வாழ்வியற் குறள்+தாழிசை 8. (பொறாமை)

வாழ்வியற் குறட்டாழிசை.  8

பொறாமை.

பிறரின் உயர்வால் பெருமையுறும் மனம்
கறளெனும் பொறாமை அற்றது.

பொறாமை துறவாமை பெருங் கேடு
அறவே அதையழித்தல் மேம்பாடு.

வீழ்த்தும் பொறாமையால் சிறப்பழிவது எம்
வாழ்வமைச்சு எனும் அறம்.

ண்பற்ற மனதில் ஆற்றாமை, தாளாமை,
ஏற்காமை பொறாமை ஆகிறது.

ண்புடை மனம் பொறாமை தரும்
மைகளை அறிவால் வெல்கிறது.

பொறுமையெனும் அருமையான குளிர் சாரல்
பொறாமைத் தீயை அணைக்கும்.

தையோ எப்படியோ வெல்வதிலும் உனை
வதைக்கும் பொறாமையை வெல்!

மாறாத நட்பை மனதில் பேணினால்
பொறாமைப் புகை புகையாது.

பொறாமை மானம் வெட்கம், ரோசம்
பார்க்காது பல்லை இழிக்கும்.

ங்காரம், ஆவேச, அழுக்கு நெய்யில்
ஓங்காரமாய் எரிவது பொறாமை.

ங்கும் மனம், தாங்காத மனம்
வீங்கிச் சாய்ந்திடும் பொறாமையில்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2011.

In Anthimaali web site:-    http://anthimaalai.blogspot.com/2011/08/8.html

   

         
 

Advertisements

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. suganthiny
  ஜூலை 03, 2011 @ 06:07:54

  நல்ல முயற்சி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 03, 2011 @ 07:36:43

   சுகந்தினி! மிக்க நன்றி உமது கருத்திற்கும், வரவிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.
   பெண் பெயரில் ஆணா! ஏன் இந்த வேடம்? நேராக நிமிர்ந்து வரலாமே! நெருடுகிறது……….இப்படி எத்தனை பேர்?!!!!!

   மறுமொழி

 2. பிரபுவின்
  ஜூலை 03, 2011 @ 10:52:54

  “பொறாமை மானம் வெட்கம், ரோசம்
  பார்க்காது பல்லை இழிக்கும்”

  “ஏங்கும் மனம், தாங்காத மனம்
  வீங்கிச் சாய்ந்திடும் பொறாமையில்”

  நிதர்சனங்களை எழுதியுள்ளீர்கள்.நல்ல நற்சிந்தனைகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 04, 2011 @ 16:45:43

   பிரபு! மிக்க மகிழ்ச்சி, நன்றி உமது அன்பான வரவிற்கும், கருத்திற்கும் உருத்துடன் கருத்திடும் அன்பிற்கும் பண்பிற்கும் தலை வணங்குகிறேன். இறை ஆசி நிறைய கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. sempakam
  ஜூலை 04, 2011 @ 02:54:20

  பொறாமை மானம் வெட்கம், ரோசம்
  பார்க்காது பல்லை இழிக்கும்.

  ஆங்காரம், ஆவேச, அழுக்கு நெய்யில்
  ஓங்காரமாய் எரிவது பொறாமை.

  ஏங்கும் மனம், தாங்காத மனம்
  வீங்கிச் சாய்ந்திடும் பொறாமையில்.

  !!!!!!!!!!!!!!!ஆகா அற்புதமாய் சொல்லியிருந்தீங்க……….
  மனிதர்களில் நிரம்பி வழியும் ஆமையைப்பற்றி…
  சுப்பர்
  வழ்த்துக்கள்!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 05, 2011 @ 07:05:37

   மிக்க நன்றி அன்புறவே செம்பகம்!. வாழ்வியல் குறள் தலைப்பில் இது 8வது தலைப்பு. மற்றவைகளையும் நேரமிருக்கும் போது வாசிக்கலாம். உமது வரவு , கருத்து மகிழ்வுடைத்து. மீண்டும் வருக!. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. sempakam
  ஜூலை 04, 2011 @ 03:21:39

  அக்கா தமிழ்மணம்.தமிழ்10,தமிழிஸ்,தளங்களில் எனது பதிவை எப்படி இணைப்பதென சொல்ல முடியுமா.?
  நான் முயற்சித்தேன்.எனது பதிவுகள் அங்கே பதியப்படவில்லை……..

  மறுமொழி

 5. கவி அழகன் --
  ஜூலை 04, 2011 @ 09:46:57

  அருமை அருமை அருமை

  மறுமொழி

 6. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 06, 2011 @ 08:44:14

  வாழ்வியல் குறள் சமைத்து வள்ளுவரை நெருங்கி விட்டீர்கள்,மிக நன்று !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 06, 2011 @ 20:49:00

   அவரை நெருங்குவதற்கு ஆசை தான்.முயற்சிப்போம். உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மிகுந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: