13. அம்மம்மா! கொடுமை! ( பா மாலிகை (பெண்மை)

 

 

அம்மம்மா! கொடுமை!

 

டி தடுக்கும்! தூக்கி எடு!
பாலைக் கொடு! படுக்க வை!
பணிக்கிறான் மணவாளன் படு வேகமாக.
பத்து நிமிடமும் பாவைக்கு ஓய்வில்லை.

துமையெனும் பாவை குழந்தையுடன்
பணிகிறாளவன் அதிகாரக் கட்டளைக்கு.
பட்டப் படிப்பாம், நாகரீகக் கனவானாம்!
நசுக்ககிறானவள் சுயத்தை, அடிமையாக!

வெளிநாட்டு மொழி பயில விடாது
இழிவாக இடைவெளியற்ற கர்ப்பம்!
பழி இது!  ஒரு வகைச் சிறை!
துளியும் உதவியற்ற குழந்தை வளர்ப்பு!

ன்ன கொடுமையிது! நவ உலகில்!
இன்னும் மாக்களாகப் பல மனிதர்!
இதில் பெண் அடங்க வேணுமாம்!
இப்படி அடிமையாகவா! கொடுமை! கொடுமை!

ப்படியான கொடுமையாளனை ஒரு பெண்
எட்டிக்காயாகத் தானே ஒதுக்கித் தள்ளுவாள்!
வெட்டிடும் விவாகரத்து அதிசயமயல்ல! இவனை
கட்டியடிப்பதா! அன்றி அடித்துக் கட்டுவதா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-7-2011.

( ஐய்யோ! 3வது கர்ப்பமா! அந்த இளம் தம்பதி நிலை கண்டு துடித்த மனது எழுதியது இதை. இதைக் கொஞ்சம் கேட்கிறீர்களா என்று கணவருக்கு வாசித்துக் காட்டினேன். எனது முதல் விமர்சகர் அவர்தான். ”ஓ! அவனுக்கு முதல்மனைவியிடம் என்ன அனுபவம் கிடைத்ததோ!” என்றார். ” என்ன! பாதி வீடு, பிள்ளையோடு விவாகரத்து, பிள்ளைக்குப் பணத்துடன் அவ போய் விட்டா. இவன் குடித்துக் குடித்து நிறை வெறியோடு என்ன பண்ணினானோ! அவள் செய்ததற்கு இது பாவம் என்ன செய்யும்!” என்றேன் பதிலுக்கு நான். இது 2வது மனைவி. நடக்கும் ஒரு பிள்ளை, கையில், ஒன்று, வயிற்றில் ஒன்று. நிற்க முடியாது இவள் சோர்ந்து சோர்ந்து சாய்கிறாள். நான் திகைத்து விட்டேன். ”அவளைப் போல இவ போகக் கூடாது என்று ஓய்வின்றிக் கர்ப்பமாக்குகிறான் போல” என்றேன்.)

 

                     

 

Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பிரபுவின்
  ஜூலை 05, 2011 @ 04:55:19

  நிதர்சனங்களை சொல்லியுள்ளீர்கள்.ஆண்களின் மனதில் தோன்றும் ஒரு வித அச்சமே இவ்வாறு நடக்கத் தூண்டுகின்றது.பெண்கள் தமது கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணி நடக்கும் போது ஆணும் புரிந்து செயற்படுவான்.நான் எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை.எல்லா ஆண்களையும் சொல்லவில்லை.

  குழந்தை பெறுவதில் ஒரு இடைவெளி அவசியம் தேவை.ஆனால் அதிக குழந்தைகளை பெரும் பெற்றோரை வரவேற்க வேண்டும்.எமது இனம்(இலங்கைத் தமிழர்கள்) விரிவடைய இது அவசியம்.

  நல்ல படம்.எங்கே பெறுகின்றீர்கள் என்பது தெரியவில்லை?!மிகவும் சிறப்பான படம்.

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜூலை 05, 2011 @ 15:46:28

  நன்றி பிரபு உங்கள் கருத்திற்கு. உங்கள் பார்வையில் அது சரியே. புரிந்துணர்வோடு ஒருவரையொருவர் பேணி வாழுவது எவ்வளவு இன்பம். ஒருவரை நசுக்கி வாழ்வது வாழ்வே அல்ல. ஓ.கே இதை விட்டு உமது வரவிற்கும் மிக்க நன்றி இறை ஆசி கிட்டட்டும். மெயில் போட்டிருக்கிறேன்.

  மறுமொழி

 3. unmaivrumbi
  ஜூலை 06, 2011 @ 06:38:31

  good post sister!

  unmaivrumbi.
  Mumbai.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 06, 2011 @ 15:58:10

   இடையடையே நீங்கள் வருகிறீர்களே, கருத்திடுகிறீர்கனே அதற்கு மிகுந்த மகிழ்ச்சி சகோதரரே! நலமா? நினைப்பதுண்டு எங்கே காணோமே என்று. இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜூலை 06, 2011 @ 08:29:11

  நடைமுறை யதார்த்தங்களை சொல்லியுள்ளிர்கள் ஆனால் எல்லா ஆண்களையும் பெண்களையும் ஒட்டு மொத்தமாக இதில் சேர்க்க முடியாது வேதா,சில ஆண்கள் மனைவியரை தாயைப்போல நேசிக்கிறார்கள் அதேவேளை சில பெண்கள் கணவன்மார்களை உதாசீனம் செய்வதையும் நடைமுறையில் பார்த்திருக்கிறோம். எல்லோரும் வாழ்க்கையை ரசித்து மனித நேயத்துடன் வாழ்வோமாக !!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 06, 2011 @ 20:27:04

   நீங்கள் சொல்வது சரி நடா சிவா!எனது கணவரும் நல்லவர் தானே! இது அந்தப் பொல்லாதவன் தன் மனைவியை, அல்லது ஒரு வகை மனநோயாளன் தன் மனைவியை செய்வது கண்டு கொதித்தது. மனமொத்து புரிந்துணர்வுடன் வாழுங்கள் என்பது தானே வேண்டுகோள்.
   உங்கள் அன்பான வரவிற்கும், கருத்திற்கும் நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. SUJATHA
  ஜூலை 06, 2011 @ 10:37:25

  அடி பெண்ணே குதூகலமாய் குலத்தில் பிறந்த பெருமை போலாகுமா? தாய்மையில் நீ பெறும் சுகம், சுமை வாழ்வியலில்
  ஒரு போராட்டம். வாழ்ந்து காட்டு வழமைக்கு மாறாக சமுதாயத்தில் உன்னைப்பற்றி பேசுபவர்கள் குறை குற்றங்கள்
  ஆனால் நீ இல்லாத வாழ்க்கை வாழ்க்கையும் அல்ல. தொடரட்டும்
  ”வேதா” உங்கள் பணி !!!!!!!!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜூலை 06, 2011 @ 20:32:29

   அன்பின் சுஜாதா! உமது கருத்திற்கும், வரவிற்கும் நன்றி. எதை எழுத! உலகில் இப்படியும், இன்னும் பல புது விதமாகவும் நடக்கிறதே! நம்ப முடியாதவையும் நடக்கிறது. திருமணமே கேள்விக் குறியாகிறது. இது முடியாத விமரிசனம். நன்றி சுஜாதா! இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: