெர்மனி மண் சஞ்சிகையில்
   2011-வைகாசி – ஆனி இதழில் 33ம் பக்கத்தில்
   பிரசுரமானது
   மண் இதழுக்கு மிக்க நன்றி

   மறுமொழி

 2. தம்பி
  ஜூன் 01, 2011 @ 11:02:54

  உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.. நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்..

  http://blogintamil.blogspot.com/2011/06/blog-post.html

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 02, 2011 @ 19:15:04

   In valaichcharam I wrote :- kavithai said…
   அன்பின் ராம்! எப்படிச் சொல்லலாம் ஒரு சின்ன அறிமுகம், ஒரு செல்ல அறிமுகம் என்றும் சொல்லலாமா! கோவைக்கவியை எழுதியுள்ளீர்கள் மனமார்ந்த நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் பயணம் வெற்றிநடை போட எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.-Kovaikkavi.(Vetha. Denmark)

   மறுமொழி

 3. கோவை கவி
  ஜூலை 17, 2011 @ 07:56:04

  Sujatha Anton and Vijayakumar Kumar like this..

  Sujatha Anton wrote:-
  கவிதை ஒரு இரகசியமல்ல.
  தூவிடும் பெரும் பரகசியம்.
  சொற்களின் அமைப்பில் அழகுச்
  சிற்ப மாளிகைகள்;, கோபுரங்கள்;,
  சித்திரச் சிலைகளாக்கல் அற்புதம்!
  …அற்புதம்! இன்பம்!

  பிடித்த வரிகள் அருமை ”வேதா” வாழ்த்துக்கள் !!!!!!

  Vetha wrote:-
  Thank you so muck suja! God bless you. all

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 04, 2011 @ 20:38:37

  Sujatha Anton likes this..

  Sujatha Anton wrote:-
  கரு வொன்றைக் கவிதையுள்
  உருவாக்கி உலகிற்கோர்
  உவப்பான தகவலை, செய்தியை
  உருவேற்றும் நற் போதனையைத்
  தருவதன்றோ இவ்விதைப்பு நிலை.

  அருமை….. கவிதை பொருள் உணர்வுகளின் எடுத்துக்காட்டுகள். வளரட்டும் தமிழ்ப்பணி!!!!!!!!!!!!!!!!​!

  Vetha wrote:- Thank you Sujatha. God bless you all.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: