193. சாதக(positive) பாதக( Nagative) சிந்தனைகள்.

 

 

ாதக(positive) பாதக( Nagative) சிந்தனைகள்.

 சாதகமான சிந்தனைச் சக்கரம்
சாதனைத்தேரை உருட்டிவிடும்.
பாதகமான சிந்தனைச்சக்கரம்
பாதகக் குழியுள் உருட்டிவிடும்.
தானே மனதில் நொறுங்கிய மனிதன்
தானாய்ப் பிறரை நொறுக்குவான்.
வீணே பிறரைச் சீண்டி
விசனக் காற்றில் தள்ளுவான்.

பாதகச் சொற்களை அடுக்கி
பகைமைக் கோபுரம் உயர்த்துவதால்
தகைமைச் சாந்து உதிர்ந்திடும்.
மகிமைச் சாளரம் பெயர்ந்திடும்.
பாதக எண்ணச் செருக்கினால்
பதர் நிலையாகி  ஆதரவு,
மேதகு மனிதமும் சேதமுறும்.
நாதக் குரலும் நாரசமாகும்.

தீதற்ற திசையின் பாதை
சாதக எண்ணம் தந்திடும்.
மேதகு மனிதம் முளையிடும்
சாதக நோக்கை வளர்த்திடு!
சாதனைக் கோபுரம் எட்டும்
சாத்தியம் தெளிவுடை உண்மை.
சாதிக்கத் தூண்டும் சாதுரியம்
வேதனை மாற்றி வெற்றியாக்கும்.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-10-2001.

(மிழ் அலை ரி.ஆர்.ரி வானொலியிலும், ரி.ஆர்.ரி இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.)

 

 

                 

 

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. pirabuwin
    ஜூன் 05, 2011 @ 08:43:53

    அருமை சகோதரி.மிகவும் பயனுள்ள வரிகள்.நற்சிந்தனைகள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 05, 2011 @ 09:23:59

      உண்மை தான் சிந்தனைச் சாரலிற்குக் கீழே வரவேண்டியது. ஆயினும் இது எப்போதோ எழுதியது மாற்றாமலே கவிதையாகவே போட்டு விட்டேன். நன்றி பிரபு! மிக்க நன்றி. இறை ஆசி உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் கிட்டட்டும்.

      மறுமொழி

  2. raviessutha
    ஜூன் 10, 2011 @ 12:57:07

    உண்மைதான்,இன்றைய நடப்புக்களை துல்லியமாக பதிவு
    செய்திருக்கிறீர்கள்.

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 11, 2011 @ 07:41:24

      அன்பின் ரவிசுதா! உமது வருகைக்கும் ,கருத்திற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். உமது வலையில் ஓரிரு கருத்துகள் பதிவிட்டுள்ளேன். நேரமிருக்கும் போது வந்து உமது கருத்தெனும் ஆதரவைத் தரலாம். நல் வரவு. இறை ஆசி உமக்கும் உமது குடும்பத்தினருக்கும் கிட்டட்டும்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: