194. நகைச்சுவைச் சாவி.

 

நகைச்சுவைச் சாவி.

னுதினம் சுழலும் அவசர உலகில்
அற்புத அரங்கேற்றம் அகில அரங்கில்.
அனைவரையும் அசத்துகிறோம் அற்புத நாடகத்தில்.
அரிதாரம் பூசாத நடிகர்கள் நாம்.

சை மிகுந்து ஆத்மார்த்த ஈடுபாட்டில்
ஆவல், ஆதிக்கம், அனர்த்தம், ஆவேசமாய்
அடுத்தவரைச் சேதமிட்டும், சேவிப்பாய் வேசமிட்டும்
அமோக நடிப்பு, தனியாவர்த்தனம், குழுவாக.

வரசக் கலவையில் ஆனந்தத் தேனையும்
நகைச்சுவை ரசமும் நளினமாய் பிணைத்து
நன்கொடையாக நடைமுறையில் பிணைக்காது
நஞ்சான சோகமேன் முதல் நிலையாகிறது.

நாணாக சோகம் எம்முயிர் வதைக்க
நவக்கிரக நோய்களை நாமாகக் குடியேற்றி
நாடகத்து வாழ்வில் சோகத்தைப் பூட்டுகிறோம்.
நாதாங்கியைத் திறக்கலாமே நகைச்சுவைச் சாவியால்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-8-2001

(ரி.ஆர்.ரி தமிழ்அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                      

வாழ்வியற் குறட்டாழிசை 7.( நல் வார்த்தை)

வாழ்வியற் குறட்டாழிசை . 7

 

நல் வார்த்தை.

ல் வார்த்தை தான் உலகில்
நம்பிக்கை வேரை ஊன்றுகிறது.

ல்ல மனமுடையோனின் உதட்டால் தவழ்வது
நல்ல வார்த்தைகளாகவே அமையும்.

டும் சொற்கள் கல்லாக விழுந்தால்
கனிவான சொற்கள் மலராகிறது.

சி நுழையா இடத்திலும் நற்சொல்
பாசி விலக்கிப் பாலூற்றும்.

ங்காரமாய்க் கொதிப்பவனை நல்ல வார்த்தை
பூங்கரமாய் அரவணைத்துச் சாந்தமாக்கும்.

டுகைத் துளைப்பதுவாய் நற்சொல் மனப்
படுகை ஊடுருவி அசைக்கும்.

ல்வார்த்தை வளம் கோடை மழைத்துளியாகி
செல்வாக்குடை வாழ்விற்கு ஓடையாகிறது.

டம் பிடிப்போன் வாழ்வில் அன்புத்
தடமான நல்வார்த்தை காயும்.

ண்புடை நற்சொல் சூனியம் விலக்கி
நல்லெண்ணத் தானியம் விளைவிக்கும்.

சீக்கு அற்ற நல்வார்த்தைகள், ஊக்குவிக்கும்,
ஆக்குவிக்கும், தீமை நீக்குவிக்கும்.

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-6-2011.

In Anthimaalai web site:–    http://anthimaalai.blogspot.com/2011/08/7.html#comments

  

                               

24. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

                          

 

தாய்லாந்துப் பயணம். அங்கம் 19.

எனது பயண அனுபவங்களில்  பயணம் மூன்றின்
தாய்லாந்துப் பயணம். அங்கம் 19.

பற்றயாவிலிருந்து வேகப்படகில் கோ லான் தீவுக்கு 7கி.மீ, 20 நிமிட பயணம். இதுவே 3 தீவிலும் பெரிதான தீவு.  தாய்லாந்துப் படத்தில் பற்றயா இருக்குமிடம் கடந்த அங்கத்தில் பார்த்தீர்கள்.  இங்கு பற்றயாவிற்கு அருகில் தீவுகளை கறுப்பு வட்டமிட்டு அம்புக் குறியிட்டுக் காட்டியுள்ளேன்.

  

 25 மீட்டர் ஆழமான கடல். நீலமான கண்ணாடி போல தெட்டத் தெளிந்த நீராக இருந்தது. செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு நீருக்குள் சிறிது தூரம் நடந்து செல்ல வசதியாக என் கட்டைப் பாவாடை இருந்தது.

வேகப் படகில் ஏறினோம்.

 

படு வேகமான படகின் ஓட்டம். வேகமான காற்று. படகை இறுகப் பிடித்தபடி மிக உல்லாசமாக இருந்தது.

போகும் போது நடுவில் நிறுத்தி  parasail,   jet ski, snorkel  ஆகியவை செய்ய விருப்பமா என்று கேட்டார்கள். இவைகளைத் தமிழ் படுத்த எனக்குத் தெரியவில்லை. அகராதியும் உதவவில்லை. தண்ணீருக்குள் ஏற்ற உடைகளோடு இறங்கி பவளப் பாறைகள் பார்த்து வருவது, நீரினுள் சறுக்கிக் கொண்டு போதல், ஆகாயத்தில் பறப்பது, ஆகியவை என்று நினைக்கிறேன். அதாவது இவைகளை மேலதிகமாக நாங்கள் பணம் செலுத்திச் செய்யலாம். எம்முடன் வந்த யாருக்குமே அவைகளில் ஆர்வம் இருக்கவில்லை.

இருபது நிமிடங்களில் நேராக கோலான் தீவில் போய் இறங்கினோம். 44சதுர மீட்டர் சுற்றளவு கொண்ட தனியார் தீவு. அதாவது பிறைவேட் தீவு. 3000 மக்கள் அங்கு வசிக்கிறார்களாம். குடிப்பதற்கு தண்ணீர் இல்லையாம்.

 

தீவில் போய் 11மணிக்கு இறங்கியதும் மொழி பெயர்ப்பாளப் பெண்மணி (கறுப்பு ஆடையுடன் speed boatல்   இருப்பவர்)  நீரின் எல்லைகளைக் காட்டி ‘இதற்கு அப்பால் போகாதீர்கள்’ என்று கட்டளைகளைக் கூறினாள்.

எல்லைகள் நீரில் வெள்ளையாகத் தெரிகிறது.

எமக்கு திறப்புகளுடன் அலுமாரிகள் எடுத்துத் தந்தாள். 12.45க்கு உணவு வரும். 5.00மணிக்கு இங்கிருந்து போகிறோம் எனக்கூறி சென்றுவிட்டாள்.

நாங்கள் நீச்சலாடை மாற்றித், தண்ணீருள் சென்று விளையாடினோம். மிக ஆனந்தமாக இருந்தது. பொல்லாத உப்புத் தண்ணீர். இளவட்டங்கள் தண்ணீர்ப் பந்து விளையாடினார்கள்.

அதையெல்லாம் பார்த்து ரசித்தோம். நீருள் நின்று ஆடி விரல்கள் சூம்பத் தொடங்க இனிப் போதும் என்று வெளியே வர மனமில்லாமல் வந்து ஆடை மாற்றினோம்.

பின்னர் உணவகத்தில் உணவு.

எங்கு போனாலும் எனக்கு சைவ உணவு முன்னரே பதிவு செய்து விடுவோம். அவ்வுணவில் போஞ்சியை மாவில் தோய்த்துப் பொரித்திருந்தனர். மிக சுவையாக இருந்தது. பழக்கலவை, சலாட் சோறு, பாண் என்று மிக அருமையான உணவாக இருந்தது.

கணவருக்கு கடல் உணவு.  நண்டு, றால் அது இதுவென்று. நல்ல ஒரு பிடி பிடித்தோம். கடைகளில் நினைவுப் பொருட்கள் விற்பனை என்று எல்லாம் யானை விலையாகவே இருந்தது. நமக்கு எதுவும் வாங்க வேண்டிய தேவையும் இருக்கவேயில்லை. அது தான் பாங்கொக்கில் கடை கடையாக ஏறி இறங்கினோமே!

தண்ணீர் விளையாட்டு, சூரியக் குளிப்பு, நீச்சல் தவிர வேறு ஏதுமே அங்கு இல்லை.

   

காடு சுற்றலாம்  என் கணவர் அதை விரும்பவில்லை. ஆயினும் சிறு கடைகளைச் சுற்றிப் பார்க்க மாலை நேரமும் வந்தது.

போகும் போது வாழைப்பழ உருவமான படகில் முதலில் ஏறினோம். அதில் படகினூடாக கீழே தண்ணீரைப் பார்க்க முடியும் தண்ணீர் பளிங்குத் தெளிவானதால் பவளப் பாறைகளைப் பார்க்க முடியும். உள்ளே ஒரு அதிசய, அற்புத உலகம். மீன்கள் இன்னும் பல சீவராசிகள் கூட்டமாக ஓடுவது இன்னும் ஆழக்கடல் ஆழத்து அதிசய உலகைப் பார்த்திடவே அந்தப் படகில் ஏற்றினார்கள். உல்லாசப் பயணத்தில் அதுவும் ஒரு திட்டம். கீழே பாருங்கள் அதோ, இதோ என்று காட்டினார்கள். டிஸ்கவரி சனாலில் கடலின் கீழ் காட்சிகள் காட்டுவார்களே அது போல இருந்தது. அற்புதம்! அதிசயம்! பவளப் பாறைகளும் தெரிந்தது. மிக அழகாக இருந்தது. அதுவும் கோ குறொக், கோ சக் தீவுகளின் அருகில் இவை மிக, கண்ணாடித் துல்லியமாகத் தெரிந்தது.

கோ சக் தீவின் சுற்றுப் பரப்பு 0.05சதுர கிலோ மீட்டராகும். கோ லான் தீவிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் கோ சக் தீவு. இது குதிரையின் குளம்பு போன்ற உருவமான தீவு. இதில் நீருக்கு அடியிலே போய் பார்க்க முடியும். பணம் கட்டினால் நீருக்குள் இறங்கும் ஆடை, உபகரணங்கள் மாற்றிக் கொண்டு கீழே போய் வரலாம். இத்தீவைத் தாண்டியதும் வேகப் படகும் எமக்குக் கிட்ட வந்தது.

——– பயணம் தொடரும்.———
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-2-2009.

                      

 

35. 2011 கொழுத்தும் கோடை..

                                                                                                                               

 

(பனிக் காலத்தில் மலர்ந்த முகமின்றி மன அழுத்தத்தில் பலர் ‘உம்’ மென்று திரிவர் கோடை காலத்தில்…)

                                                         

அனலாக டென்மார்க்
புனலாக மதுவகைகள்.
பூங்காக்கள் நிறைந்து
பொங்கும் மக்கள்
இங்கு மகிழ்வில்.

கொழுத்தும் வெயில்
அழுத்திய மனவழுத்தத்தை
விழுத்தியது…விழுத்தியது.
முகிழுது  நேசக்குமிழ்கள்
மகிழ்ச்சி…சிரிப்பு..

கழுத்து கரங்களில்
முழுமையணி, அலங்காரம்.
கரங்களிணைவு வரங்களிற்கு..
நிரம்பிய காதல்…காம
சுரங்கள் காற்றினில்..

டுக்கடுக்கான ஆடைகள்
விடுமுறை எடுக்க
விதவிதமான வண்ணத்துப்பூச்சி
மதனமோகனத் தேவர்களின்
தேவலோகம் கோடையில்…

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-6-2011.

(பாமாலிகை (கதம்பத்தில்) இதே போன்ற கோடை பற்றிய கவிதைகள் உண்டு.
இலக்கம் – 4.சூரியனே.
இலக்கம் – 97. கோடை.
இலக்கம் – 183 வளியில் வெப்பம்)

In Anthimaalai,com –  http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_11.html

 

   

 

 

193. சாதக(positive) பாதக( Nagative) சிந்தனைகள்.

 

 

ாதக(positive) பாதக( Nagative) சிந்தனைகள்.

 சாதகமான சிந்தனைச் சக்கரம்
சாதனைத்தேரை உருட்டிவிடும்.
பாதகமான சிந்தனைச்சக்கரம்
பாதகக் குழியுள் உருட்டிவிடும்.
தானே மனதில் நொறுங்கிய மனிதன்
தானாய்ப் பிறரை நொறுக்குவான்.
வீணே பிறரைச் சீண்டி
விசனக் காற்றில் தள்ளுவான்.

பாதகச் சொற்களை அடுக்கி
பகைமைக் கோபுரம் உயர்த்துவதால்
தகைமைச் சாந்து உதிர்ந்திடும்.
மகிமைச் சாளரம் பெயர்ந்திடும்.
பாதக எண்ணச் செருக்கினால்
பதர் நிலையாகி  ஆதரவு,
மேதகு மனிதமும் சேதமுறும்.
நாதக் குரலும் நாரசமாகும்.

தீதற்ற திசையின் பாதை
சாதக எண்ணம் தந்திடும்.
மேதகு மனிதம் முளையிடும்
சாதக நோக்கை வளர்த்திடு!
சாதனைக் கோபுரம் எட்டும்
சாத்தியம் தெளிவுடை உண்மை.
சாதிக்கத் தூண்டும் சாதுரியம்
வேதனை மாற்றி வெற்றியாக்கும்.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-10-2001.

(மிழ் அலை ரி.ஆர்.ரி வானொலியிலும், ரி.ஆர்.ரி இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.)

 

 

                 

 

24. சிறையற்ற நேசம்…(பா மாலிகை (காதல்)

 

 

 

சிறையற்ற  நேசம்…

 

ன்பின் சாரலில் சங்கமித்த
அதிகபட்ச  உயிர்ப்பான பொழிவு
வசந்தம் குடி கொண்ட
பசுந்தான காதலின் இருப்பு.

விக்கத் தவிக்க நேசிக்கும்,
சளைக்கச் சளைக்க நேசிக்கும்
சொட்டுச் சொட்டாய் மழையாய்
வீழும் அமைதிக் காதல்.

ணர்கின்ற அன்பு இனிமை!
பகிர்கின்ற அன்பு அற்புதம்!
அன்பெனும் சிறையால் அடக்குதலற்ற
கொண்டாடும் அன்பு சாயமற்றது.

சுயமாக இருக்க விடுகிறாய்.
பயமற்ற சுதந்திரம் தருகிறாய்.
யெயமான நானாக விடுகிறாய்.
நயமான அன்பு குலவுகிறது.

து ஒரு வரம்!
இலைகளினிடுக்குகளினால்  கசியும்
நிலையாகக் கைகளில் ஏந்தும்
கலையழகானஒளிக் கீற்று காதல்.

 

‘பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-6-2011.

(In this web site) http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_8894.html

 

Next Newer Entries