198. அறிவானது மயங்குகிறது. (பா மாலிகை (கதம்பம்)

 

 

அறிவானது மயங்குகிறது.

 

தானாகவெது கனிவது
இயற்கையது இனிமையானது.
தட்டுவது, புகையூதியது
கனிவிப்பது பலாத்காரமானது.

விடாது  முயல்வது  ஊக்கமது.
அடாது அநாகரீகமாயது   படாது
பாடது    படுவது   இழிவானது.
பண்பற்றது,   அருவருப்பானது.

விலங்கறிவது   முண்டியடித்து  எழுகிறது.
மனிதமது  விநோதமானது,   விசித்திரமானது.
ஐந்தறிவது  நல்லது  பேணாது
மயங்குவது   தீது   கொடியது,

 கொடியது   தனது   பொறாமையது.
அயலது   செய்வது   பார்த்து
பொருமுகிறது,    குளம்புகிறது.
போட்டியது   எழுகிறது    புகைகிறது.

ற்றாமையது ஆட்டுகிறது.    ஏக்கமது
மனிதத்து   வெட்கமது    அழிக்கிறது.
மரமது    ஏறுகிறது,    மாங்கனியது
பறிக்கிறது.     நளினமிது,    நாடகமிது.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-6-2011.

In Muthukamalam.com :-         http://www.muthukamalam.com/verse/p749.html

                   

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ந.பத்மநாதன்
  ஜூன் 29, 2011 @ 16:46:39

  நன்றாகத் “து” கொட்டி தூள் கிளப்பி விட்டீர்கள் …நன்றாக உள்ளதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுது.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூன் 29, 2011 @ 17:06:28

  ஒரு பயிற்சியாகச் செய்தேன். கொஞ்சம் கஷ்டம்.தான் மிக்க நன்றி சகோதரரே உங்கள் வருகைக்கும், கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. SUJATHA
  ஜூன் 29, 2011 @ 18:45:31

  கொடியது தனது பொறாமையது.
  அயலது செய்வது பார்த்து
  பொருமுகிறது, குளம்புகிறது.
  போட்டியது எழுகிறது புகைகிறது.
  வாழ்க்கையின் ஒவ்வொரு படிமுறைகளின் கட்டங்களிலும் மனிதன் மாறுகின்ற மனித இயல்பு,்,,்,,்,,்,,்,,்,,்,, வாழ்த்துக்கள் ‘வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 29, 2011 @ 19:29:22

   மனிதன் மாறட்டும் ஏன் கெட்ட மாதிரி மாறவேண்டும். அவன் ஐந்தறிவு எங்கே போகிறது. பரணில் ஏற்றுகிறானோ! சிறு வயது முதல படித்தவையெல்லாம் என்ன! பெற்றவர் நல்லது தானே சொல்லித் தந்தனர்! ஓ.கே சுஜாதா! இவைகளை விடுவம். உமது அன்பான கருத்திடலுக்கும், வரவுக்கும் மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Natarajan Mariappan
  ஜூன் 29, 2011 @ 19:34:36

  விலங்கறிவது முண்டியடித்து எழுகிறது.
  மனிதமது விநோதமானது, விசித்திரமானது.
  ஐந்தறிவது நல்லது பேணாது
  மயங்குவது தீது கொடியது,
  அருமையான வரிகள் சகோதரி…

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 29, 2011 @ 20:19:35

  தானே கனியாது தட்டித் தட்டிக் கனிவிப்பார். வாழைப்பழமாக்க புகை ஊதுவது போல. இப்படிப் பல சிந்தனையின் திரட்சி இது. நலமா நடராஐன்? மகிழ்வாக உள்ளது உங்கள் வருகையும், கருத்திற்கும். மீண்டும் வாருங்கள்! மிக மிக நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 6. Kavi Alakan
  ஜூன் 30, 2011 @ 03:50:57

  ஆஹா அருமையாய் வந்துள்ளது கவிதை வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 30, 2011 @ 16:39:27

   இது ஒரு முயற்சியாகவே செய்தேன் பரவாயில்லையாக வந்துள்ளது. உமது வரவிற்கும், கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி கவி அழகா! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. பிரபுவின்
  ஜூன் 30, 2011 @ 05:01:01

  “கனிவிப்பது பலாத்காரமானது”

  நாட்டு நடப்புக்கும் இது பொருந்தும்.அருமையான சிந்தனை மிக்க வரிகள்.உங்களைப் புகழ வார்த்தைகளுக்குத் தட்டுப்பாடு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூன் 30, 2011 @ 16:45:51

   ரொம்பப் புகழ வேண்டாம். பிரபு அந்திமாலை இணையத்தளம் தாய்லாந்துப் பயணத்தைத் தொடராக ஒவ்வொரு திங்களிலும் பிரசுரிக்கிறது தனது பக்கத்தில்.- வேறு ஆக்கங்களும். உமது கருத்து, வரவிற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. சிவகுமாரன்
  ஜூலை 01, 2011 @ 02:18:12

  நல்லது கெட்டது
  கலந்தது கவியிது.
  சொல்வது எளியது
  படைப்பது பெரியது.
  படைத்தது இனியது.
  வாழ்த்துது மனமது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 01, 2011 @ 06:22:06

   ஓகோ!..கோ!…சகோதரா சிவகுமாரா! நானும் கொஞ்சம் சிரமப்பட்டேன் ஏற்ற வரிகள் இணையாது. என்றாலும் ஓரளவு வெற்றி கண்டேன். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. மேலும் உயர்க! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 01, 2011 @ 05:22:55

  மேலாக பார்க்கும்போது எளிமையான சொற்கள் கொண்டு எழுதப்பட்ட அழகான கவிதைபோல் தோன்றினாலும், அற்புதமான மிக ஆழமான மனித வாழ்வின் தத்துவங்களை மறைமுகமாக காட்டும் கவித்துவம் மிக கவிதை இது! அற்புதமானது!!
  வாழ்த்துக்கள் அம்மா!!!

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 06:36:34

  சகோதரா சிறீ! பெரிய கனத்த, ஆதிகால இலக்கியங்கள் போல சொற்களோடு கவிதை, கட்டுரை எழுதினால் தான் பெரீரீரீரீரீ…யயயய…. எழுத்தாளர் என்று தன்னை அறிமுகப் படுத்தலாம் என்று எண்ணுபவரும் இருக்கும் உலகு இது. கவிஞர் கண்ணதாசனும், பட்டுக்கோட்டையாரும் மிக எளிய வரிகளில் தானே எழுதினார்கள். ஆனாலும் மிகக் கஷடப பட்டேன் இதை எழுதி முடிக்க. உங்கள் வரவு ஆச்சரியம் தந்தது. நீண்ட இடைவெளியால். கருத்திற்கு மனமார்ந்த நன்றி. மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 11. mathisutha
  ஜூலை 01, 2011 @ 12:16:47

  ////விலங்கறிவது முண்டியடித்து எழுகிறது.
  மனிதமது விநோதமானது, விசித்திரமானது.////

  ஆமாங்க இப்ப வித்தியசமே தெரியல..
  வரிகள் அருமை…

  அன்புச் சகோதரன்…
  ம.தி.சுதா
  குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

  மறுமொழி

 12. கோவை கவி
  ஜூலை 01, 2011 @ 17:40:04

  மதிசுதா! உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் வலையில் எப்போதோ கருத்திட்டு விட்டேன். வேறு எப்படி? சுகமா? இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 13. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 01, 2011 @ 19:00:17

  அழகான சொல்லாடல்! ஆழமான கருத்தாடல் !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 01, 2011 @ 21:41:31

   மிக்க நன்றி, மிக்க மகிழ்ச்சி சகோதரா! உங்கள் வரவு, கருத்து மிக அர்த்தமுடையது. எனக்கு ஆதரவு தருவது. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 14. Ambaladiyal
  ஜூலை 05, 2011 @ 21:19:43

  மிக அருமையான வரிகள்.தரமான
  ஆக்கமும்கூட.வாழ்த்துக்கள் அம்மா……

  மறுமொழி

 15. கோவை கவி
  டிசம்பர் 07, 2015 @ 14:00:56

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: