195. எங்கே நிம்மதி!..

எங்கே நிம்மதி!..

எங்கே நிம்மதி என்கிறாய்!
அங்கு, இங்கு எங்கென்று
ஏங்கி நீ தேடுகிறாய்!
எங்கும் அது போகவில்லை!
அங்கும், இங்குமாய் அதை
தங்கவிடாது நீயே உருட்டுகிறாய்!
இங்கு! உன்னுள் தானது!
தங்கிய இதயத்துள் நிம்மதி.

பேராசை பொருமுகின்ற மனதில்
வாராது தேடும் நிம்மதி!
மாடி வீடு, கோபுரம்,
கோடி பணம், புகழ்
தேடி அலையும் ஒரு
மோடி(பகட்டு) மனதிற்கு அந்த
கோடி பெறும் நிம்மதி
கூடிடாது, மனம் நிறைக்காது.

அளவற்ற ஆசையால் ஒரு
களம் இறங்கிய போர்
வளம் காணும் வரை
தளமிடாது பொங்கும் நிம்மதி.
பாட்டினில், நாட்டியத்தில், பழகிய
பட்டுத் தமிழில் திருப்தி
எட்டும் சீரான மனதில்,
கொட்டும் மங்காத நிம்மதி.

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-2-2007.

(இலண்டன் தமிழ் வானொலியில் கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப் பட்டது)

 

                                  

Advertisements

4 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. pirabuwin
    ஜூன் 16, 2011 @ 09:07:04

    எங்கே இருக்கின்றது நிம்மதி சகோதரி.உங்கள் உறவுகளுக்கு வாங்கித் தர முடியுமா சகோதரி.தயவு செய்து……

    மறுமொழி

    • கோவை கவி
      ஜூன் 19, 2011 @ 21:28:25

      கவிதைக்குப் பொய் அழகு என்பது இங்கு சரியாகிறதோ? பித்தலாட்டக்காரர், பொய்யர்களுடனான வாழ்வு நிம்மதியைக் குலைக்கும். இதுவும் திருடனாய்ப் பார்த்துத் திருந்திடும் நிலை தான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. உமக்கு மன நிம்மதி கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் பிரபு! மிக்க நன்றி.

      மறுமொழி

  2. பழனிவேல்
    ஜூலை 01, 2011 @ 08:03:41

    வாழ்க்கைக்கு வேண்டியதை இங்கே கண்டேன். நிம்மதி.

    மறுமொழி

  3. கோவை கவி
    ஜூலை 01, 2011 @ 16:40:36

    அன்பின் சகோதரர் பழனிவேல்! உங்கள் கருத்திற்கும், வரவிற்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி. மீண்டும் வாருங்கள் உங்கள் ஆதரவைத் தாருங்கள். இறை ஆசி கிட்டட்டும்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: