22. கவிதை பாருங்கள்(photo,poem)

 

முகநூலில் இது படம் வேறு வரிகள் வேறாகப் போட்டிருந்தேன்.

வேதாவின் மொழிகள்.. 12

 

வேதாவின் மொழிகள். 12

ட்டுப்பாட்டில் வளர்ந்தவன் பிறர் கருத்தைக் கனம் பண்ணுவான்.

ண்பாடு கலாச்சாரம் போல சாதியமும் மனிதனில் ஊறியுள்ளது. எத்தனை பாடுபட்டாலும் சல்லி வேரைத்தான் அறுக்க முடியும், ஆணிவேரை யல்ல. தீ, குளிர், உயர்வு, தாழ்வு என்று கோசமிடுவதை விட அறிவைப் பெருக்கு! மனித நேயம் வளர்! மனிதனாக வாழு! உலகம் மதிக்கும்.

ங்கள் கருத்து விரும்பும் வலைத்தளக்காரர் தங்கள் கருத்தையும் எங்களுக்குத் தரலாமல்லவா? இது தானே ஒருவருக்கு ஒருவர் செய்யும் உதவி. இரு கரங்களும் தட்டினால் தானே சத்தம் ஒன்று பிறக்கும்! ஒரு கரத்தினால் விளைவது சுய பயிற்சி மட்டும் தானே!

13-8-2007.
லட்சியப் பொறி புகழ்ச்சியால் மட்டுமல்ல
இகழ்ச்சியாலும் கூட ஊதி எரியப்படும்.

னக்கு நீ நல்லவனாகு. அது தான்
உலகுக்கு நீ நல்லவனாகக் காட்டும் வழி.
ஆகவே இதற்கு மனதில் முதலில்
ஐயப்பாட்டை முற்றாக நீக்குங்கள்.
ஐயமற்ற சுதந்திரமே செயற்பாடு தரும்.

வாழ்த்தவில்லையானால்  உலகு வாயாரத்திட்டும்.
வாழ்த்தி விட்டாலோ வார்த்தையின் நீள அகலம் அளக்கும்.

ணவ மனப்பாங்கிலல்ல, அறிவு
பூணவா கொண்டு காலமுழுமையும்
மாணவ மனப்பாங்கில் கற்கலாம்(உயரலாம்)

2005ல்
சிபாரிசு, பந்தம் பிடித்தல், சாமரம் வீசுதல், ஒத்தடம் கொடுத்தல் என்பவை மூலம் பல இடங்களில் தரம் பிரிக்கப் படுகிறது. திறமையாளர் மௌனமாக இருந்தாலும் தரம் என்று பின் தள்ளப் படுகிறார்கள்.

9-8-2005.
ருவருப்பான அலட்சியம் விலக்க
பெருவிருப்பான கூட்டுறவு செழிக்க
கூறுபடாது மனிதம் வாழ்ந்திட
ஊறுபடாத சிந்தனை ஊற்றாய்
வேறுபாடின்றி விதைத்த வார்த்தை
‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’
இதை மதிக்காதவர்கள் அதைக்
குறுக்காகக் கிழித்து வீசலாம்,
கிறுக்குடன் தீயும் வைக்கலாம்.

பூமாலை, புகழ்மாலை காமாலைக் கண்ணாக்கினால்
பாமாலை படித்தென்ன! பரமனைத் துதித்தென்ன!

12-1-2005.
ண்ணோக்கி வளையாத முதுகு வேண்டும்.
திண்மையாய்ப் பீடு நடை நடக்க வேண்டும்.
எண்ணங்கள் மேல் நோக்கி உயர வேண்டும்.
வண்ணங்கள் மனம் கவர அமையவேண்டும்.
கண்கள் குளிர மனம் களிப்புற வேண்டும்.

ரிகள் ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.

uploaded on  15-5-2011.

 

                           

 

 

21. கவிதை பாருங்கள்(photo,poem)

 

                       

வாழ்வியற் குறட்டாழிசை. 5

Art by Vetha.

வாழ்வியற் குறட்டாழிசை.  5

அன்பு.

 

மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்
அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.

ன்பினால் புன்னகை உதட்டில் வரும்
கண்களில் கண்ணீர் வரும்.

ண்மை அன்பு எத்தனை திண்மைத்
துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.

ண்மை அன்பு ஒருவனுக்கு யானை
பலம் தரும் சக்தியுடைத்து.

ன்பினால், அரசு, வீரம், காதல்
கொடை அனைத்தும் உருவாகும்.

ழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்
மகோன்னத  ஜீவசக்தி  அன்பு.

த்தனை பொருள் பணம் இருந்தென்ன
அன்பிலார் எதுவும் அற்றவர்.

ரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே
அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).

ன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா
சக்தியுடையது உண்மை அன்பு.

ன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்
இன்ப அதிசய ஊற்று.

 

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-5-2011.

In Anthimaalai web site  :-  http://anthimaalai.blogspot.com/2011/07/5_28.html

   

                         
 

190. ஆசிரியர் பணி – ஆசிரியம்.

ஆசிரியர் பணி – ஆசிரியம்.

சீலாச்சாரமான எம் தமிழ்
கலாச்சார மரபின் வேர்.
விலாசம் தரும் வானவில்
விற்பன்ன விதைப்பு ஆசிரியப்பணி.
அகக்கண் திறக்கும் திறவுகோல்.
அறிவின் அட்சய பாத்திரம்.
அற்புத அறிவுப்படை ஆசிரியம்.
கற்பக விருட்சம் ஆசிரியப் பணி.

மொழித் தடங்களைச் சிறந்த
மைத் தடங்களாக்கும் ஆசிரியரதை
நல் வழித்தடங்களாக்குகிறார் அறிவாற்றலால்.
நல்லெண்ணத் தடங்களோடு வாழ்வை
வண்ணத்தடங்களாக்குகிறார் சிற்பியாகி.
காலடித் தடம் சிறப்பாயூன்றுவோன்
கல்வியால் சிகரத்தில் தடம் பதிக்கிறான்.
நல்ல பிரம்மவித்தைக்காரன் ஆசிரியன்.

குறிக்கோள் வாழ்விற்குக் கோடிழுப்போன்.
குறிப்பான முகவரியைச் சுட்டுவோன்.
ஆற்றலின் சக்தியால் நல்ல
அறிவிற்குத் தீனி தருபவன்.
அறத் தேரின் அச்சாணியானவர்.
திறமையாளனை ஏற்றும் ஏணி.
சிக்கலற்ற சமுதாயம் ஆக்கும்.
மக்களின் முன்னோடி ஆசிரியன்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-5-2011.

https://kovaikkavi.wordpress.com/2014/09/10/334-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/

(10-5-2011 செவ்வாய்க் கிழமைல் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி கவிதை பாடுவோம் நிகழ்வில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

In Pathivukal web site :-     http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=202%3A2011-06-05-00-01-52&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23

                                  

தாய்லாந்துப் பயணம். அங்கம் .16

எனது பயண வரிசைகளில் மூன்றாவது பயணம்

தாய்லாந்துப் பயணம். அங்கம் 16.       

1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது, அதாவது கம்போடிய அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது  புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்து அயோத்தியாவிற்கு எடுத்து வந்தனர். இப்படியே காலத்திற்குக் காலம் அரசரும் இராசதானிகளும் மாறமாற இச் சிலையும் இடங்கள் மாறி, இன்று நிரந்தரமாக எமரெல்ட் (மரகதம், பச்சை) புத்தாவென இங்கு வைக்கப்பட்டுள்ளது.

வெப்பம், மழை, குளிர் காலங்களிற்கென 3வகை தங்க ஆடைகள் இச் சிலைக்கு உள்ளதாகவும் விழாக்காலங்களில் இதைப் பாவிப்பதாகக் கூறப்படுகிறது.                                                                        

ஏமரெல்ட் புத்த கோயில் பார்த்த பின்பு சிறிது தூரம் வாகனத்தில் பயணித்தோம் .

மாபிள் பலஸ் எனும் இடம் வந்தோம். ” வாற் பெஞ்சமாபோபிற் டுசிற்வனராம் ” என்பது இந்த இடத்துத் தாய்லாந்து மொழிப் பெயா.

இத்தாலி  Floranc carrera marble  கொண்டு வந்து இந்தக் கட்டிடம்  1899ல் கட்ட ஆரம்பித்து 10 வருடத்தில் கட்டப்பட்டதாம். கிங் சுலாலொங் கோண் அதாவது ராம் 5 இதைக் கட்டினாராம். இராசகுமாரன் நாறீஸ் எனும் பிரபல கலைஞர் கிங் ராம் 4ன் மகன் இதை வரைந்தாராம், அதாவது டிசைன் பண்ணினாராம். இக் கட்டிடத்தில் சுற்றிவர உள்ள சாலையில் 53 புத்த உருவங்கள் உலகின் பல் வேறு இடங்களிலுமுள்ள அல்லது ஆசியாவில் உள்ள முழு உருவங்களும் இங்கு வைத்துள்ளனர்.

பிரதான சாலையில் 2.5 தொன் நிறையுள்ள வெண்கல புத்தர் சிலை உள்ளது. நீலநிற பின்னணி ஒளியில் இது துல்லிய அழகுடன் விளங்குகிறது.

வாசற் பகுதியில் வெள்ளை நிற மாபிளில்  சிங்க உருவம் காவலுக்கு உள்ளது. அருகில் உள்ள நீரோடையில் அழகிய பாலம் என்று அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பாதணிகளைக் கழற்றி வெளியே வைத்துத் தான் கோயில் உள்ளே போக முடியும். உள்ளே மலர் அலங்காரம், மின்னொளி என்று  மிக ஆடம்பரமாக இருந்தது. மக்கள் வந்து அமைதியாக இருந்து மௌனமாக தியானித்துத் செல்கின்றனர். நாமும் அப்படியே சிறிது நேரம் நிலக் கம்பளத்தில் அமைதியாக அமர்ந்திருந்து திரும்பினோம்.                                    

மொழி பெயர்ப்பாளர் இறுதியாக எங்களை  ஜெம் பலஸ்க்குக் கூட்டிப் போனார்.

    

அங்குள்ள உத்தியோகத்தர்கள் எமக்குக் குளிர் பானம் தந்து இரண்டிரண்டு பேராக எம்மை தமது கண்காணிப்பில் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்கள்.                             

சொல்லவே தேவையில்லை. கண்கள் பறிக்கும் வண்ண வண்ண இரத்தினக் கல் நகைகள். வாங்கு வாங்கு என்று எம் தலையில் கட்டுவதிலேயே எம்மை அழைத்துச் சென்ற பெண்மணி குறியாக இருந்தார்.

இறுதியில் கல் வைத்த சுத்த வெள்ளி மோதிரம் ஒன்றை நான் வாங்கினேன். 600 பாத், அதாவது 100 குரோணர்கள் தான். கணவரோ ‘இங்கு வந்த ஞர்பகமாய் ஒரு வைர மோதிரம் வாங்கேன்!’ என்று மிகவும் வற்புறுத்தினார். எனக்கோ தங்க நகைகளில் உள்ள ஆசை விட்டுப் போய் விட்டது. “”மினுங்கும் வெள்ளைக் கற்கள் வைத்த இந்த வெள்ளி மோதிரம் வாங்குகிறேன். இதை மகள் பார்த்து விரும்பினால் அவளுக்கே கொடுத்திடுவேன், சம்மதமா “”  என்று கணவரிடம் கேட்டுத் தான் வாங்கினேன்.

இளையவர்களுக்கு தங்க நகையிலும் பார்க்க வெள்ளி தானே மிகவும் பிடிக்கும்! அதே போல இங்கு வர மகள் அதைப் பார்த்ததும் ஆசைப்பட்டாள். ‘ இந்தா உனக்குத்தானம்மா!’ என்று அவளுக்கே கொடுத்து விட்டேன்.

அன்றைய நாள் பயணம் முடிந்தது. மாலை 6 மணிக்கு அறைக்குத் திரும்பினோம்.                                            
அங்கு நினைத்தவுடன் மழை வரும். யாரைப் பார்த்தாலும் குடையும் கையுமாகத்தான் செல்வார்கள்.

ஒரு நாள் சாமான்கள வாங்கி வரும் போது நல்ல மழை வந்தது. கடைகளில் ஒதுங்கி நின்று விட்டு மழை விட நடக்கத் தொடங்கினோம்.

சிறிது தூரம் வர முழங்காலளவு வெள்ளம் வழியில் நின்றது. செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு, கால்சட்டையையும் முழங்காலுக்கு மேல் சுருட்டிக் கொண்டார் கணவர். நான் பாவாடை கட்டியதால் தப்பித்தேன். மாற்றி மாற்றி தெருக்களைச் சுற்றிச் சுழன்று ஆடைகளும், ஏன் நாமும் கூட நனையாது அறைக்கு வந்து சேர்ந்தோம்.

சிரி சிரியென்று சிரித்தபடி நல்ல ஜாலியாக அனுபவித்து வந்தோம். அறைக்குள் வர நல்ல இதமான சூடு சொகுசாக இருந்தது.     

(கீழ் உள்ள படங்களில் நிறங்கள் பலவான வாடகை வண்டிகளை (ரக்சி) பார்க்கிறீர்கள் இது அரச மாளிகைக் கட்டிடங்கள்.)

                 

—பயணம் தொடரும்—-

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ்,  டென்மார்க்.
22-1-2009.      

                                     

32. அம்மா.

அம்மா.

 

பத்து மாதம் கருவாய் வயிற்றிலெமை
மெத்தக் கவனமாய் சுமந்தாயம்மா!
முத்தாய், சத்தாய், தலைமகளாயெனை
பத்திரமாய் நெஞ்சிலும் சுமந்தாய்!

உருகியோடும் பனி ஆறாய்
பெருகும் அன்பு பேராறாய்
பெரும் ஆதரவான கைப்பிடியது.
தந்திட்ட நேசம் அமைதியுடைத்து.

மனம் நிறை அறுசுவையுணவு
குணம் நிறையவளது பண்பு
இனமணைத்து வாழும் கூட்டுறவு
பணக்குறையைச் சமாளிக்கும் சாதுரியம்.

அம்மாவொரு அரசியல்வாதி போல்
அன்பு மந்திரியாய் அப்பாவிற்கு!
இன்ப இல்லற அரசியாயவள்
இனிய முன்மாதிரி எமக்கென்றும்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-5-2011.

http://akkinikkunchu.com/2017/05/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF/

அம்மா.

அம்மா என்றால் அன்பு
மம்மா மம்மியும் அன்பு.
தெம்மாங்கு இனிமை அம்மா.
தெய்வீகப் பெருமை அம்மா.
*
 
அன்புருகி ஆசையாய் பெருகி
இன்பத்தின் எல்லையில் உருவாகி
ஓன்பது மாதம் பொறுத்திருந்து
ஓருயிர் தருபவர் அம்மா.
*
 
 எல்லையில்லா அன்பு! இதற்கு
இல்லை எதுவும் ஈடு!
நல்ல அம்மா அப்பாயிணைவு
இல்லாண்மை பெருக்கும் உறவு.
*
 
வல்லமைப் பெற்றோரால் அமையும்
நல்ல பிள்ளை உருவாக்கம்.
அம்மாவோடு அப்பாவையும் இணைப்போம்.
ஆனந்த உலகைக் காண்போம்.
*

 

                               

                             
 

31. பெற்றோர் மாட்சி.

 

பெற்றோர் மாட்சி 31.

 

சக்தி, மகாசக்தி நிறைந்தது தாயன்பு.

பெற்றவரின் அன்பை அள்ளிக் கொண்ட பிள்ளையின் முகக் களை மிக பிரகாசமாயிருக்கும். அதன் செயல்களில் அமைதி, நிதானம் கூர்மையிருக்கும். பெற்றவர் அன்பை ஆதரவை எட்ட முடியாத பிள்ளை களைத்து, சோர்ந்து செயற்படச் சக்தியின்றி காணப்படும். முகத்தின் ஏக்கக் களை பார்வையில் புலப்படும்.

4-9-2004.
நெஞ்சில் பால் வார்க்கும் பிள்ளையைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். நெஞ்சில் விடம் ஊற்றும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் துரதிஷ்டசாலிகள்.
நினைவிலும், கனவிலும் பிள்ளைகள் நினைவு.
வாழ்விலும், தாழ்விலும் பிள்ளைகள் நினைவு.
அது பெற்றவர் மனது.

5-9-2004.
மனிதனின்  கொடுமைகளை, குளப்படிகளை  ஆண்டவன் தாங்குவது போல, பிள்ளைகளின் குளப்படிகளை கொடுமைகளைப் பெற்றோர் பொறுக்கின்றனர். பல வகையில் இவர்களும் ஆண்டவர்கள் தான்.

பரபரப்பான, சுமையான, நெருக்கடியான உலகில் நாம் தயாராக, உலகில் உரிமையுடன் ஊன்றிட தேவையான பற்றுக்கோடு என்ற அன்பு பெற்றவர் அன்பு தான்.

அன்பென்ற சொல்லெடுத்து
அகம் நிறைக்கும் அமிர்த சஞ்சீவி.
பாசமென்ற மழை பொழிந்து
பாரில் பாக்கியம் தரும்
பாசம், மனதில் என்றும்
பால் வார்க்கும் அன்பு
பெற்றவர் அன்பு தான்.

12-9-2004.
அன்பெனும் நாணயக் கயிறு மாட்டினால் பாலபருவம் எனும் வண்டி சீராக ஓடும். இதன் மதிப்புக்குரிய  சாரதிகள் பெற்றோர்.
கருவில் உயிரின் ஆதாரம் தாயின் தொப்புள் கொடி. அக் கொடியை ஏற்றியவர் தந்தை எனும் பெயராளர்.
காசினியில் உயிரின் ஆதாரமும் அவர்கள் அன்புக் கொடி தான்.

11-9-2004.
மனித மனக் கோயிலின் மூல விக்கிரகங்கள் பெற்றோர் தான். தாய்மையைத் தவிர உலகில் வேறு எதிலும் கூடுதலான அதிகாரம் பெற முடியாது. ஒரு தாயிற்கு தனது சிறு பிள்ளைகள் மீது முழுமையான அதிகாரம் உள்ளது. அவளது அதிகாரம் அவர்களை உடைக்கவும் முடியும், உருவாக்கவும் முடியும்.

10-12-2006.
மானுடம் நிமிர்த்தும் பெற்றவர் அன்புச் சாரல் ஆற்றலுடைத்து. அதைப் போற்றுதல் பிள்ளைகள் கடன். ஓற்றும் உதடும், ஒரு தொடுகையும் வற்றிடும் போது வேதனை அதிகம்.

9-7-2007.
பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன் என்றில்லாது
பிறப்பு நிறக்க பண்பாக வாழ்ந்து,
இறக்க முன்னர் நல்லவை செய்து
இறக்கமின்றி வாழ நல்ல மனுசியாக வளர்ந்தேன்.

9-12-2006.
பொன் எழில் நிகரொத்தது பெற்றவர்
அன்பு எழில்(வலிமை). அவரோடணையும் ஆதரவு
பூம்பொழில். தேனாய் அவர்கள்
தினம் பொழிந்த அன்பு முத்தத்து
வான் எழில் நிகரான அன்பு எமைக்காத்தது.
நான் எழிலாய் திரும்பக் கொடுக்க அவர் மனம் பூத்தது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

இடுகையிட்டது. 7-5-2011.

                              

 

20. கவிதை பாருங்கள்(photo,poem)

 

பறவைகள் அழுவதில்லை.
வண்ணத்திப்பூச்சி அழுவதில்லை.
இன்னும் எத்தனையோ அஃறிணைகள் அழுவதில்லை.
ஆனால் மனிதன் மட்டும் அழுகிறான்.
அழுகையை வெறுத்திடுங்கள்.
உற்சாகம் பொங்க உலாவுங்கள்.
மன ஆரோக்கியம் உடலாரோக்கியத்தின் சுயவிம்பம்.

 

 

                   

189. வன்முறை.

 

வன்முறை.

 

ஆனந்தத்தின் எதிரி,  மறுபக்கம்.
ஆழ்மன சிதைவின் தாக்கம் வன்முறை.
என்னைக் கவனியெனும் சைகை,
தன்னை வருத்தும் செயல் வன்முறை.

வாழ்வை சிதை ஏற்றுமிது மானுடனைத்
தாழ்வுக் குழியுள்ளும் தள்ளும் இழிமுறை.
குரூரம் வளர்க்கும், குமட்டும்! கெடுவழி.
உருவம் சிதைக்கும் உதவாத இயக்கம்.

கத்தியை எடுத்தவன் கத்தியில் மடிவானென்று
புத்தியிற் பட்டவர் கூறிய முறை.
ஊடகங்களால் உலகில் நாள் தோறும்,
நாடகங்களாலும், குடும்பங்களிலும் நாளும் அறிவது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-5-2004.

(உறவு என்ற இந்திய சிறு சஞ்சிகையில்  ஆவணி 2004 ல் வெளியான கவிதையிது.

ரி.ஆர்.ரி தமிழ் அலை வானெலியில் அறிவிப்பாளர் யெயா.பத்மநாதன் நிகழ்ச்சியிலும் என்னால் வசிக்கப் பட்டது.)

 

                             

Next Newer Entries