24. சிறையற்ற நேசம்…(பா மாலிகை (காதல்)

 

 

 

சிறையற்ற  நேசம்…

 

ன்பின் சாரலில் சங்கமித்த
அதிகபட்ச  உயிர்ப்பான பொழிவு
வசந்தம் குடி கொண்ட
பசுந்தான காதலின் இருப்பு.

விக்கத் தவிக்க நேசிக்கும்,
சளைக்கச் சளைக்க நேசிக்கும்
சொட்டுச் சொட்டாய் மழையாய்
வீழும் அமைதிக் காதல்.

ணர்கின்ற அன்பு இனிமை!
பகிர்கின்ற அன்பு அற்புதம்!
அன்பெனும் சிறையால் அடக்குதலற்ற
கொண்டாடும் அன்பு சாயமற்றது.

சுயமாக இருக்க விடுகிறாய்.
பயமற்ற சுதந்திரம் தருகிறாய்.
யெயமான நானாக விடுகிறாய்.
நயமான அன்பு குலவுகிறது.

து ஒரு வரம்!
இலைகளினிடுக்குகளினால்  கசியும்
நிலையாகக் கைகளில் ஏந்தும்
கலையழகானஒளிக் கீற்று காதல்.

 

‘பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-6-2011.

(In this web site) http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_8894.html

 

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. pirabuwin
    ஜூன் 02, 2011 @ 04:16:36

    “உணர்கின்ற அன்பு இனிமை!
    பகிர்கின்ற அன்பு அற்புதம்!”

    எல்லா வரிகளும் எனக்குப் பிடித்து இருக்கின்றன.ஆனாலும் இந்த வரிகள் மீது எனக்கு தீராக் காதல்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 02, 2011 @ 16:38:12

      மிக்க மகிழ்ச்சி பிரபு! அப்படித்தான் சில வரிகள் மிகவும் பிடிக்கும்.உங்கள் வருகை, கருத்திற்கு சந்தோசம், மிகுந்த நன்றி.மீண்டும் வாங்கோ! ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

      மறுமொழி

  2. கோவை கவி
    ஜூன் 02, 2011 @ 20:57:13

    Sujatha Anton சொன்னது…
    ”அன்பின் சாரலில் சங்கமித்த அதிகபட்ச உயிர்ப்பான பொழிவு
    வசந்தம் குடிகொண்ட பசுந்தான காதலின் இருப்பு”
    அருமை…..காதலின் உண்மையான வெளிப்பாடு கவிதையில்
    வடிவெடுத்துள்ளது வாழ்த்துக்கள் ”வேதா”

    2 ஜூன், 2011 12:14 pm

    மறுமொழி

  3. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
    ஜூன் 03, 2011 @ 08:04:24

    சிறையற்ற நேசம் இறையுள்ள பாசம்
    நிறமில்லா வாசம் கரையில்லா காதல் !
    அருமை தங்களின் அன்பு !!

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 04, 2011 @ 21:07:11

      நிறைவான உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி. குறையில்லா வாழ்விற்கு இறை ஆசி கிடைக்கட்டும். மனம் நிறைந்த நன்றி மீண்டும் வாங்கோ உங்கள் கருத்துகளைத் தர. நல்வரவு.

      மறுமொழி

  4. கோவை கவி
    பிப் 03, 2016 @ 16:47:27

    கவிதை ரசிகை கோமதி முத்துக்குமார் :- நன்று சகோதரி
    Like · Reply · 1 hr 3-2-2016

    Vetha Langathilakam:- மிக்க நன்றி உறவே
    மகிழ்ச்சி
    Like · Reply · Just now 3-2-16

    மறுமொழி

  5. கோவை கவி
    பிப் 03, 2016 @ 16:48:25

    பூக்காரி கவிதைகள் :- அருமை யான வரிகள்.
    Like · Reply · 1 hr 3-2-16

    Vetha Langathilakam:- மிக்க நன்றி உறவே
    மகிழ்ச்சி
    Like · Reply · 2 mins 3-2-16

    மறுமொழி

  6. கோவை கவி
    பிப் 03, 2016 @ 17:23:21

    பூவின் ரசிகன் :- அருமை நட்புக்களே..!!
    Like · Reply · 10 mins 3-2-16

    Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே
    மகிழ்ச்சி
    Like · Reply · 1 · 1 min 3-2-16

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: