34. ஏணிப் படியான அன்பு.

 

 

 

ஏணிப் படியான அன்பு.

19-4-2008.
மாணிக்கம் முதலாம் நவமணிகளும், ஆணிப்பொன்னும் கூடக் காணிக்கையாகாது பெற்றவரன்புக்கு. ஏணிப் படியாக இவ்வன்பை எண்ணுவோர்,  நாணிடத் தேவையில்லை. மானிலத்தில் நாம் உறவாடும் இவர்கள் உயிர்த் தெய்வங்கள்.

” எம்மை உதாசீனம் செய்வோரைப் பொருட் படுத்தாதே. அம்மணமாக அல்ல, நீ ஆயிரம் திறமைகளுடன் இம்மியளவும் தயங்காது தொடர்ந்து முன்னேறு.”  அம்மா, அப்பாவின் புத்திமதி இது. இம்மட்டும் அப்படியே தொடர்கிறேன். கம்பீரம் எம்மை வந்தடையப் பெற்றவர் ஆசி துணையே. எம்மைப் பெற்றவரை மதித்தால் உரிய சம்பளம் செம்மையாய் வந்து சேரும்.

இயற்கை தந்த உறவு பெற்றோர். செயற்கையில் உறவாகப் பலர் தொற்றுவார். மயக்கமும் தந்து மாயமும் செய்வார். வியக்கும் உறவான பெற்றவர் பாசமே, தயக்கம் காட்டாது தனியே துடிப்பது. தவறிடாது அவரைப் போற்றி நல்வாழ்வு வாழ்வோம்.

விழியோரம் அன்பு கசிய, களிகொள்ளும் பார்வையாய்,  ஒளிச்சுடராக அன்பு காட்டி வழி காட்டிய பெற்றோரே, வழி வழியாக நீங்கள் தந்த பண்புகளை எழிலாக எடுத்து, ஆயிரம் அனுபவங்கள் பெற்றோம், பெறுவோம். அவரணைப்பில் ஆதரவு துளியும் குறையாது, அவரன்பை ஆராதிக்காத உள்ளங்கள் அவர்களுக்கு அன்பை அள்ளிக் கொடுங்கள். மறுபடி வராது இந்த ஜென்மம்.

கருணை மனம், தென்றல் வீசும் வாசல், அருமையாக அன்போடு  பிணைத்து, திருவாக பெற்றொர் ஊட்டிய விடயங்களை  நாம் பெரிதாக எடுப்பதில்லை. அமுத வாசலிது. கருமை குணங்களை விலக்கி, அனைவரும் கருணாமூத்தியாய் எம் உள்ளத்தை வளர்ப்போம்.

26-4.2008.
சிறையல்ல உலகு. சிலவற்றைச் செய்யப் பிறந்தாய் என்று நற் பண்பெனும் மறை ஓதி உருவாக்கிய போசகர்கள், இறைவன் தந்த பொக்கிசம் பெற்றவர். முறையாக இதை உணர்ந்து, குறையின்றி அமைக்கும் வாழ்வே வரம்.

27-4-2008.
அழுதவர் அழுகையை நிறுத்தும் , இழுக்கற்ற பாசம் பொழியும், தொழுகைக்குரிய பெற்றவர் விரும்புவது, முழுவதுமான எமது பதில் அன்பைத்தான். மதிப்புடைய பதில் ஆதரவைத்தான். மிதிக்காத அந்த அன்பால் தானே நாம் எழுந்தோம்.

நிலா போன்ற அன்பெனும் ஒளி, உலாவியது பிள்ளைகளுக்காய் பேதமின்றி. பலாச்சுளை போல் இனிக்குமதை, சகோதரர்கள் நாம் குலாவி மகிழ்ந்து உயர்ந்தோம். குறையின்றி அவர்களை இறுதி வரை காப்போம்(காத்தோம்). எம் வாழ்வில் அவர்கள் தானே வானம்.

4-5-2008.
உறவே உலகின் இணைப்புச் சங்கிலி. குறையே இன்றி அதைப் பேணுதல் நிறைவே. உன்னத பெற்றவர் அன்பு வாழ்வில் கறை துடைத்து, உயிரின் கலங்கரை விளக்காகிறது. அறவே விலக்காது பெற்றவரை அணைப்போம். நறவான அவர்கள் உறவு உலகில் உயர்வே! உயர்வே!

17-5-2008.
சொந்தம் கொள்ளும் பெற்றவா, உறவின் சந்தம், அன்பு ஆதரவு எனும் பந்தம், பகிர்தலின் உருவம் தான். அந்தம் வரை தொடர்தலில் தான் உண்டு சொர்க்கம். முந்துவோம். இதைப் பிந்தாமற் பகிர்வோம். வந்திடும் வாழ்வில் நிதமும் சொர்க்கம்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

          

 
 

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. vasntha chandran
  ஜூன் 26, 2011 @ 07:47:00

  மாணிக்கம் முதலாம் நவமணிகளும், ஆணிப்பொன்னும் கூடக் காணிக்கையாகாது பெற்றவரன்புக்கு. ஏணிப் படியாக இவ்வன்பை எண்ணுவோர், நாணிடத் தேவையில்லை. மானிலத்தில் நாம் உறவாடும் இவர்கள் உயிர்த் தெய்வங்கள்

  அருமையான கவிதை, நாம ஏறி வந்த ஏணிபடிகளை திரும்பிப் பார்க்காத கட்டத்தில் தான் பெற்றோரை வயோதிபர் இல்லத்தில் சேர்த்து விடுவது. புலம் பெயர் தேசத்தில் இது எல்லாம் காலத்தின் கட்டாயம் என்கிறார்களே.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 26, 2011 @ 08:24:31

  ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு காரணங்களை நாம் கூறி எம்மை நாமே சமாதானப் படுத்துவதே வாழ்வாகி விடுகிறது. எமது மனச்சாட்சியை சமநிலைப்படுத்தும் செயலுமாகிறது. என்ன செய்வது! உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. நேரமிருக்கும் போது பார்த்துக் கருத்திடுங்கள் சகோதரி. இறை ஆசி உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும். கிட்டட்டும்.

  மறுமொழி

 3. கவி அழகன் --
  ஜூன் 26, 2011 @ 15:24:57

  அழகிய தமிழ் சொற்களின் சங்கமம் உங்கள் படைப்பில் தெரிகிறது

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2011 @ 20:14:00

   ஆகா! என்ன ஒரு மயக்கம் பெயர்களில்! யாழவன், கவிக்கிழவன், கவிஅழகன் நான் நினைத்தேன் 3 பெயர்களும் வேறு வேறு ஆட்கள் என்று. (-முன்பு பார்த்த போது) ஓகோ! இப்போ தான் தெரிகிறது திறீ இன் வண் என்று!உண்மை. மிக்க மகிழ்ச்சி சகோதரரே! உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Kowsy
  ஜூன் 26, 2011 @ 16:33:37

  உங்கள் பெற்றோர் கூறிய பொன்மொழிகள், நன்மொழிகளாய் ஏற்று வாழ்வின் பாதையில் நடந்து நல்ல சம்பளமும் பெற்ற வார்த்தைகளை மெச்சுகிறேன். வாழ்த்துகள

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 26, 2011 @ 20:17:48

   உமது அன்பான வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கௌசி. நேரமிருக்கும் பட்சத்தில் மீண்டும் வரவும். நல்வரவு! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. SUJATHA
  ஜூன் 26, 2011 @ 20:23:41

  அழுதவர் அழுகையை நிறுத்தும் , இழுக்கற்ற பாசம் பொழியும், தொழுகைக்குரிய பெற்றவர் விரும்புவது, முழுவதுமான எமது பதில் அன்பைத்தான். மதிப்புடைய பதில் ஆதரவைத்தான். மிதிக்காத அந்த அன்பால் தானே நாம் எழுந்தோம்.
  பிடித்த வரிகள்…..பெற்றவரின் பரிவும் பாசமும் கற்றுக்கொண்டதன்
  பெருமை வாழ்க்கையின் நாம் பெற்றது பேரின்பம். அருமை வாழ்த்துக்கள் ”வேதா” வளர்க உங்கள் பணி!!!!!!!!!!!!!

  மறுமொழி

 6. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  ஜூன் 27, 2011 @ 21:07:22

  பெற்றவரின் அருமையே இவளவும் அழகாகவும் ,ஆழமாகவும் ,இதயத்தே கொள்ளை கொள்ளும் அழகிய தமிழ் சொற்களால் காவிய சிற்பமாய் செதுக்கிய காவ்யா மேதையே ………வணங்குகிறேன் உமது பாதங்களை…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 28, 2011 @ 15:30:02

   ராஜீவ்! இது 34வது. எல்லாமே பெற்றவர் பற்றியது. ” பெற்றவர் மாட்சி” எனும் தலைப்பிட்டுள்ளேன் இதற்கு.. நிச்சயமாக உமது வலையும் நன்றாகத் தானிருக்கும்.என்னால் தான் வாசிக்க முடியவில்லை – மொழியால். . உமது வரவிற்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. பிரபுவின்
  ஜூன் 28, 2011 @ 03:55:09

  இந்த உண்மையை அனைவரும் உணர்ந்தால் முதியோர் இல்லங்கள் இனியும் தோன்றாது.

  “மறுபடி வராது இந்த ஜென்மம்.”

  இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.பிறப்பு முடிவற்றது என்பதே என் தெளிவான கருத்து.முக்தி அடையும் போதே பிறப்பு முடிவடைகின்றது.

  நன்றி சகோதரி.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜூன் 28, 2011 @ 21:26:48

  பிரபு! உமது சிந்தனையை மதிக்கிறேன். ஆழமாக விவாதிக்க வரவில்லை. கருத்திற்கும், வரவிற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஜூலை 01, 2011 @ 07:44:49

  “ஏணிப் படியாக இவ்வன்பை எண்ணுவோர்,நாணிடத் தேவையில்லை.
  மானிலத்தில் நாம் உறவாடும் இவர்கள் உயிர்த் தெய்வங்கள்.”

  அருமை… முத்தான வரிகள்…

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 15:48:51

  அன்பின் சகோதரர் பழனிவேல்! ஒரேயடியாக என்னை ஆச்சரியப்பட வைத்து விட்டீர்கள் இன்று. கருத்துக்களை அள்ளித் தந்துள்ளீர். மனமார்ந்த நன்றி. இந்தக் கருத்துகள் தானே எம்மை மேலும் வளம் பெறச் செய்வது. இது நீங்கள் அறியாததல்ல. ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பது தானே பண்பு. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். இறை ஆசி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிட்டட்டும்

  மறுமொழி

 11. VIJAY ANANTH
  ஆக 12, 2011 @ 10:34:15

  நன்று ….ஏன் இப்படி…அதுதான் ஏணி படியான படியும் அன்பு…. Photo simply fantastic…

  மறுமொழி

  • கோவை கவி
   ஆக 12, 2011 @ 19:26:45

   அன்புடன் விஐய் ஆனந்! உமது அன்பான வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: