35. 2011 கொழுத்தும் கோடை..

                                                                                                                               

 

(பனிக் காலத்தில் மலர்ந்த முகமின்றி மன அழுத்தத்தில் பலர் ‘உம்’ மென்று திரிவர் கோடை காலத்தில்…)

                                                         

அனலாக டென்மார்க்
புனலாக மதுவகைகள்.
பூங்காக்கள் நிறைந்து
பொங்கும் மக்கள்
இங்கு மகிழ்வில்.

கொழுத்தும் வெயில்
அழுத்திய மனவழுத்தத்தை
விழுத்தியது…விழுத்தியது.
முகிழுது  நேசக்குமிழ்கள்
மகிழ்ச்சி…சிரிப்பு..

கழுத்து கரங்களில்
முழுமையணி, அலங்காரம்.
கரங்களிணைவு வரங்களிற்கு..
நிரம்பிய காதல்…காம
சுரங்கள் காற்றினில்..

டுக்கடுக்கான ஆடைகள்
விடுமுறை எடுக்க
விதவிதமான வண்ணத்துப்பூச்சி
மதனமோகனத் தேவர்களின்
தேவலோகம் கோடையில்…

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-6-2011.

(பாமாலிகை (கதம்பத்தில்) இதே போன்ற கோடை பற்றிய கவிதைகள் உண்டு.
இலக்கம் – 4.சூரியனே.
இலக்கம் – 97. கோடை.
இலக்கம் – 183 வளியில் வெப்பம்)

In Anthimaalai,com –  http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_11.html

 

   

 

 

Advertisements

2 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. pirabuwin
    ஜூன் 05, 2011 @ 08:42:10

    “கொழுத்தும் வெயில்
    அழுத்திய மனவழுத்தத்தை
    விழுத்தியது…விழுத்தியது.
    முகிழுது நேசக்குமிழ்கள்
    மகிழ்ச்சி…சிரிப்பு..”

    இங்கு கோடை வெயில் என்றால் ஒரு வித வெறுப்பு எல்லோருக்கும் இருக்கும். ஆனால் உங்களுக்கு. இல்லாதவனுக்குத் தானே ஒன்றின் அருமை தெரியும்.

    மறுமொழி

  2. கோவை கவி
    ஜூன் 05, 2011 @ 09:18:29

    அம்மாடியோவ்! பார்க்க முடியாது..கட்டைக்காற்சட்டை, கையில்லாத சட்டை, கையில் நீர் அல்லது மது. சாய்மானக் கதிரை (ஈஸி செயர்) ஒரு புத்தகம் கையில் சூரிய வெயிலை உடலில் வாங்கி மண்ணிறமாவார்கள் நன்கு அனுபவித்துக் கொள்வார்கள். பாதிப்பேர் கடற்கரையில் இருப்பார்கள் இப்படி இன்னும் கவிதைகள் (கோடை பற்றியது) உள்ளே இருக்கிறது.
    (விரும்பினால் வாசிக்க.) …… இலக்கம் 97கோடை, இல.183 வளியில்வெப்பம், இல.4.சூரியனே.
    உமது கருத்து, உமது வருகைக்கு மிக்க நன்றி பிரபு.இறை ஆசி கிட்டட்டும்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: