தாய்லாந்துப் பயணம். இறுதி அங்கம் 21.

எனது பயண அனுபவங்களில் மூன்றாவது பயணம்

தாய்லாந்துப் பயணம். இறுதி அங்கம்  21.

தாய்லாந்தில் மிகப் பெரிய விற்பனை நிலையமான Big C  க்குப் போய் மிக்ஸி வாங்கும் போது

 

ஒரு இளம் பையன் நின்றிருந்தான். அவன் சீனாவில் செய்த பொருள் நல்லதல்ல. மலேசியாவில் செய்தது தான் நல்லது வாங்குங்கள் என்று ஆலோசனை கூறினான். நாம் மலேசியாவில் செய்ததையே வாங்கினோம். அங்கும் எமது வாங்கும் பொருட்களின் பட்டியலில் வேறு இடங்களில் அகப்படாத சில பொருட்களை வாங்க முடிந்ததும் மகிழ்ச்சியாகவே இருந்தது. Big C யில் பொருட்களை வாங்கியதும்,

நேராக எமது காகோ ஏஜென்சிக் கடைக்கு வந்தோம்.

இப்போது நாம் வாங்கிய எமது பொருட்களைக் கடல் வழிப் பொதியாகக் கட்டும் இறுதி வேலையைச் செய்யக் கேட்டோம். பொருட்களின் பற்றுச் சீட்டுகள் எல்லா இடத்திலும் இரண்டு பிரதிகள் வாங்கி வைத்திருந்தோம். ஒன்றைக் கட்டும் பொதியுடனும் ஒன்றை எம்முடனும் வைத்துக் கொண்டு நாம் பார்த்துக் கொண்டிருக்கவே அனைத்தையும் பெரிய அட்டைப் பெட்டிகளில் கட்டி ஒட்டினார்கள். மறுபடி பொலிதீன் உரப் பைகளால் சுற்றிக் கட்டி, அடுக்கினார்கள்.

 

எல்லாம் எழுதி பணத்தையும் கட்டினோம். ஆமாம் முதலே கூறியிருந்தனர் காசாகவே தர வேண்டும், வங்கி மூலமோ, காசோலையோ வேண்டாம் என்று. நாமும் தயாராகவே இருந்தோம். அவர்களுக்குப் பயணமும் கூறிவிட்டு. வாடிவீட்டு வாசலில் நின்ற வாடகைக் காரை மாலை 8.00 மணிக்கு சுவர்ணபூமி விமான நிலையத்திற்குப் போகப் பேசி வைத்து விட்டு அறைக்கு வந்தோம்.

  

இரவு 11.55க்கு ஒஸ்ரியா வீயென்னாவிற்கு விமானம்.

வாடிவீட்டில் எப்போதும் நாம் வர கதவு திறந்து சேவை புரிந்தவர்கள், அறை துப்பரவாக்கி படுக்கைத் துணிகள் மாற்றிய பெண்கள் என்று சிலருக்கு அன்பளிப்புப் பணங்கள் கொடுத்தோம்.

இரவு 8.00 மணிக்கு ராக்சி ஏறினோம் 9.00 மணிக்கு சுவர்ணபூமியில் இறங்கினோம். சில சுவர்ணபூமி விமான நிலையப் படங்களை நீங்கள் பார்க்க வேண்டும். பாற்கடலைப் பரந்தாமன் கடைகிறாரோ என்று எண்ணும் படி இவை இருந்தது. அதன் கருத்து, ஏன், என்பவை எமக்குப் புரியவில்லை. பாருங்கள்.  ஆச்சரியத்தில் போய் இறங்கியதும் நான் விரும்பி எடுத்த படங்கள்.

பயணம் சுலபமாக முடிந்தது.

சனிக்கிழமை நமது வீடு டென்மார்க் வந்து சேர்ந்தோம்.

பயணத்தில் இங்கிருந்து போகும் போது யன்னலூடாக இமாலயாப் பனி மலைக்காட்சியைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்க்க, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆவலாக அதைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்த்துக் காட்டியதால் பலர் அக்காட்சியை ரசித்ததும் மறக்க முடியாதது. இன்னும் சில விமான நிலையப் படங்களையும் பாருங்கள். So beautiful.

    

இந்தப் பயண அனுபவத்தை உங்களுடன் நான் பகிர்ந்ததில் மிகவும் மகிழ்கிறேன்.

கவிதை எழுதுவது எப்படி எனக்கு மிகவும் பிடித்தமானதோ அப்படியே, இரண்டாவதாகப் பயண அனுபவம் எழுதுவதிலும் மகிழ்வடைகிறேன். இந்த சந்தர்ப்பம் உருவான இலண்டன் தமிழ் வானொலிக்கும், கருத்துகள் தந்த நேயர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இறுதியாக தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயரை உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். தயவு செய்து பொறுமையாக நான் 2 மைல் நீளமான பெயரைக் கூறும் வரை ப்ளீஸ்! கேளுங்கள். எனக்கும் இது புரியவில்லை. ஏன் இப்படி இவ்வளவு நீளப் பெயர் என்று மொழி பெயர்ப்பாளரைக் கேட்டேன். அவருடன் அன்று ஒரு தாய்லாந்துப் பெண்ணும் வந்திருந்தார். சிரிக்கிறர்கள்.

முதல் தடவை இதைக் கூறும் போது எழுதி வைத்தேன். இரண்டாம் தடவை தாய்லாந்து மொழி பெயர்ப்பாளன் நிக், ” வேதா! தாய்லாந்துப் பெயரைக் கூறுகிறாயா?” என்று கேட்டார். மறுபடி நான் அதைக் கூறி அவர்களை அசத்தினேன். எழுதியதைப் பார்த்துத் தான் கூறினேன். இதோ கேளுங்கள்.இது தான் அந்தப் பெயர்.
Grunteb /city of angels)

Mahanakon Armon Tathna Kosin Mahindra Ayothiya Mahadilok Popnoprat Rajathany purirum yadomratchnywet Mahachadan amoniman akuathan chasith saka vishnu gampasit

—மகானக்கோன் ஆர்மோன் ரத்னா கோசின் மகின்டிறா அயோத்தியா மகாடிலொக் பொப்னோப்றாற் ராஐதானி புறிறும் யதோம்றட்சினிவெற் மகாசடன் அமோனிமான் அக்குஆதன் சாசித் சகா விஸ்ணு கம்பாசிற்.——— இது தான் அந்தப் பெயர்.

நான் என் கணவருக்குக் கூறினேன், ‘ ‘தாய்லாந்துப் பயணக் கதை முடிகிறதப்பா”  என்று.  ”ஓகோ! தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயர் கூறிவிட்டாயா?”     என்றார் இறுதியில் கட்டாயம் கூறுவேன் என்றேன். இதோ கூறிவிட்டேன்.

சரி நேயர்களே! ஆண்டவன் சித்தம் இருந்தால் மறுபடியொரு பயணக் கதையில் சந்திப்போம்.

நன்றியுடன் வணக்கம்.
வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க்.
25-3-2009.

In Anthimaalai.web site :-   http://anthimaalai.blogspot.com/2011/10/21.html

 

                      

 

 
 

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜூலை 02, 2011 @ 04:52:46

  தங்களின் அற்புதமான, அழகான பயணம் இனிது நிறைவேறியமைக்கு முதலில் இறைவனுக்கு நன்றி!

  தங்களின் அற்புதமான எழுத்து நடை மூலமாக நாங்களும் தாய்லாந்து சுற்றி வந்தோம்! மிகவும் நன்றி அம்மா!!
  வாழ்த்துக்கள்!!

  மீண்டும் தங்களின் பயணங்கள் தொடரட்டும்!!

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூலை 02, 2011 @ 06:01:50

  ஓ!…மிக்க நன்றி. காலையில் 2 மணி நேரம் எடுத்தது அதை வலையில் ஏற்ற. உங்கள் கருத்தைப் பார்க்க என் களைப்பு தீர்ந்தது போல உள்ளது சகோதரரே! உண்மையில் மகிழ்வாக உள்ளது. ஒரு ஆறுதலாக உள்ளது மிக்க மிக்க நன்றி, நன்றி, உங்கள் வரவிற்கும் கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 3. Kowsy
  ஜூலை 02, 2011 @ 07:16:39

  தாய்லாந்துப் பயணம் வானொலியில் முன்னுமே கேட்டிருக்கின்றேன். இருந்தாலும் எழுத்திலே வாசிக்கின்ற போது இன்னும் தெளிவாக இருக்கின்றது. விட்ட இடம் மீண்டும் வாசித்து அறியக் கூடியதாக இருக்கினறது. என்ன தாய்லாந்து செல்லாமலே தாய்லாந்து போய்வந்த ஒரு உணர்வு உங்கள் எழுத்தின் மூலம் ஏற்படுகின்றது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 02, 2011 @ 17:55:46

   தாய்லாந்திற்குப் போய் வந்த உணர்வைத் தந்ததற்கு மகிழ்வடைகிறேன். உமது வரவிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. A R ராஜகோபாலன்
  ஜூலை 02, 2011 @ 08:01:25

  எளிமையான சொல்லாட்சியில்
  எழிலான நடையில்
  எதிரில் இருந்து சொல்வதுபோலே
  எத்தனை அருமையான பதிவு
  நன்றி சகோதரி .
  என் வலைப்பூவுக்கு
  உங்களின் வருகைக்கும்
  வாழ்த்திற்கும் நன்றி

  மறுமொழி

 5. பிரபுவின்
  ஜூலை 02, 2011 @ 14:38:16

  “அவன் சீனாவில் செய்த பொருள் நல்லதல்ல”

  இது உண்மை சகோதரி.விலையும் குறைவு.தரமும் குறைவு.

  “பாற்கடலைப் பரந்தாமன் கடைகிறாரோ என்று எண்ணும் படி இவை இருந்தது.

  நிச்சயமாக சகோதரி.

  அருமையான பயணக் கட்டுரை.

  நன்றி.இறைவன் உங்களுக்குத் துணையாக இருப்பான்.

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 02, 2011 @ 17:52:34

  பிரபு! உமது கருத்துகள், வலைக்கு வருகைக்கு மிகுந்த நன்றி. மிக்க மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 7. sempakam
  ஜூலை 04, 2011 @ 02:50:38

  அக்கா உங்க பயணத்தை அழகாக சொல்லி இருந்தீங்க…
  தாய்லாந் எனக்கு தெரியும்/
  பெரும் விசித்திரமான கட்டடம்………
  உங்கள் பகிர்விற்கு வாழ்த்துக்கள்……..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 05, 2011 @ 06:59:05

   சகோதரர்-சகோதரி! உங்கள் அன்பான வருகைக்கும், இனிய கருத்திற்கும் மனமார்ந்த நன்றி. இப்படி கருத்திடும் ஆதரவு ஒவ்வொருவரும் உயர உரமாகும் . மகிழ்ச்சி. மீண்டும் வர நல் வரவு! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: