197. முகநூல் இடுகைகள்(ராக்)

 

 

முகநூல் இடுகைகள்(ராக்)

 

சைவான மேடையென்று
இறுக்கமான சபையினிலே பாடல்!
இசை ரசனை இருந்தாற்றான்
இசைக்கும் ஆலாபனையை ரசிக்கலாம்.

க்கபடி விட்டுக் கொடுப்பற்று
மக்கள் மௌனத்தில் காலிட்டு
தனக்காக மட்டும் சந்தையென்று
கணக்காய் பூக்கள் விற்கிறார்கள்.

மொத்தமான மொழி பெயர்ப்புகளை
உத்தமமென்று அக்கறையற்று
சத்தென்று தினம் வீசுவது
வித்தகரென்ற சிந்தையிற்றான்.

கொட்டிக் கொட்டி ஊட்டியும்
பட்டவர்த்தன மொழி புரியாததாய்
செட்டான ஒரு அரங்கேற்றம்.
சடப்பொருளென புரிதலற்ற நாடகம்.

க்களின் சிந்தனை வியாபிப்புகளில்
சிக்கற் பின்னல்கள் தவிர்ப்பு.
விக்கலின்றியே உணவுண்ண விரும்புவார்.
பக்கலில் நீரும் இருக்கவேண்டும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-6-2011.

 

                    

 

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பிரபுவின்
  ஜூன் 23, 2011 @ 06:00:20

  “இசை ரசனை இருந்தாற்றான்
  இசைக்கும் ஆலாபனையை ரசிக்கலாம்.”

  நிச்சயமாக சகோதரி.இல்லாதவர்களிடம் இதை எதிர்பார்ப்பது தவறு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2011 @ 06:47:24

   பாமர மக்களுக்குப் புரியாத வகையில் புலமைத்துவம் காட்டல் பற்றி குறிப்படப்பட்டது. முனைவர்களே கீழிறங்கி ஆக்கமிடுகிறார்கள். சிறுகட்டுரையில் குறிப்பிட்டேன். எனக்கு இசையறிவு இருந்தாற்றானே ரசிக்கலாம் அல்லது எனக்கு உமது இசை கத்தல் தானே. பிரபு! உமது வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி உமக்கும் உமது குடும்பத்திற்கும் கூறுகிறேன்.

   மறுமொழி

 2. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூன் 23, 2011 @ 20:19:24

  மொத்தமான மொழி பெயர்ப்புகளை
  உத்தமமென்று அக்கறையற்று
  சத்தென்று தினம் வீசுவது
  வித்தகரென்ற சிந்தையிற்றான்…..:))))

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 24, 2011 @ 06:52:23

   இங்கு அக்கறையற்று என்றது…மக்களுக்கு விளங்கவேண்டும் என்ற அக்கறையற்று என்று கொள்ளவேண்டும். அன்பான சகோதரரே! உங்கள் வருகைக்கும், அன்பான கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. ஆண்டன் அருள் உமக்கும், உமது குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. தஞ்சை.வாசன்
  ஜூன் 25, 2011 @ 13:48:16

  // மக்களின் சிந்தனை வியாபிப்புகளில்
  சிக்கற் பின்னல்கள் தவிர்ப்பு.
  விக்கலின்றியே உணவுண்ண விரும்புவார்.
  பக்கலில் நீரும் இருக்கவேண்டும். //

  விக்கல் எடுத்தால் பிறகு நீர் குடிக்க எழுந்து செல்வோம் என்பது இல்லாமல்… பகக்த்தில் வைத்துக்கொண்டால் என்றுமே நன்று…

  வரும்முன் காப்பது நல்லது…

  அருமையான் வரிகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 25, 2011 @ 21:00:41

   தஞ்சை வாசன்! வருமுன் காப்பதிலும் பார்க்க, வந்த பின்பு காப்பவர் தானே உலகில் நிறைய…உமது அன்பான கருத்திற்கும், வரவிற்கும், மகிழ்ச்சியும் நன்றியும்.நேரமிருக்கும் போது மீண்டும் வரவும். நல் வரவு! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. பழனிவேல்
  ஜூலை 01, 2011 @ 07:53:37

  “கொட்டிக் கொட்டி ஊட்டியும்
  பட்டவர்த்தன மொழி புரியாததாய்
  செட்டான ஒரு அரங்கேற்றம்.”

  நல்ல விளக்கம். அருமை

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 15:59:11

  புரிந்தும் புhயாதது போல பாவனை பண்ணுபவர்கள் பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளேன். உங்கள் அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மனம் நிறைந்த நன்றி. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 6. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 01, 2011 @ 19:05:12

  தனக்காக மட்டும் சந்தையென்று
  கணக்காய் பூக்கள் விற்கிறார்கள்….
  நன்றாகச் சொன்னீர்கள், வேதா .

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 21:37:20

  உண்மை தானே! நல்லதோ கெட்டதோ! சமயத்தில் அத்தனை புலம்பலும் கேட்டே ஆக வேண்டும். பல சங்கடங்கள், சில வேளை ஒப்புக்கும் கருத்திட வேண்டியுள்ளது. எல்லோருக்கும் இந்த நிலை தான். உங்கள் வருகைக்கும, கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: