36. காற்று.

காற்று.

காற்றே!…காற்றேயுன்
தோற்றுவாய் எது!
கூற்றுவன் வாராத
ஏற்றமிகு வாழ்வுனக்கு!

ருமையாம் இயற்கையை
பேருலக ஆதிவாசிகள்
பெருமையாய்த் துதித்தனர்.
யாருன்னை உதறுவார்!

சிரமசைத்துக் கரமசைக்கும்
மரங்களின் ஓசையைத்
தரங்கம் பாடுமோசையாய்
சுரமாக்கித் தருகிறாய்!

தயத்துள் உயிராட
இதமாய் இயக்குவாய்.
இதமான வாசனையை
மெதுவாய் ஏந்துகிறாய்!

காதோர முடி வருடிக்
கீச்சங் காட்டுவாய்.
காதினுள் கானமழை
ஓதுவதும் நீதானே!

தீதான காற்றோடு
மோதி, வாதிட்டு
சதுரங்கமாடி யுலகைச்
சுத்தமாக்குவாய்.

பாங்குடன் உறவாடி
தீதற்று உன்னணைப்பை
பூங்கா, கடற்கரையில்
வாங்குகிறாரே மக்கள்!

விலகாத பந்தமுடை
உலகமகா சக்தியே!
கலகமிகு சூறாவளியாய்
கணத்தில் மாறுகிறாயே!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-6-2011.

பாமாலிகை(கதம்பம்) இலக்கம் 14 . கவிதையும் –  காற்றே .

                        

                         

 
 

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூன் 20, 2011 @ 20:38:18

  அருமையான ….கவிதை …எனக்குரொம்ப பிடிச்சிரிக்கு ……:))

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 21, 2011 @ 07:41:12

   மிக்க நன்றி சகோரரே! உங்கள் வலையை வாசிக்க மொழி புரியவில்லை. ஆயினும் உங்கள் தொடர்ந்த இலக்கியப் பயணத்திற்கு இறை ஆசி கிட்டட்டும். எனது நல் வாழ்த்துகள். Please come again and give your support. God bless you all.

   மறுமொழி

 2. பிரபுவின்
  ஜூன் 21, 2011 @ 04:59:45

  விலகாத பந்தமுடை
  உலகமகா சக்தியே!
  கலகமிகு சூறாவளியாய்
  கணத்தில் மாறுகிறாயே!

  நிதர்சனமான வரிகளும் இனம் புரியாத உணர்வுகளும்.அருமையான சொற் கையாடல்கள்.நன்றி சகோதரி.
  படம் அருமையோ அருமை.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஜூன் 21, 2011 @ 07:45:10

  மிக்க நன்றி பிரபு! மகிழ்ச்சி தருகிறது உமது வருகை. மேலும் தொடர இறை அருள் கிடைக்கட்டும். நானும் இந்த நல்ல படம் கிடைத்ததிற்கு மகிழ்வடைந்தேன். உமது இடுகைக்கும் நன்றி. இறை ஆசி கிட்டட்டும். வாழுக நீடு!….

  மறுமொழி

 4. தஞ்சை.வாசன்
  ஜூன் 21, 2011 @ 19:38:46

  அழகிய படத்துடன்… அருமையான வரிகள்…

  காற்று, எல்லார் வாழ்விலும் தென்றலாய், இளங்காற்றாய் என்றென்றும் வீசட்டும்…

  இறைவன் அருளால் மேலும் பல படைப்புகள் நாங்கள் படித்து மகிழ்ந்திட இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2011 @ 07:03:33

   mikka nary sakothara! நாமும் தென்றலாய், இளங்காற்றாய் ஒருவருக்கொருவர் கருத்திடலாமே! மிகுந்த மகிழ்ச்சி வாசன்! நேரமிருக்கும் போது வாங்கோ! உங்கள் ஆதரவைத் தாருங்கள்! வாழ்த்துகள்! ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. தஞ்சை.வாசன்
  ஜூன் 21, 2011 @ 19:40:47

  காற்று, இந்த அழகிய புகைப்படத்தை எந்தன் வலைத்தளத்திற்கும் கடத்தி செல்ல போகிறது… மிக்க நன்றி….

  மறுமொழி

 6. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூன் 24, 2011 @ 08:33:09

  காற்றோடு கலந்து உயிரோடு கலக்கட்டும் தமிழ் ! கவிதை நன்று !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 25, 2011 @ 07:59:21

   உயிரோடு கலந்த தமிழ் உறவையும் தந்து, நீங்கள் கருத்திட்டமைக்கும், வரவிற்கும் மிக்க நன்றி.. இன்று போல் என்றும் கலந்திருங்கள்! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: