வாழ்வியற் குறட்டாழிசை 7.( நல் வார்த்தை)

வாழ்வியற் குறட்டாழிசை . 7

 

நல் வார்த்தை.

ல் வார்த்தை தான் உலகில்
நம்பிக்கை வேரை ஊன்றுகிறது.

ல்ல மனமுடையோனின் உதட்டால் தவழ்வது
நல்ல வார்த்தைகளாகவே அமையும்.

டும் சொற்கள் கல்லாக விழுந்தால்
கனிவான சொற்கள் மலராகிறது.

சி நுழையா இடத்திலும் நற்சொல்
பாசி விலக்கிப் பாலூற்றும்.

ங்காரமாய்க் கொதிப்பவனை நல்ல வார்த்தை
பூங்கரமாய் அரவணைத்துச் சாந்தமாக்கும்.

டுகைத் துளைப்பதுவாய் நற்சொல் மனப்
படுகை ஊடுருவி அசைக்கும்.

ல்வார்த்தை வளம் கோடை மழைத்துளியாகி
செல்வாக்குடை வாழ்விற்கு ஓடையாகிறது.

டம் பிடிப்போன் வாழ்வில் அன்புத்
தடமான நல்வார்த்தை காயும்.

ண்புடை நற்சொல் சூனியம் விலக்கி
நல்லெண்ணத் தானியம் விளைவிக்கும்.

சீக்கு அற்ற நல்வார்த்தைகள், ஊக்குவிக்கும்,
ஆக்குவிக்கும், தீமை நீக்குவிக்கும்.

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-6-2011.

In Anthimaalai web site:–    http://anthimaalai.blogspot.com/2011/08/7.html#comments

  

                               

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. filmicss
  ஜூன் 11, 2011 @ 05:24:21

  உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 11, 2011 @ 07:48:39

   அன்புறவே! உங்கள் வலை முழுதுமான சினிமாவாக உள்ளது. யோசிக்கிறேன். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. God bless you all..

   மறுமொழி

 2. pirabuwin
  ஜூன் 12, 2011 @ 04:03:53

  மிகச் சிறப்பான நற்சிந்தனைகள்.நல்வாழ்த்துக்கள்.நன்றி சகோதரி.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூன் 15, 2011 @ 16:32:53

  Pirabu! your presence and your words. giving me glad. Thank you very much. God blessyou all.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஆக 13, 2011 @ 08:04:55

  Sujatha Anton and Vino Pathmanathan like this.

  Sujatha Anton wrote:-
  வார்த்தைப்பிரயோகங்களை எப்படிக்கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அழகாக குறளில் விளக்கியுள்ளமை.எமக்கும் படிப்பனவாக உள்ளது. வாழ்த்துக்கள்….”வேதா”

  Vetha wrote:-
  Mikka nanry Sujatha.. God bless you.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: