196. நம்பிக்கை.

நம்பிக்கை.

யிரணைப்பின் ஆதரவு வேர்.
உயிரின் பலமான ஊன்றல்.
உணர்வின் கூட்டுச் செழிப்பு.
உலக முன்னேற்றப் பலம்.
அன்பு, எதிர்பார்ப்பின் நிமித்தம்
தென்பான கருத்தாய் ஊன்றும்
தன்முனைப்பான நல்லெண்ணம்
மின்னும் நல்லபிப்பிராயம் நம்பிக்கை.

ன இராச்சியம் வளர்க்கும்
மன்பதையின் அமுத தேவகானம்
மருள் நீக்கும் மந்திரம்,
மனித வேதம் நம்பிக்கை.
நம்பிக்கை வழியது வாழ்வு
தென்பற்றது அஃதிலா நீள்வு.
நம்பிக்கை பலமுடை நெம்புகோல்
அஃதிலா வாழ்வு பாழ்.

ம்பிக்கையோடு கையிணைப்போரை அன்புத்
தும்பிக்கையால் தாங்குவோர் நல்லோர்.
வீம்பின் கை ஓங்கினால்
நன்நம்பிக்கை மரிக்கும்.
இதயத்து ஊனம் பொசுக்கும்
உதயத்து வெள்ளி நம்பிக்கை.
நம்பி – கை வைக்கும் செயல்
எம்பி இமயம் தொடட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

16-6-2011.

(பாமாலிகை கதம்பம் தலைப்பில் –  50வது கவிதை நம்பிக்கைத்துளி.
102வது கவிதை நம்பிக்கை விதை.

21-6-2011ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் மாலை கவிதை நேரத்தில்  வாசித்தேன்.

In Muthukamalam web site this poem:-   http://www.muthukamalam.com/muthukamalam_kavithai704.htm

                         

3 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. pirabuwin
  ஜூன் 18, 2011 @ 03:35:53

  “நம்பி – கை வைக்கும் செயல்
  எம்பி இமயம் தொடட்டும்.”

  மிகவும் அழகாக நம்பிக்கையுடன் எழுதியுள்ளீர்கள்.அதே வேளை நிதானமாகவும் எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 19, 2011 @ 21:33:05

  மன சக்தி மகாசக்தி யென்று பலமாக நம்புகிறவள் நான். அதனால் நம்பிக்கை பெரும் துணைக்கை என்கிறேன். கருத்திற்கும், வருகைக்கும் மிக நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூலை 04, 2011 @ 15:45:26

  Sujatha Anton wrote:-
  நம்பிக்கையோடு கையிணைப்போரை அன்புத்
  தும்பிக்கையால் தாங்குவோர் நல்லோர்.
  வீம்பின் கை ஓங்கினால்
  நன்நம்பிக்கை மரிக்கும்…………….. பிடித்தமான வரிகள் ஒரு அன்பு
  எத்தனை பாரத்தையும் கனக்கக்கூடியது. மனிதன் புரிந்துணர்வு
  …கொண்டவானாயின் அத்தனை சுமையிலும் அவன் அன்பு மேலாது
  அருமை ”வேதா” வாழ்த்துக்கள்.

  Vijayakumar Kumar and Vino Pathmanathan like this..

  Vetha wrote:- Thank you Sujatha. Thank you very much.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: