194. நகைச்சுவைச் சாவி.

 

நகைச்சுவைச் சாவி.

னுதினம் சுழலும் அவசர உலகில்
அற்புத அரங்கேற்றம் அகில அரங்கில்.
அனைவரையும் அசத்துகிறோம் அற்புத நாடகத்தில்.
அரிதாரம் பூசாத நடிகர்கள் நாம்.

சை மிகுந்து ஆத்மார்த்த ஈடுபாட்டில்
ஆவல், ஆதிக்கம், அனர்த்தம், ஆவேசமாய்
அடுத்தவரைச் சேதமிட்டும், சேவிப்பாய் வேசமிட்டும்
அமோக நடிப்பு, தனியாவர்த்தனம், குழுவாக.

வரசக் கலவையில் ஆனந்தத் தேனையும்
நகைச்சுவை ரசமும் நளினமாய் பிணைத்து
நன்கொடையாக நடைமுறையில் பிணைக்காது
நஞ்சான சோகமேன் முதல் நிலையாகிறது.

நாணாக சோகம் எம்முயிர் வதைக்க
நவக்கிரக நோய்களை நாமாகக் குடியேற்றி
நாடகத்து வாழ்வில் சோகத்தைப் பூட்டுகிறோம்.
நாதாங்கியைத் திறக்கலாமே நகைச்சுவைச் சாவியால்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-8-2001

(ரி.ஆர்.ரி தமிழ்அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                      

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  ஜூன் 13, 2011 @ 03:36:53

  எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தான்.அவரது வாழ்வு எல்லோர் வாழ்வை விடவும் வித்தியாசமானது.மிக மிக சோகமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். ஆனால் எல்லோரையும் சிரிக்க வைத்தார்.
  அவரது இழப்பை யாராலும் ஈடு கட்ட முடியாது.

  நகைச்சுவை என்பது எல்லோருக்கும் வராது.அது இறைவனின் அருட்கொடை. அந்த வரத்தை பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.

  அருமை சகோதரி.நன்றி உங்கள் பதிவிற்கு.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 13, 2011 @ 21:32:41

  பிரபு! சார்லியை மறந்திட்டேன் இப்போது அவர் படத்தையும் ஏற்றியுள்ளேன். மிக்க நன்றி நினைவு படுத்தியதற்கு. அதே போல உமது வரவு, கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. பழனிவேல்
  ஜூலை 01, 2011 @ 08:22:09

  ஆம்… மனிதனை மனிதனாக வாழச்செய்வது நகைச்சுவைதான்.

  மறுமொழி

 4. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 17:31:35

  சோகச் சுவை அழிக்க, மனஇறுக்கம் நெகிழ்த்த, மகிழ்வைத் தர என்ற பல வழிச்சாலை தானே நகைச்சுவை. உங்கள் வருகை, கருத்திடல் மன மகிழ்வைத் தருகிறது சகோதரா பழனிவேல். மீண்டம் சந்திப்போம்.இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 5. கோவை கவி
  மே 27, 2014 @ 19:01:48

  Sharmila Dharmaseelan:-
  Soo Nice Sister Vetha ELangathilakam .. நாணாக சோகம் எம்முயிர் வதைக்க
  நவக்கிரக நோய்களை நாமாகக் குடியேற்றி
  நாடகத்து வாழ்வில் சோகத்தைப் பூட்டுகிறோம்.
  நாதாங்கியைத் திறக்கலாமே நகைச்சுவைச் சாவியால். வார்த்தை இல்லை வர்ணிக்க உங்கள் கவிதை அருமை அருமை அருமை ..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: