16. முகநூல் ஆக்கம் -ராக்(tag)

 

 

முகநூல் ஆக்கம் -ராக்(tag)

 

மக்கள் மிக எளிமையான தமிழில் அனைவருக்கும் விளங்கிட ஆக்கமிடுதலும், சுய களிப்பிற்கு வித்துவத்தனம் காட்டும் கடும் தமிழுமாக கனணியில் தமிழ் அலையடிக்கிறது.

இசைவான மேடையென்று
இறுக்கமான சபையிலே பாடல்.
இசை ரசனை இருந்தாற்றான்
இசைக்கும் ஆலாபனையை ரசிக்கலாம்.

தக்கபடி விட்டுக் கொடுப்பற்று
மக்கள் மௌனத்தில் காலிட்டு
தனக்காக மட்டும் சந்தையென்று
கணக்காய் பூக்கள் விற்கிறார்.

சிறு வயதில் சங்கீதக் கச்சேரிக்குப் போனால் ராக ஆலாபனை நேரம் வரும் போது
‘  ஆ..ஆ..வென்று சும்மா கத்துகினம் ‘ என்று நான் கூறியது நினைவிற்கு வருகிறது. இன்று ராக ஆலாபனையை மிக ரசித்து மகிழ்கிறேன்.

முகநூலில் ஆக்கங்கள் செய்திப் பக்கத்தில் உருளும் போதே தாமாகப் பார்த்துக் கருத்து இடுவோரும்,  சுவர்களில் திணிப்பாக ஒட்டப்பட்டு, அதாவது ‘ராக்’ என்ற முறையில் இட்டு கருத்துக் கேட்போருமாக பல ரகமான மக்கள்.

தமது ஆக்கங்களை பிறர் சுவரில் போடுவோர் பிறர் ஆக்கங்கள் தமது சுவருக்கு வராது வடிகட்டவும் செய்கிறார்கள். இதன் கருத்து எம்மால் அவர்கள் சுவரில் ஆக்கம் இடமுடியாது.

வேப்பிலை அடிப்பது போல கருத்திடுவோரும், விவரமாகப் புரிந்து ரசித்துக் கருத்திடுவோருமாகப் பல விதம்.

பார்த்தாலும் பார்க்காதது போல, வாசித்தாலும் வாசிக்காதது போன்ற  பாவனையாளரும் மறுபுறம்.

தமது ஆக்கங்களை ஒரு சுவரில் போடும் போது (ஒட்டும் போது) பதிலாகச் சுவரின் சொந்தக்காரர் போடும் இடுகைகளுக்குச் சிலர் கருத்திட மாட்டார்கள். இப்படிப் பல ரகமான அல்லது சுய நலமான மக்களும் உள்ளனர்.

இணையத் தளத்தில் எனது ஆக்கத்திற்கு குறைவாக கருத்து வந்தது பற்றி இணைய ஆசிரியருடன் பேசிய போது அவர் கூறினார் ‘ போடும் ஆக்கத்தை விளங்கும் சக்தி மக்களுக்கு வேண்டுமே! விளங்கினால் தானே கருத்துப் போடலாம்..’ என்றார். நெஞ்சம் துணுக்கென்று இருந்தது. உண்மை தான் எல்லோருமே சர்வகலாசாலை சென்று படித்தவர்கள் அல்லவே!
குழந்தைகளோடு பழகும் போது குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரிப் பழகுபவர்கள் இங்கு அதை மறக்கிறார்கள். அது தான் ஏனென்று புரியவில்லை.

கருத்திடும் போது அதற்குப் பதிலிடும் நல்ல மனதாளரும், பதிலிட்டாத மனதாளரும் தாராளம். நான் என்கணவரிடம் ஒரு தடவை கூறி ஆதங்கப்பட்டேன். கருத்திட்டேன் பதிலில்லை என்று.  ‘ பலர் இதைத் தவிர்ப்பது ஏன் வீண் வம்பு என்று தான் ‘ என்கிறார். வேறு சிலர் வரிக்கு வரி பதிலிட்டு மேலும் கருத்திடத் தூண்டுகிறார்கள். இதிலும் பல ரகம்.

ஒரு முனைவரின் வலை பார்த்தேன். தமிழ் கொட்டுகிறது அங்கு. நற்றுணை, குறும்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என்று வரிகள் போட்டு,  வரிக்கு வரி கருத்துமிட்டு மிக அருமையாக எழுதுகிறார். எந்த வித கர்வமுமற்ற அவர்  பண்பான செயல் என்னை வியக்க வைக்கிறது. வாசிக்கும் ஆசையும் வருகிறது. இப்படியும் ஒரு ரகம்.

இது என் மனஆதங்கம் இங்கு எழுதித்தீர்க்கிறேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-6-2011.

 

                              

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dhavappudhalvan
  ஜூன் 22, 2011 @ 07:35:18

  ஒவ்வொரு பதிவாளருக்கும், தன் படைப்பை அனைவரும் வாசிக்க வேண்டும், கருத்திட வேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எம் நினைவுகளே வாசிப்போரின் எண்ணங்களாய் திகழ வேண்டும் என்பது ஆசை என்ற பேராசை ஆட்டித்தான் படைக்கிறது. எனக்கும் ஓர் ஆசை வாசிக்கின்ற அனைத்திற்கும் கருத்திட வேண்டுமென்று. பலரிடம் எம் படைப்புகளைப் பற்றி இயம்பும் போது, எமக்கு இதிலே ஆர்வமே இல்லை. இது தண்டப்பட்ட வேலை என வேல் பாய்ச்சுவார்கள். உண்மை தானே ஒவ்வொருக்கும் வெவ்வேறு விருப்பங்கள், ஆசைகள், ஆலாபனைகள். வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 23, 2011 @ 06:21:55

   இவைகள் என்னைக் குடைந்தன அதனாலேயே எழுதினேன். சிலர் எனக்குக் கருத்திட வேண்டுமென்று என் சுவரை நாடுவதே இல்லைப் பாருங்கோ! உள்ளதைச் சொல்ல என்ன பயம்!!!!!!!!!….
   நன்றி சகோதரரே! உங்கள் வருகைக்கும், கருத்திற்க்கும். எப்போதும் நல்வரவு!

   மறுமொழி

 2. SUJATHA
  ஜூன் 22, 2011 @ 17:23:15

  கருத்துக்கள் பதிவதில் ஆர்வங்கள் எனக்குஅதிகம் உண்டு ஒருவருடைய எழுத்துத் துறைக்கு நாம் கொடுக்கும் ஆர்வம்இங்கு
  கருத்துக்கள் பதிவாகவிட்டாலும் உங்கள் ஆக்கங்கள், கருத்துக்களை எழுதுங்கள். மற்றவர்கள் எது செய்கின்றார்கள்
  என்பதை ஒரு கரையில் ஓதுக்குங்கள்….. தொடரட்டும் உங்கள் பணி தமிழ் வாழ்க!!!!!!!!!!!!!!!!!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 23, 2011 @ 06:28:56

   “” மற்றவர்கள் எது செய்கின்றார்கள்
   என்பதை ஒரு கரையில் ஓதுக்குங்கள்….. தொடரட்டும் ..””

   அப்படியே தான் தொடர்கிறது என் எழுத்துப் பயணம். நெடுகவும் வாய் மூடி இருக்கக் கூடாது என்றே இதைப் பதிவிடுகிறேன். என் பயணம் தொடரும். நன்றி சுஜாதா! இனிய கருத்திற்கும், வரவிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. பிரபுவின்
  ஜூன் 23, 2011 @ 05:57:34

  சுயநல மனிதர்கள் வாழும் கலியுக பூமி இது.சிலர் ஆக்கங்களை பார்த்து ரசிப்பார்கள்.ஆனால் தங்கள் வேலை முடிந்தவுடன் நழுவாமல் கொள்ளாமல் சென்று விடுவார்கள்.சிலருக்கு பஞ்சி அதிகம்.பலர் நன்றாகவே நகல் அடிப்பார்கள்.ஆனால் நன்றி என்ற வார்த்தை அவர்களிடம் இருக்காது.பலர் சுவாரசியத்தை அதிகம் விரும்புகிறார்கள்.
  உங்கள் தமிழ் பணி தொடர வேண்டும் என்பதே என் அவா.வெளி நாடு சென்று தமிழை மறக்கும் சுயநல பேர்வழிகள் வாழும் இன்றைய சூழலில் உங்களைப் போன்ற தமிழை சீராட்டி நேசிக்கும் நல்லுள்ளங்களே இன்று தேவை. அம்மாவை மம்மி என்று அழைக்கும் இழிவான தமிழர்களை என்ன செய்வது.நிறைகுடம் தளும்பாது என்று சொல்லுவார்கள்.நீங்களும் அப்படித்தான் சகோதரி.வாழ்க தமிழ்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 23, 2011 @ 06:55:38

   பிரபு! இதில் உள்ள 3 இடுகையின் கருத்துகளையும் பார்த்ததும் பதிலிட வேண்டும் எனும் ஆர்வம் என்னை உந்தியது. உடனே இடுகிறேன். சிலர் இன்னும் 10 பேர் வரட்டும் எல்லாத்திற்கும் சேர்த்து பதிலிடலாம் என்றும் இருப்பார்கள். அதில்லை..எழுதும் நேயர்களையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். சரி பிரபு! இதை விடுவோம். வைரவர் வாகனத்தின் வாலை நிமிர்த்த முடியாது. உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. மிக மகிழ்ச்சியடைகிறேன். நேற்று என் வலையைப் பார்த்தவர்கள் தொகை 108. வலை தொடங்கி இன்று வரை 14,842 பேர் வந்து போயுள்ளனர். பின்னூட்டங்கள் 833 ஐற்றெம்ஸ். என்பது மகிழ்ச்சி தானே. தமிழ் மணத்தில் 178ல் உள்ளேன். ஒரு தகவலாக இதைக் தருகிறேன். நன்றி பிரபு! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. vathiri .c. raveendran.
  ஜூன் 23, 2011 @ 14:41:50

  நாம் இருக்கிறோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2011 @ 17:21:35

   சகோதரர்! உங்கள் கருத்திற்கும், வரவிற்கும் மிகுந்த நன்றி,. உங்கள் வலைத்தளத்திற்குச் செல்ல முடியவில்லை. கூகிள் மூலம் முயற்சித்தும் கூட முடியவில்லை. ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 23, 2011 @ 17:04:28

  Malikka Farook likes this..
  Malikka Farook wrote:-
  ஆதங்கத்தின் வெளிப்பாடு உங்கள் வரிகளில். எல்லோரும் ஒருமித்ததுபோலிருப்பதில்லை என்பது என்கருத்து. நம் எழுத்துக்கள் பிறருக்கு எவ்வகையிலாவது சிறு பயனைத்தருமானால் அதுவே நமக்கு மிகுந்த திருப்தி. எழுதிக்கொண்டேயிருப்போம்.நம் எண்ணங்கள் தீரும்வரை..

  vetha wrote:-
  Thank you malikka.

  மறுமொழி

 6. எம்.கே.முருகானந்தன்
  ஜூன் 23, 2011 @ 17:52:03

  உங்கள் ஆதங்கம் புரிகிறது.
  மனிதர்கள் பலர்
  அவர்கள் ஒவ்வொருவரும்
  தனிரகம்.
  மற்றவர் பற்றிச் சிந்திக்காது
  நம்மால் ஆனதைச் செய்வோம்
  என்ற மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2011 @ 20:46:55

   Dear sir! உங்கள் அன்பான கருத்திற்கும், வரவிற்கும் மிக்க நன்றி. என்னால் ஆனதைச் செய்தபடியே உள்ளேன், இன்னும் செய்வேன். உங்கள் வலைத்தளங்களும் பார்த்தேன், கருத்திடுவேன். இறை ஆசி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூன் 24, 2011 @ 08:42:11

  நாங்கள் இருக்கிறோம் ! உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். தமிழை வளர்ப்போம் சகோதரி !!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: