198. அறிவானது மயங்குகிறது. (பா மாலிகை (கதம்பம்)

 

 

அறிவானது மயங்குகிறது.

 

தானாகவெது கனிவது
இயற்கையது இனிமையானது.
தட்டுவது, புகையூதியது
கனிவிப்பது பலாத்காரமானது.

விடாது  முயல்வது  ஊக்கமது.
அடாது அநாகரீகமாயது   படாது
பாடது    படுவது   இழிவானது.
பண்பற்றது,   அருவருப்பானது.

விலங்கறிவது   முண்டியடித்து  எழுகிறது.
மனிதமது  விநோதமானது,   விசித்திரமானது.
ஐந்தறிவது  நல்லது  பேணாது
மயங்குவது   தீது   கொடியது,

 கொடியது   தனது   பொறாமையது.
அயலது   செய்வது   பார்த்து
பொருமுகிறது,    குளம்புகிறது.
போட்டியது   எழுகிறது    புகைகிறது.

ற்றாமையது ஆட்டுகிறது.    ஏக்கமது
மனிதத்து   வெட்கமது    அழிக்கிறது.
மரமது    ஏறுகிறது,    மாங்கனியது
பறிக்கிறது.     நளினமிது,    நாடகமிது.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-6-2011.

In Muthukamalam.com :-         http://www.muthukamalam.com/verse/p749.html

                   

Advertisements

34. ஏணிப் படியான அன்பு.

 

 

 

ஏணிப் படியான அன்பு.

19-4-2008.
மாணிக்கம் முதலாம் நவமணிகளும், ஆணிப்பொன்னும் கூடக் காணிக்கையாகாது பெற்றவரன்புக்கு. ஏணிப் படியாக இவ்வன்பை எண்ணுவோர்,  நாணிடத் தேவையில்லை. மானிலத்தில் நாம் உறவாடும் இவர்கள் உயிர்த் தெய்வங்கள்.

” எம்மை உதாசீனம் செய்வோரைப் பொருட் படுத்தாதே. அம்மணமாக அல்ல, நீ ஆயிரம் திறமைகளுடன் இம்மியளவும் தயங்காது தொடர்ந்து முன்னேறு.”  அம்மா, அப்பாவின் புத்திமதி இது. இம்மட்டும் அப்படியே தொடர்கிறேன். கம்பீரம் எம்மை வந்தடையப் பெற்றவர் ஆசி துணையே. எம்மைப் பெற்றவரை மதித்தால் உரிய சம்பளம் செம்மையாய் வந்து சேரும்.

இயற்கை தந்த உறவு பெற்றோர். செயற்கையில் உறவாகப் பலர் தொற்றுவார். மயக்கமும் தந்து மாயமும் செய்வார். வியக்கும் உறவான பெற்றவர் பாசமே, தயக்கம் காட்டாது தனியே துடிப்பது. தவறிடாது அவரைப் போற்றி நல்வாழ்வு வாழ்வோம்.

விழியோரம் அன்பு கசிய, களிகொள்ளும் பார்வையாய்,  ஒளிச்சுடராக அன்பு காட்டி வழி காட்டிய பெற்றோரே, வழி வழியாக நீங்கள் தந்த பண்புகளை எழிலாக எடுத்து, ஆயிரம் அனுபவங்கள் பெற்றோம், பெறுவோம். அவரணைப்பில் ஆதரவு துளியும் குறையாது, அவரன்பை ஆராதிக்காத உள்ளங்கள் அவர்களுக்கு அன்பை அள்ளிக் கொடுங்கள். மறுபடி வராது இந்த ஜென்மம்.

கருணை மனம், தென்றல் வீசும் வாசல், அருமையாக அன்போடு  பிணைத்து, திருவாக பெற்றொர் ஊட்டிய விடயங்களை  நாம் பெரிதாக எடுப்பதில்லை. அமுத வாசலிது. கருமை குணங்களை விலக்கி, அனைவரும் கருணாமூத்தியாய் எம் உள்ளத்தை வளர்ப்போம்.

26-4.2008.
சிறையல்ல உலகு. சிலவற்றைச் செய்யப் பிறந்தாய் என்று நற் பண்பெனும் மறை ஓதி உருவாக்கிய போசகர்கள், இறைவன் தந்த பொக்கிசம் பெற்றவர். முறையாக இதை உணர்ந்து, குறையின்றி அமைக்கும் வாழ்வே வரம்.

27-4-2008.
அழுதவர் அழுகையை நிறுத்தும் , இழுக்கற்ற பாசம் பொழியும், தொழுகைக்குரிய பெற்றவர் விரும்புவது, முழுவதுமான எமது பதில் அன்பைத்தான். மதிப்புடைய பதில் ஆதரவைத்தான். மிதிக்காத அந்த அன்பால் தானே நாம் எழுந்தோம்.

நிலா போன்ற அன்பெனும் ஒளி, உலாவியது பிள்ளைகளுக்காய் பேதமின்றி. பலாச்சுளை போல் இனிக்குமதை, சகோதரர்கள் நாம் குலாவி மகிழ்ந்து உயர்ந்தோம். குறையின்றி அவர்களை இறுதி வரை காப்போம்(காத்தோம்). எம் வாழ்வில் அவர்கள் தானே வானம்.

4-5-2008.
உறவே உலகின் இணைப்புச் சங்கிலி. குறையே இன்றி அதைப் பேணுதல் நிறைவே. உன்னத பெற்றவர் அன்பு வாழ்வில் கறை துடைத்து, உயிரின் கலங்கரை விளக்காகிறது. அறவே விலக்காது பெற்றவரை அணைப்போம். நறவான அவர்கள் உறவு உலகில் உயர்வே! உயர்வே!

17-5-2008.
சொந்தம் கொள்ளும் பெற்றவா, உறவின் சந்தம், அன்பு ஆதரவு எனும் பந்தம், பகிர்தலின் உருவம் தான். அந்தம் வரை தொடர்தலில் தான் உண்டு சொர்க்கம். முந்துவோம். இதைப் பிந்தாமற் பகிர்வோம். வந்திடும் வாழ்வில் நிதமும் சொர்க்கம்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

          

 
 

26. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

                                               

Advertisements

197. முகநூல் இடுகைகள்(ராக்)

 

 

முகநூல் இடுகைகள்(ராக்)

 

சைவான மேடையென்று
இறுக்கமான சபையினிலே பாடல்!
இசை ரசனை இருந்தாற்றான்
இசைக்கும் ஆலாபனையை ரசிக்கலாம்.

க்கபடி விட்டுக் கொடுப்பற்று
மக்கள் மௌனத்தில் காலிட்டு
தனக்காக மட்டும் சந்தையென்று
கணக்காய் பூக்கள் விற்கிறார்கள்.

மொத்தமான மொழி பெயர்ப்புகளை
உத்தமமென்று அக்கறையற்று
சத்தென்று தினம் வீசுவது
வித்தகரென்ற சிந்தையிற்றான்.

கொட்டிக் கொட்டி ஊட்டியும்
பட்டவர்த்தன மொழி புரியாததாய்
செட்டான ஒரு அரங்கேற்றம்.
சடப்பொருளென புரிதலற்ற நாடகம்.

க்களின் சிந்தனை வியாபிப்புகளில்
சிக்கற் பின்னல்கள் தவிர்ப்பு.
விக்கலின்றியே உணவுண்ண விரும்புவார்.
பக்கலில் நீரும் இருக்கவேண்டும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-6-2011.

 

                    

 

Advertisements

16. முகநூல் ஆக்கம் -ராக்(tag)

 

 

முகநூல் ஆக்கம் -ராக்(tag)

 

மக்கள் மிக எளிமையான தமிழில் அனைவருக்கும் விளங்கிட ஆக்கமிடுதலும், சுய களிப்பிற்கு வித்துவத்தனம் காட்டும் கடும் தமிழுமாக கனணியில் தமிழ் அலையடிக்கிறது.

இசைவான மேடையென்று
இறுக்கமான சபையிலே பாடல்.
இசை ரசனை இருந்தாற்றான்
இசைக்கும் ஆலாபனையை ரசிக்கலாம்.

தக்கபடி விட்டுக் கொடுப்பற்று
மக்கள் மௌனத்தில் காலிட்டு
தனக்காக மட்டும் சந்தையென்று
கணக்காய் பூக்கள் விற்கிறார்.

சிறு வயதில் சங்கீதக் கச்சேரிக்குப் போனால் ராக ஆலாபனை நேரம் வரும் போது
‘  ஆ..ஆ..வென்று சும்மா கத்துகினம் ‘ என்று நான் கூறியது நினைவிற்கு வருகிறது. இன்று ராக ஆலாபனையை மிக ரசித்து மகிழ்கிறேன்.

முகநூலில் ஆக்கங்கள் செய்திப் பக்கத்தில் உருளும் போதே தாமாகப் பார்த்துக் கருத்து இடுவோரும்,  சுவர்களில் திணிப்பாக ஒட்டப்பட்டு, அதாவது ‘ராக்’ என்ற முறையில் இட்டு கருத்துக் கேட்போருமாக பல ரகமான மக்கள்.

தமது ஆக்கங்களை பிறர் சுவரில் போடுவோர் பிறர் ஆக்கங்கள் தமது சுவருக்கு வராது வடிகட்டவும் செய்கிறார்கள். இதன் கருத்து எம்மால் அவர்கள் சுவரில் ஆக்கம் இடமுடியாது.

வேப்பிலை அடிப்பது போல கருத்திடுவோரும், விவரமாகப் புரிந்து ரசித்துக் கருத்திடுவோருமாகப் பல விதம்.

பார்த்தாலும் பார்க்காதது போல, வாசித்தாலும் வாசிக்காதது போன்ற  பாவனையாளரும் மறுபுறம்.

தமது ஆக்கங்களை ஒரு சுவரில் போடும் போது (ஒட்டும் போது) பதிலாகச் சுவரின் சொந்தக்காரர் போடும் இடுகைகளுக்குச் சிலர் கருத்திட மாட்டார்கள். இப்படிப் பல ரகமான அல்லது சுய நலமான மக்களும் உள்ளனர்.

இணையத் தளத்தில் எனது ஆக்கத்திற்கு குறைவாக கருத்து வந்தது பற்றி இணைய ஆசிரியருடன் பேசிய போது அவர் கூறினார் ‘ போடும் ஆக்கத்தை விளங்கும் சக்தி மக்களுக்கு வேண்டுமே! விளங்கினால் தானே கருத்துப் போடலாம்..’ என்றார். நெஞ்சம் துணுக்கென்று இருந்தது. உண்மை தான் எல்லோருமே சர்வகலாசாலை சென்று படித்தவர்கள் அல்லவே!
குழந்தைகளோடு பழகும் போது குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரிப் பழகுபவர்கள் இங்கு அதை மறக்கிறார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை.

கருத்திடும் போது அதற்குப் பதிலிடும் நல்ல மனதாளரும், பதிலிட்டாத மனதாளரும் தாராளம். நான் என்கணவரிடம் ஒரு தடவை கூறி ஆதங்கப்பட்டேன். கருத்திட்டேன் பதிலில்லை என்று.  ‘ பலர் இதைத் தவிர்ப்பது ஏன் வீண் வம்பு என்று தான் ‘ என்கிறார். வேறு சிலர் வரிக்கு வரி பதிலிட்டு மேலும் கருத்திடத் தூண்டுகிறார்கள். இதிலும் பல ரகம்.

ஒரு முனைவரின் வலை பார்த்தேன். தமிழ் கொட்டுகிறது அங்கு. நற்றுணை, குறும்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்று வரிகள் போட்டு,  வரிக்கு வரி கருத்துமிட்டு மிக அருமையாக எழுதுகிறார். எந்த வித கர்வமுமற்ற அவர்  பண்பான செயல் என்னை வியக்க வைக்கிறது. வாசிக்கும் ஆசையும் வருகிறது. இப்படியும் ஒரு ரகம்.

இது என் மனஆதங்கம் இங்கு எழுதித்தீர்க்கிறேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-6-2011.

 

                              

Advertisements

36. காற்று.

காற்று.

காற்றே!…காற்றேயுன்
தோற்றுவாய் எது!
கூற்றுவன் வாராத
ஏற்றமிகு வாழ்வுனக்கு!

ருமையாம் இயற்கையை
பேருலக ஆதிவாசிகள்
பெருமையாய்த் துதித்தனர்.
யாருன்னை உதறுவார்!

சிரமசைத்துக் கரமசைக்கும்
மரங்களின் ஓசையைத்
தரங்கம் பாடுமோசையாய்
சுரமாக்கித் தருகிறாய்!

தயத்துள் உயிராட
இதமாய் இயக்குவாய்.
இதமான வாசனையை
மெதுவாய் ஏந்துகிறாய்!

காதோர முடி வருடிக்
கீச்சங் காட்டுவாய்.
காதினுள் கானமழை
ஓதுவதும் நீதானே!

தீதான காற்றோடு
மோதி, வாதிட்டு
சதுரங்கமாடி யுலகைச்
சுத்தமாக்குவாய்.

பாங்குடன் உறவாடி
தீதற்று உன்னணைப்பை
பூங்கா, கடற்கரையில்
வாங்குகிறாரே மக்கள்!

விலகாத பந்தமுடை
உலகமகா சக்தியே!
கலகமிகு சூறாவளியாய்
கணத்தில் மாறுகிறாயே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-6-2011.

பாமாலிகை(கதம்பம்) இலக்கம் 14 . கவிதையும் –  காற்றே .

                        

                         

 
 

Advertisements

தாய்லாந்துப் பயணம். அங்கம் 20.

தாய்லாந்துப் பயணம் – 20

 

தாய்லாந்து வளைகுடாவில் வாழைப்பழ உருவப் படகில் இருந்தோம். (படத்தில் படகினூடு நீரை ஊடுருவிப் பார்க்கும் வசதியை நீங்கள் காணக் கூடியதாக இருக்கிறது).

 
வேகப் படகு எமக்குக் கிட்ட வந்தது. அதில் மாறி ஏறினோம். நடுக் கடலில் அப்படி மாறுவது நல்ல திறிலிங் ஆக இருந்தது.
 ’இந்த உல்லாச, அற்புத அனுபவத்திற்காகவே பலர் மாதக்கணக்கில் கடலில் படகில் போய், சட்டி முட்டியுடன் சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து விட்டு வருகிறார்கள்.  அது ஏன் என்பது இப்போது புரிகிறது’ என்றேன் நான் கணவரிடம். அவரும் ஒத்துக் கொண்ட மாதிரி ஆமோதித்துச் சிரித்தார்.
கோலான் தீவிலிருந்து மாலை 5.00 மணிக்குப் புறப்பட்டு 5.15க்கு ‘பற்றியா’ கரையோர நகருக்கு வந்தோம்.
மாலை நேரமாகியதால் பல இளம் பெண்கள் கடற்கரையில் அலங்காரமாக வந்திருந்து உல்லாசப் பயணிகளுக்கு வலை வீசியபடி இருந்தது தெரிந்தது. அதைக் கவனிப்பதும் நல்ல முசுப்பாத்தியாக(வேடிக்கையாக) இருந்தது. எல்லாப் பெண்கள் கையிலும் ஒரு சிறிய அழகு சாதனப் பெட்டி இருந்தது. அடிக்கடி முகத்தைச் சரி செய்தபடியே இருந்தனர்.
பாய்கள் விரித்துப் பெண்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர். சும்மா சொல்லக் கூடாது! அங்கே இங்கே என்று உடலில் சதைகள் தொங்காது சிக்கென்று அவர்கள் சிறு உடலுக்கு ஏற்ற ஆடைகளுடன் மாடல் பெண்கள் போலவே இருந்தனர்.
 
வேறு சிலர் ஆண்களும் சிறு சிறு கொறிக்கும் பணியாரங்களையும் மீன், றால் பொரியல் ஆகியனவும், தேனீரும் தட்டுகளில் காவியபடி விற்றனர். கடற்கரை கலகலக்கத் தொடங்கி விட்டது.
இந்திய சினிமாத் துறை ‘மனோபாலா’ ஏதோ படத்திற்கு ரௌடியாக வேடம் போட்டு மோட்டார் சைக்கிளில் ஓடும் போது பற்றியாவில் தான் பொலிஸ் பிடித்ததாம் பின்பு மொழி பெயர்ப்பாளர் வந்து விளக்கிக் கூற விடுபட்டாராம் என்று இங்கு வர வாசித்தேன். சிரிப்பு வந்தது.
உல்லாசப் பயணக் கந்தோருக்குப் போனோம். முதலில் எம்மைப் படம் எடுத்தனர் என்று கூறினேன் அல்லவா! அதை அழகாக சட்டம் போட்டு, பிரேம் போட்டு மேசையில் வைக்கக் கூடியதாகச் செய்து, விரும்பினால் 100பாத் கொடுத்து வாங்கலாம் என்றனர். 16 குறொனர் தான். பற்றியா தாய்லாந் என்று எழுதி, கீழே ஆழக்கடல் அதிசய உலகு, வண்ண மீன்கள், கடற் பாசிகளுடன், மிக அழகாக வரைந்து உருவமைத்து வெள்ளை நிறத்தில் இருந்தது. வேண்டாம் என்று கூற முடியவில்லை. வாங்கினோம். (அந்தப் படம்.)
 

நாமிருவரும் சேர்ந்து நின்ற படம் அது. வீட்டில் அதைப் பார்த்து ” Thats nice !  So sweet! ” என்று பிள்ளைகள் சந்தோசம் கொண்டனர்.

எம்மோடு பற்றியா வந்த சிலர் அங்கேயே 2, 3 நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து தமது இடத்திற்குப் பயணமாக இருந்தனர். சே! எமக்கு இப்படிச் செய்ய முடியவில்லையே! மறுபடி பட்டுனாம் போக வேண்டுமே! என்று இருந்தது.
பற்றியாவில் முதலைகள், விலங்குகள் வனம், யானைகள் என்று பல சங்கதிகள் பார்க்க இருக்கிறது. பார்த்தவர்கள் அது பற்றிப் பிரமாதமாகக் கூறியிருந்தனர். அவையெல்லாம் ஒரு இரவுக்கும் மேலாக 2 நாட்கள் என்ற கணக்கில் தங்கிப் பார்க்கும் சுற்றுலாக்கள் தான். அதனாலேயே நாம் அதைத் தெரிவு செய்ய வில்லை.
மாலை 8 மணியளவில் பட்டுனாம் வந்தோம். மிகவும் பிந்தினால் அல்லது வெளியே போக அலுப்பானால் அப்படியே ரென் ஸரார் உணவகத்திலேயே இரவு உணவை முடிப்போம்.
அறைக்கு வந்தோம். உப்புத் தண்ணீரில் தோய்ந்ததால், உப்பு எல்லாம் போக குளித்து ஆடை மாற்றி அங்கேயே இரவு உணவை முடித்தோம்.
முன்பு எமது கணனிக்கு நிற மைகள், (கலர் இங்க்) வாங்கவென்று கம்பியூட்டர் சென்ரர் சென்று சுற்றி வாங்கினோம். அங்கு வீட்டுக்கு ஒரு மிக்ஸி வாங்க வேணும் என்று தேடித் தேடிப் பார்த்துக் களைத்து விட்டோம். மிக்ஸியை வாங்குவது எங்கு என்று புரியவில்லை. விடுமுறை முடியும் நாளும் வந்தவிட்டது. அதை எங்கு வாங்கலாம் என்று யோசித்து இறுதியாக இந்திய உணவகத்தில் சென்று கேட்டோம். அவர்கள் முகவரியை எழுதித் தந்தனர்.  Big   C என்ற வியாபார நிலையத்தில் வாங்கலாம் என்றனர்.
அடுத்த நாள் புரட்டாதி 12-2008 வெள்ளிக்கிழமை காலையில் அந்த  Big C  க்கு சென்றோம். பட்டுனாம் சந்தைக்கு அருகிலேயே அது இருந்திருக்கிறது. எமக்குத் தெரியவில்லை. நினைக்க நினைக்கச் சிரிப்பாக இருந்தது.
—பயணத்தின் இறுதி அங்கம் அடுத்த வாரம் வரும்.———
 
 
 In Anthimaalai Web site:-     http://anthimaalai.blogspot.com/2011/09/20.html
Advertisements

Previous Older Entries